(Reading time: 27 - 54 minutes)

ற்றவர்களின் முன் அவ்வாறு கேட்கவும் சுபத்ராவும் இல்லை.. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை நீ போய் மஹிந்தனுடன் பேசிக்கொண்டிரு ஐஸ்வர்யா என்று கூறிவிட்டாள் .

ஆனால் தற்போது மஹிந்தன் அழைப்பதை பார்த்தவள் தயக்கத்துடன் எடுத்து பேசினாள்.

தன் அம்மா போனை நேரம் கழித்து எடுத்த கோபத்தையும் சேர்த்து தன் அம்மாவிடம் மாம் இன்னும் ஒரு நிமிடத்தில் இந்த ஐஸ்வர்யா என் ரூமைவிட்டு வெளியில் போகணும் இல்லாவிட்டால் நான் செய்யப்போகும் செயலுக்கு எல்லோரும் வருத்தப்படும்படி ஆகிவிடும் என்று கர்ஜித்துவிட்டு போனை வைத்தான் .

அவள் அம்மா மாடிக்கு வரும் வரை கூட பொறுமை இல்லாதவாறு அவள் அவனின் பெட்டில் படுத்து இருந்த காட்ச்சியை காண பிடிக்காமல், அவன் கையில் கிடைத்த கண்ணாடி பூச்சாடியை தூக்கிப்போட போகும் போது அறைக்குள் வந்த சுபத்திரா, அவனின் கையில் உள்ள பூச்சாடியை கையில் வாங்கியவள் ஐஸ்வர்யாவை பார்த்தாள் .

அவள் தங்கள் இருவரையும் வேடிக்கைபார்த்தபடி இன்னும் தன்னை சரிபடுத்தாதவாறு படுத்திருந்தவிதத்தை பார்த்தவள் புருவங்கள் யோசனையுடன் சுருங்கியது.

ஐஸ்வர்யாவிடம் வாமா என்னுடன். உனக்கு நான், கல்யாணத்துக்கு போட வாங்கிய டைமன்ட் நெக்லஸ் காட்டுகிறேன் ,என்று கூறினாள் சுபத்ரா

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

அவள் கூறிய டைமன்ட் நெக்லஸ் என்ற வார்த்தை ஐஸ்வர்யாவை மறுப்பு இல்லாமல் எழுந்து அவள் பின்னால் போக வைத்தது .

அவள் அறையைவிட்டுப் போன பின்பும் மஹிந்தனுக்கு ஆத்திரம் போகவில்லை இந்த ஐஸ்வர்யாவை என்னசெய்தால் அடங்குவாள் என்று யோசிக்க ஆரம்பித்தான் . பின் ஒர் முடிவுடன் அவன் குளித்து உடைமாற்றி கீழே வந்தான் .

அங்கு அனைவரும் கல்யாணத்திர்க்கான ஏற்பாடுகள் பற்றி தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருந்தனர் .மஹிந்தனின் மனம் அதில் கலந்துகொள்ளவும் முடியாமல் அதே நேரம் தவிர்க்கவும் முடியாமல் அல்லாடிக்கொண்டு இருந்தது. அப்பொழுது கதிரிடமிருந்து தான் ரெசார்டிற்கு போக கிளம்பிவிட்டதாகவும் தன்னை வந்து பிக்கப் செய்துகொள்ளும் படி மெசேஜ் வந்தது .

ஓர் அரை மணி நேரத்தில் தான் அங்கு வருவதாக பதில் சென்ட் பண்ணியவன் தனக்கு முக்கியவேலை இருப்பதாக கூறி வெளியில் கிளம்புவதாக கூறியவன் அனைவரிடமும் பொதுவாக பை சொல்லிவிட்டு வெளியில் சென்றான் அவனின் பின்னால் ஐஸ்வர்யாவும் வந்தாள் ,

மஹிந்தன் காரில் ஏற கதவைத்திறந்ததும் அவன் பின்னால் வந்தவள் மஹிந்தனின் தோள் தொட்டு ஒதுக்கி திறந்திருந்த காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் .

