(Reading time: 27 - 54 minutes)

ஸவரன் அசதியின் காரணமாக சற்று படுக்கச் சென்றுவிடவும் அக்காவின் அருகில் வந்து அமர்ந்த வருண், அக்கா உனக்கு இன்னும் எங்களுக்குச் சொல்லாமல் மறைத்க எதோ ஒன்று இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் .இப்பொழுது உள்ள அப்பாவின் உடல் நிலை காரணமாக நீ அதை மறைக்கலாம். எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல். உனக்கு எப்பொழுதும் ஆதரவாக நான் இருப்பேன் , என்று அவளின் சோர்ந்து போன முகத்தைப் பார்த்தவாறு கூறினான் .

கவிழையாவிற்கு தன் மனதில் உள்ள குழப்பத்தை தன் தம்பி அடையாளம் கண்டு கேட்டவுடன் மனம் நெகிழ்ந்துவிட்டது அவளால் அடக்க முடியாமல் அழுகை வெளிப்பட்டது உடனே தன் வாயை தன் கை கொண்டு மூடி சத்தம் வராமல் செய்தாள் .

வேகமாக பக்கத்தில் இருந்த ஜாடியில் இருந்த தண்ணீரை தன் அக்காவிற்கு டம்ளரில் ஊற்றி குடிக்குமாறு கொடுத்த வருண் அம்மா அக்காவிற்கு தோசை கொஞ்சம் நேரம் கழித்து கொண்டு வாருங்கள் எனக்கு பாடத்தில் சிறு சந்தேகம் இருக்கிறது ரூமில் போய் அக்கா எனக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறாள் என்று சத்தமாக கூறியவன் கவியை எழுந்து ரூமிற்கு வரும்படி கூறி கூட்டிச்சென்றான் .

தன் தம்பியிடம் மஹிந்தன் தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்றதை தவிர்த்து மற்ற விசயங்கள் அனைத்தையும் கூறிமுடித்தாள் கவிழையா.என்னுடைய அனுமதியில்லாமல் எனக்கேத் தெரியாமல் எனக்கு கல்யாணம் முடிந்துவிட்டதே! வருண். .அதுவும் நம் அப்பாவையும் , இவ்வீட்டை எங்கள் இருவர் [கவிழையா ,மஹிந்தன் ] பெயரிலும் கிரயம் செய்யும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பொழுது என் கல்யாணத்திற்கும் சாட்ச்சிக் கையெழுத்து போட்டு வாங்கியுள்ளார் .இனி எப்படி நான் இன்னொருவனுக்கு மனைவியாக முடியும் என்று கேட்டாள் கவிழையா .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வளர்மதியின் "நிழலாய் உன்னை தொடரும்..." - திகிலூட்டும் அமானுஷ்ய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

அவள் கூறிய அனைத்தையும் கேட்ட வருண் அதிர்ச்சியடைந்தான் . என்னக்கா சொல்கிறாய், "உன்னை ஏமாற்றி உனக்கே தெரியாமல் உன்னை கல்யாணம் முடித்து ரெஜிஸ்ட்டர் வேறு பண்ணிவிட்டானா?”””'' என்று அதிர்ந்தவன் .ஐஸ்வர்யாவுடனான மஹிந்தனின் கல்யானத்திற்குரிய அறிவிப்பையும் அதனைத்தொடர்ந்து இரு வீட்டாரின் கல்யாண ஏற்பாடுகள் பற்றி வரும் செய்திகளை தாங்கிவரும் பத்திரிகை பக்கத்தையும் நினைவில் கொண்டுவந்த வருண் ,அக்கா அவன் உண்னை உனக்கேத்தேரியாமல் கல்யாணம் செய்தது எப்படி ஒப்புக்கொள்ள முடியும் , அவனுடன் உனக்கு நடந்தது எல்லாம் கல்யாணமே கிடையாது,என்றான் .

அவனைப்போன்ற பணக்காரர்களுக்கு நம்மைப்போன்ற சாதாரன மனிதர்களின் வாழ்க்கை விளையாட்டாக போய்விட்டது .

