(Reading time: 27 - 54 minutes)

ஹிந்தனை கல்யாணம் செய்வதால் எனக்கு இரண்டு லாபம் ஒன்று அவனை பழிவாங்குவது, இரண்டு அவனின் மூலம் எனக்கு வரக்கூடிய பணம் செல்வாக்கு என்று கூறியவள் .இதை ஏன் உன்னிடம் சொல்கிறேன் என்றாள் எனக்கு நீ எப்பொழுதும் சப்போட்டாக இருந்தால் நான் எனக்கு கிடைக்கும் பணத்தை உன்னுடன் ஷேர் செய்தது உன்னுடன் ரிலேசன்ஷிப் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அஜய் .யூ நீஈட் மை கம்பேனியன்ஷிப் .என்று குலைந்து அவனுடன் நெருங்கி உட்கார்ந்து கேட்டாள் .

அவள் அவ்வாறு கேட்டதும் ,ஸ்யூர் டார்லிங். வித் மை ப்ளசர், என்று கூறியவன் ஐஸ்வர்யாவை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு டீல் ஓ கே என்று கூறினான் .

வீட்டிற்கு வந்த கவிழையாவைப் பார்த்த அவள் தந்தை ஈஸவரன் பார்வதி கவி வீட்டிற்கு வந்துவிட்டாள் அவளுக்கு குடிக்க சூடாக ஏதாவது கொண்டு வா! என அடுப்படியை நோக்கி குரல் கொடுத்தார் .

ஆனால் கவிழையாவிற்கு தன் முன் நடக்கும் எதையும் உணரும் நிலையில் அவள் இல்லை.அவளுக்கு மஹிந்தனுடன் இன்று ஆபீஸில் நடந்த தர்க்கமும் ,காரில் மஹிந்தனால் ஏற்பட்ட மனதின் தாக்கமும் ,கடைசியில் அவன் தன் கையில் பதித்த முத்தமும் அது ஏற்படுத்திய சிலிர்ப்பும் ,அந்த முத்தத்தை தான் ஏன் ஏற்றுக்கொண்டேன் என்று அவள் மேல் அவளுக்கே உண்டான கோபம் என கலவையான பல உணர்வுகளுடன் அதன் தாக்கத்தையும் தாங்க முடியாத கவிழையாவிற்கு சோர்வும் தன்னை திடப்படுத்திக் கொள்ள சற்று தனிமையும் ஓய்வும் தேவைப்பட்டது .

தன் மகள், ஏதோ குழப்பமாகவும், தான் அமர்ந்து இருப்பதைக்கூட உணரமுடியாத இயந்தரத்தனமாக நடவடிக்கையையும் கண்ட ஈஸவரன் மனதிற்குள் தான் எடுத்தமுடிவை உடனே செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அந்தநேரம் அவரின் செல்போன் ஒலி எழுப்புவதை பார்த்த ஈஸ்வரன், யார்? என்று பார்க்கவும், அதில் தன் நண்பன் சீனிவாசன் பெயரைக் கண்டதும் ஆர்வத்துடன் எடுத்து பேசினார் .தன் நண்பன் கூறிய செய்தி கேட்டவர் மனம் மிகவும் நிம்மதியடைந்தது .ஈஸவரன் தன் குரல் கரகரக்க தன் நண்பன் சீனிவாசனிடம், “உன் மகனுடனான என் கவியின் கல்யாணத்தை நல்லபடியாக முடித்துகொடுத்துவிடு சீனிவாசா” நான் ஜென்மத்துக்கும் உனக்கு கடமைப்பட்டவனாக நடந்துகொள்வேன், என்று கூறி பேசி முடித்தார் .

அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கு காபிடம்ளருடன் வந்த பார்வதி கவி வந்திருப்பதாக சொன்னீர்கள், காணும் அவளை, என்று கேட்டுவிட்டு, யார் கூட போனில் பேசினீர்கள்? என்றும் கேட்டாள் .

நம் பொண்ணு வந்தவள் எதிரில் நான் இருப்பதை கூட உணராமல் ஏதோ இயந்திரம் போல் அவள் ரூமிர்க்குச் சென்றுள்ளால், அவளின் இந்த நிலைமைக்குக் காரணமான அந்த மஹிந்தனிடம் இருந்து என் பொண்ணை காப்பாத்து கடவுளே! என்று வேண்டிக்கொண்டிருக்கும் போது என் நண்பன் சீனிவாசன் போன்செய்தான். அவன் தன் மகன், நம் கவிழையாவை கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதிப்பதாகவும், அதற்கு நம் கவியின் சம்மதத்தை அந்த மாப்பிளைப் பையனே போனில் நம்கவியை தொடர்புகொண்டு கேட்க்க நினைக்கிறாராம் . நம் கவியின் போன் நம்பரை என்னிடம் வாங்கி தன் மகனுக்கு கொடுப்பதற்காக போன் பண்ணினார். .

அவர் கூறியதை கேட்ட பார்வதி முதலில் அவர்கள் பெண் கேட்டபோதே நாம் சரியென்று கூறி, கவியை வேலைக்குப் போகாமல் செய்திருந்தால் இத்தனை கஷ்டமும் நடக்காமல் போகியிருக்கும். .என்ன செய்வது எல்லாம் விதிப்படிதான் நடக்கும் இனியாவது என் மகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக இந்த சம்மந்தம் முடியவேண்டும் என்றவள், என்னங்க ,அந்த மஹிந்தனுக்கு நம் மகளின் கல்யாண விஷயம் தெரிந்தால் ஏதேனும் பிரச்சனை கொடுப்பானோ? என கேட்டாள் .

அவள் அவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் ஸ்கூல் பேக்குடன் நுழைந்த கவிழையாவின் தம்பி வருண் என்னம்மா யார்? யாருக்கு பிரச்சனை கொடுப்பார்கள் .நீங்கள் நம் கவியக்காவின் எம் டீ மஹிந்தனை பற்றியா பேசுகிறீர்கள்? என்று சரியாக யூகம் பண்ணி கேட்டான்.

அவன் கேட்டதை யோசனையுடன் ஆராய்ந்தபடி இந்தா இந்த காபியை குடி உன் அக்காவிற்காக போட்டது. இப்பொழுது இதை நீ குடி. அவளுக்கு நான் வேறு கலந்து கொடுத்துக் கொள்கிறேன் . அது எப்படிடா? அந்த மஹிந்தனை பற்றித்தான் நாங்கள் பேசினோம்” என்று சொல்லிவிட்டாய், என்று கேட்டாள் பார்வதி .

இப்போதைக்கு நம்மளுடைய வீட்டில் பிரச்சனை என்று கூறினாள் , அது நம் அக்காவிற்கு அந்த மஹிந்தன் அளிக்கும் பிரச்சனை ஒன்று தான் உள்ளது . அதற்கு அடையாளமாக நம் வீட்டையே காவல் காப்பது போல “அந்த நாலு தடிமாடுகள் சுற்றிக்கொண்டு நம்மை கண்காணித்துக்கொண்டு இருக்கும் படி வைத்திருக்கும் அந்த மஹிந்தன் தான் காரணம்” என்று கூறியவன் தன் தாயிடம் வாங்கிய காப்பியை குடிக்கத் தொடங்கினான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.