(Reading time: 27 - 54 minutes)

வன் கூறியதை கேட்ட ஈஸவரன், எனக்கும், அந்த மஹிந்தனுக்கு கவிக்கு கல்யாணம் ஏற்பாடு தெரிந்தால் நல்லபடி கல்யாணம் முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. எனவேதான் அவளுக்கு தனுசுடன் கல்யாணம் முடிந்து அமெரிக்கா செல்லும் வரை இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும். .நான் இதைப்பற்றி என் நண்பன் சீனிவாசனுடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார் ஈஸவரன்.

வீட்டில் தன்னுடைய கல்யாணத்தைப்பற்றி பேச்ச்சு நடப்பதைக்கூட உணரமுடியாமல் கவிழையா தனக்குள் குழம்பியபடி உடை கூட மாற்றத் தோன்றாமல் சோர்ந்து போய் படுத்து தூங்கிகொண்டிருந்தாள். பார்வதி திரும்பவும் காபி கலந்து கவிழையாவிற்கு அவள் ரூமிற்கு எடுத்து வந்தாள். மகள் உடைகூட மாற்றாமல் தூங்குவதைக் கண்டு, கவிழையா! எழுந்திரு, விளக்கு வைக்கும் நேரத்தில் தூங்குவது வீட்டிற்க்கு ஆகாது. இந்த காபியை குடித்துவிட்டு வா, அப்பா உன்னிடம் பேசணும் என்றார்கள்.

தன் அம்மா தன் முதுகில் கை வைத்து எழுப்பியதும் உறக்கம் கலைந்த கவி சோர்வுடன் எழுந்து, அம்மா, எனக்கு தலைவலிக்கிறது. இன்னும் கொஞ்சநேரம் தூங்குகிறேன் என்றவளை, பார்வதி , “இந்த காபியை குடி””””””.””””””'' தலைவலி போய்விடும். என்று எழுந்து அமர்ந்தவள் கையில் காபிடம்ப்ளரை கொடுத்துவிட்டுச் சென்றாள் .

முகம் கழுவி உடைமாற்றி கொஞ்சம் தெளிந்த மனநிலையுடன் தன் அப்பா அமர்ந்திருந்த சோபாவின் எதிரில் உட்கார்ந்தவள். “என்னிடம் எதோ பேசணும் என்று சொன்னதாக அம்மா சொன்னார்கள்” என்னவிஷயம் அப்பா என்று கேட்டவளிடம், எல்லாம் நல்ல விசயம்தான் என்றார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "விவேக் ஸ்ரீநிவாசன்" - இனிய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

என் நண்பன் சீனிவாசனின் பையனுக்கு உன்னை, முன்னமே பெண் கேட்டார்கள். உனக்கு ஞாபகம் இருக்கா? கவி, என்று கேட்டார் ஈஸ்வரன்.

அவள் அப்பா அவ்வாறு கேட்டதும் ,அதுதான் அப்பொழுதே, “எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் என்று கூறிவிட்டேனே!” ,நீங்களும் சரியென்று கூறி அவர்களிடம் “என் மகளுக்கு இப்பொழுது கல்யாணத்தில் இஷ்ட்டம் இல்லை என்று சொல்லிவிட்டீர்களே” அப்பா .மறுபடியும் எதற்கு அந்தப் பேச்சு என்று தட்டிக்களிக்கப் பார்த்தாள் கவிழையா.

அவள் கூறியதை கேட்ட ஈஸவரன் ,கவி அப்பொழுது நிலைமை வேறு ஆனால் இன்று நீ அந்த மஹிந்தன் பிடியில் இருந்து வெளியில் வர உனக்கு கல்யாணம் முடித்து அவனின் கண்காணாத இடத்தில் உன்னை அனுப்பினால் தான் இந்த அப்பாவால் நிம்மதியாக இருக்க முடியும் என்றார்.

அப்பா இப்பொழுது உங்கள் நண்பனின் மகனுக்கு நான் இருக்கும் சூழ்நிலை தெரிந்தால் கண்டிப்பாக என்னை கல்யாணம் செய்துகொள்ளும் என்னத்தை மாற்றிக்கொள்வார் என்றாள் .