நீ இப்பொ, அப்பா உனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொள். மஹிந்தனின் கண் காணாத இடத்திற்கு போய் உன் வாழ்க்கயைத் துவங்கு என்றான் .

அ     வன் அவ்வாறு கூறியதும், "என்னால் எனக்கு கல்யாணம் ஆனதை மறைத்து இன்னொருவனை கல்யாணம் செய்துகொள்ள முடியாது”'' .இதுவரை என்னுடைய கேரக்டரை தவறாக ஒருவர் கூறும் படி நான் நடந்து கொண்டதில்லை .எனக்கு விருப்பம் இருந்து முடிந்ததோ? இல்லை விருப்பம் இலாமல் கல்யாணம் முடிந்ததோ? தெரியாது . என் கழுத்தில் ஏற வேண்டிய தாலி, ஏற்க்கனவே ஏறி முடிந்து விட்டது. இனிமேல் வேறு ஒருவன் என் கழுத்தில் தாலிகட்ட நான் அனுமதிக்க மாட்டேன். நாம் மஹிந்தனுடன் வாழ்ந்தாலும் சரி, வாழாவிட்டாலும் சரி ,என் வாழ்க்கையில் எனக்கு கணவன் அந்த மஹிந்தன் மட்டும் தான் என்றாள் .

தன் அக்கா அவ்வாறு கூறவும் வருணுக்கு கோபம் வந்தது நீ பாட்டுக்கு அவன் தாலி கட்டியதால் அவன் தான் எனக்குப் புருஷன் என்று கூறிக்கொண்டு இரு, அவன் இன்னொருத்திக்கும் தாலி கட்டி அவளுடனும் உன்னுடனும் சேர்த்து ஒரே நேரத்தில் குடும்பம் நடத்த நினைத்தாள் நீ என்ன செய்வாய்? என்று கோபமாக தன் அக்கா எடுத்த முடிவு பிடிக்காமல் கூறினான் .

அவன் அவ்வாறு கூறவும் , இன்னொருத்தியுடன் என் வாழ்க்கையை பங்கு போட்டு வாழும் அளவிற்கு நான் இறங்கி ஒன்றும் போக மாட்டேன். அப்படி அந்த மஹிந்தன் வேறு ஒருத்தியின் கழுத்தில் தாலி கட்டி குடும்பம் நடத்தினால் நான் அவனை விட்டு விலகி போய் தனியாக வாழுவேனே தவிர, வாழ்க்கையை அவனிடம் பிச்சை கேட்டவும் மாட்டேன், "வேறு ஒருவனையும் என்கழுத்தில் தாலிகட்ட அனுமதிக்கவும் மாட்டேன்'' என்று கூறியவள், மடங்கி உட்கார்ந்து அழுக ஆரம்பித்தாள் .

இப்பொழுது இருக்கும் தன் அக்காவின் மனநிலையில் எதுவும் அவளுடன் பேசமுடியாது என்பதை உணர்ந்த வருண், தன் அக்காவின் தலையை ஆதரவாக தடவி விட்டு அழுகாதே, எல்லாம் நல்ல படியாக முடியும் என்று வார்த்தைகளில் ஆறுதல் படுத்த முயன்றான் ,

. அன்று காலையில் கண்வழிக்கும் போது கவிழையாவிற்கு தலை பாரமாக இருந்தது. என்ன கவி, இன்னும் எழுந்திரிக்கவிலையா? என்று கேட்டபடி வந்த பார்வதி ,கவிழையாவின் சிவந்த உப்பிய முகம் பார்த்து என்னமா? முகம் எல்லாம் சிவந்துகிடக்குது என்று கூறி நெற்றியில் கைவைத்துப் பார்த்தவள், நல்ல காய்ச்சல் அடிப்பதை கண்டு, உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது இன்றைக்கு நீ ஆபீஸ் போகவேண்டாம் லீவ் சொல்லிவிடு .முகம் கழுவி வா, சாப்பிட்டதும் இரண்டுபேரும் ஆஸ்பிடல் போய் வரலாம் . நான் தம்பிக்கு சாப்பாடு எடுத்துவைத்துவிட்டு கிளம்பி வருகிறேன் என்றவள், கவலையுடன் அடுப்படி சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.