அங்கு தன் வீட்டின் வேலையாட்கள் முன்னும் உள்ளிருந்த வீட்டின் பெரியவர்கள் முன்னும் தனக்கு ஐஸ்வர்யாவின் மேல் விருப்பமின்மையை நாகரிகமில்லாமல் வெளிக்காட்டிவிடுவோமோ என் பயந்தே அவன் அவசரமாக வெளியில் கிளம்பினான் .

இந்நிலையில் அவள் தன் அனுமதியில்லாமல் காரில் ஏறியவுடன் கோபத்துடன் காரில் ஏறியவன் டிரைவரை போகசொல்லி சைகை செய்தவன், கதிருக்கு மெசேஜ் அனுப்பினான்.

ஐஸ்வர்யா அவனுடன் பேச முயன்றதும் வாயில் விரலைவைத்து பேசாதே என்று கடுமையாக் கூறியவன் நான் ஏற்கனவே உன்னிடம் கூறியிருக்கிறேன் என்னுடன் கைகோர்த்து வெளியில் சுற்றவேண்டும் என்ற நினைப்பு இருந்தால் அதை மறந்துவிடு, இல்லை அப்படித்தான் நான்வருவேன் என்று அடம் பிடித்தால் கல்யாணத்தை இப்பொழுது கூட என்னால் நிப்பாட்ட முடியும் என்று கூறினான் .

அவன் கூறியதைக்கேட்ட ஐஸ்வர்யாவிற்கு உள்ளம் கொதித்தது அவளுக்கு இப்பொழுது அவனுடைய அத்தனை சொத்தையும் அவனின் மனைவி என்ற பெயரில் ஆளும் ஆசை தலைவிரித்து ஆடியது .எனவே அவனை தான் பெண் என்ற அழகால் வசியப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லவும் முடிவெடுத்திருந்தாள் ஆனால் அவனின் புறக்கணிப்பு அவளை மஹிந்தனின் மேல் வன்மத்தை வளர்த்தது .

அவன் கார் ஆள் இல்லாத இடத்தில் நின்ற காரின் அருகில் சென்றதும், டிரைவர் காரை நிப்பாட்டு, என்று சொன்னவன் ஐஸ்வர்யாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டுவிடச் சொல்லிவிட்டு இறங்கிபோய் நின்றிருந்த காரில் மாறி ஏறிக்கொண்டான் .

அவன் காரைவிட்டு இறங்கும் போதே கூட இறங்கிய ஐஸ்வர்யா அவன் மற்றொரு காரில் ஏறவும் தானும் அக்காரில் ஏற பார்த்தாள் ஆனால் அதற்குள் காரின் கதவை மூடியவன் அவளின் இச்செயலில் திரும்பவும் ஆத்திரம் கொண்டவன் இவள் அடங்க மாட்டாள் என்று கூறியவன், தான் முதலில் வந்த காரின் டிரைவரை மொபைலில் கூப்பிட்டு, காரில் ஐஸ்வர்யாவை ஏற்றாமல் அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தன் வீட்டில் போய் காரை நிப்பாட்டச் சொல்லி உத்தரவு கொடுத்தான் .

ஐஸ்வர்யா மஹிந்தன் போன காரின் திசையை பார்த்து டேய்! என்னை விட்டுட்டா போகிறாய்? ‘இருக்கு உனக்கு’ என்று கோபத்துடன் திரும்பி தான் வந்த காரின் அருகில் சென்று காரின் கதவைத்திறக்க கைநீட்டும் போது அந்தக் காரும் அவளைவிட்டுப் புறப்பட்டடு போனது .அவள் ஏய்! ஏய்! நான் இன்னும் ஏறவில்லை என்று பின்னால் ஓடுவதை அந்த டிரைவர் கண்டுகொள்ளாமல் காரை ஓட்டிக்கொண்டு போய்விட்டான் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.