அவள் அவ்வாறு கூறியதை கேட்ட ஈஸவரன் ,நான் எதையும் என் நண்பனிடமும் மாப்பிள்ளை தனுசிடமும் மறைக்கவில்லை ,அவர்களுக்கு இப்பொழுது உன்னைப்பற்றிய விவரங்கள் அத்தனையும் நான் சொல்லித்தான் திரும்ப கல்யாணப்பேச்சை நான் ஆரம்பித்தேன் .மாப்பிளைக்கு இப்பொழுதும் உன்னை கல்யாணம் செய்துகொள்ள சம்மதமாம் ,உன்னுடன் அவரே போனில் பேசி உன் சம்மதத்தை கேட்பதற்காக உன் மொபைல் நம்பரை கொடுத்துள்ளேன் .மாப்பிள்ளையிடம் நல்ல பதிலை சொல்லிவிடு கவி என்றார் .

ஈஸவரன் தன் மகளுடன் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தபடி வந்த பார்வதி கவிழையாவின் அருகில் அமர்ந்தார் .தன் மகளின் தலையை ஆதரவுடன் தடவிக்கொடுத்தவர், இதில் யோசிக்க என்ன இருக்கு கவி .உன் வாழ்க்கையை பிரச்சனைலிருந்து மீட்கவேண்டும் என்று அப்பா ஏற்பாடு செய்யும் இந்த கல்யாணம் நல்லபடி முடிந்து, நீ அமெரிக்கா சென்றுவிட்டாலாம். .உன் வாழ்க்கை நல்லபடியாக அமைந்துவிடும். அப்பாவிற்கும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பழையபடி நம் வீடு சந்தோசமாக மாறிவிடும். அதனால் மாப்பிள்ளைப் பையன் உன்னிடம் போன் செய்து பேசும் போது உனக்கு கல்யாணத்தில் சம்மதம் என்று கூறிவிடு ,சம்மதத்தைநீ கூறத்தான் வேண்டும் இது என் உத்தரவு என்று சற்று அழுத்தமாக கூறினாள் .

கவிழையா மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் தன் சுடிதாரினுள் பின் செய்து போட்டிருந்த மாங்கல்யத்தை அவள் கை அவளை அறியாமலே சுடிதாரின் மேற்புறமிருந்து பிடித்துப்பார்த்தது .

அவள் மனது அம்மா! எனக்கு ஏற்க்கனவே கல்யாணம் முடிந்து அதற்கு சாட்சிக் கையெழுத்தை என் அப்பவே போட்டிருக்கிறார். இப்பொழுது வேறு ஒருவனை எப்படி என்னால் மணக்க முடியும் .இப்பொழுது உள்ள என் அப்பாவின் உடல் நிலமையில் என்னால் இதை அவர்களிடம் சொல்லவும் முடியாது . அப்பாவிற்கு அவர் சாட்சிக்கையெழுத்துப் போட்ட விபரம் தெரிந்தால் உயிரையே விட்டு விடுவார் .அந்த தனுஷ் போன் செய்யும் போது விசயத்தைகூறி அவராகவே இந்தகல்யானம் வேண்டாம் என்று மறுத்தது போல் சொல்லச் சொல்லவேண்டும் என்று நினைத்தாள்.

என்ன கவி அம்மா சொல்வதற்கு எந்த பதிலும் சொல்லாமல் யோசனையுடன் இருக்கிறாய் .நீ உன் எம் டி மஹிந்தனை நினைத்து பயப்படுகிறாயா? அப்பா எப்படியாவது அவனுக்குத் தெரியாமல் உன் கல்யாணத்தை முடிக்கப்பார்க்கிறேன், கவி என்று கூறினார் .

அவர் பேசவும் தனக்குள் மூழ்கியிருந்த கவிழையா சரிப்பா என்று கூறிவிட்டு அம்மா எனக்குத் தலைவலிக்கிறது நான்போய் தூங்கப்போகிறேன் என்றாள் .

அவள் அவ்வாறு கூறியதும், கவி, வெறும் வயிறுடன் தூங்கக் கூடாது நான் போய் உனக்கு தோசை சுட்டு எடுத்துவருகிறேன் . அதுவரை உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிரு என்று சொல்லிவிட்டு அடுப்படிக்குச் சென்றாள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.