ஆஸ்பிடலில் சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்குமாறு கூறி மாத்திரைகளை எழுதிகொடுத்தார் டாக்டர். வெளியில் வந்து கவிழையாவை உட்கார்ந்திருக்குமாறு கூறி பார்வதி மெடிக்கலில் மாத்திரை வாங்கச் சென்ற சமயம் அங்கு ஐஸ்வர்யா வந்தாள் .
இத்தனை நாள் அவள் கவிழையாவை பார்க்கவேண்டும் என்று முயன்றும் எங்கு கவிழையா சென்றாலும் அவளின் நிழல்போல் சென்ற மஹிந்தனின் ஆட்கள் கவிழையாவை நெருங்கவிட்டதில்லை .
இன்று ஐஸ்வர்யா ஆஸ்பிட்டலில் தான் கர்ப்பமாக உள்ளோமா? என்பதை கண்டறிய டாக்டரை பார்க்க வந்திருந்தாள் .மேலும் டாக்டர் அவளுடைய டெஸ்ட் ரிசல்டுக்கு காத்திருக்கச் சொன்னதால் வெளியே உட்கார்ந்திருந்தாள் .இவ்விசயம் வீட்டிற்கு யாருக்கும் தெரியகூடாது என்பதற்காக தனியாக வந்திருந்தாள் அந்தநேரத்தில்தான் கவிழையா அங்கு வந்திருப்பதைப் பார்த்தாள் .
அவளைப் பார்த்ததும் ஐஸ்வர்யாவிற்கு அவளின் சோர்ந்த தோற்றத்திலும் இயற்கையான அழகில் பொறாமை ஏற்பட்டது .மேலும், தன்னை மஹிந்தன் இவளால் தான் உதாசீனப் படுத்துகிறான் என்ற ஆத்திரம் உருவானது .எனவே கவிழையா அவளாகவே மஹிந்தனின் வாழ்விலிருந்து ஒதுங்கிச்செல்லுமாறு செய்ய நினைத்தவள் வன்மத்துடன் கவிழையா இருந்த இடத்திற்குச்சென்றாள்.
தன் அருகில் இருந்த இருக்கையில் யாரோ அமர்வதை உணர்ந்தவள் அம்மாதான் வந்துவிட்டார்கள் என்று நினைத்து போகலாம் அம்மா என்று பார்த்தவள் தன் அருகில் முகத்தில் பயத்துடன் அமர்ந்துகொண்டு தன்னிடம் பேசத் தயக்கத்துடன் இருப்பது போன்ற பாவத்துடன் அமர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த ஐஸ்வர்யாவைப் பார்த்து ஆச்சரியத்துடன் நீங்க இங்க எதற்கு வந்தீர்கள் உங்களுக்கும் காய்ச்சலா? ஐஸ்வர்யா, என்று நட்புடன் பேசினாள் கவிழையா .
அவள் அவ்வாறு கூறியதும், ஐஸ்வர்யா கவிழையாவிடம் உங்களுக்கு காய்ச்சலா? யார்கூட வந்திருக்கிறீர்கள்? பார்க்க ரொம்ப சோர்வாக தெரிகிறீர்கள், காய்ச்சலுடன் ஏன் தனியாக வந்திருக்கிறீர்கள்? என்று அக்கறையுடன் பேசுவது போல் கேட்டாள் .
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அதற்கு கவிழையா நான் தனியாக வரவில்லை அம்மா தான் கூப்பிட்டு வந்தார்கள் என்னை இங்கு உட்காரச் சொல்லிவிட்டு மெடிக்கலில் மாத்திரை வாங்கப் போயிருக்கிறார்கள், சரி நீங்கள் யார் கூட வந்திருக்கிறீர்கள், உங்களுக்கும் காய்ச்சலா? என்று மறுபடியும் கேட்டாள் கவிழையா
அவள் அவ்வாறு கேட்டதும், இல்லை! எனக்கு காய்ச்சல் எதுவும் இல்லை. ஆனால் நான் தனியாக எனக்கு செக்கப்புக்கு வந்துள்ளேன் எதற்கு இந்த செக்கப் என்று என்னுடன் வந்தாள் நீங்களே தெரிந்துகொள்வீர்கள் , இப்பொழுது ரிசல்டுக்காக காத்திருக்கிறேன் ,ஆனால் தனியாக ரிசல்டின் முடிவை டாக்டரிடம் போய் கேட்க்க கொஞ்சம் பயமாகவும் படபடப்பாகவும் இருந்தது உங்களைப் பார்த்தவுடன் எனக்கு துணைக்கு கடவுளே உங்களை அனுப்பியுள்ளது போல் இருக்கிறது .எனவே என்னுடன் டாக்டரையப் பார்க்க உங்களாள் துணைக்கு வரமுடியுமா? கவிழையா என்று கேட்டாள் .
ஐஸ்வர்யா கூறியதை கேட்ட கவிழையா, 'கண்டிப்பாக வருகிறேன் ஐஸ்வர்யா'', என்று கூறும் போதே ஐஸ்வர்யாவை டாக்டரை பார்பதற்கான முறை வந்துவிட்டதாக கூப்பிட்டார்கள் .
கவிழையாவுடன் கன்சல்டிங் அறைக்குள் வந்த ஐஸ்வர்யாவை பார்த்து வாங்க ஐஸ்வர்யா உங்கள் ரிப்போர்ட் பாசிடிவ் .உங்கள் வயிற்றில் இப்பொழுது 13 வார குழந்தை உள்ளது .நீங்களும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? என்று அடுத்த செக்கப்புக்கு வரும் போது ஸ்கேன் பார்த்துவிடலாம். இப்பொழுது உங்களுக்குத் தேவையான சத்தான மருந்து மாத்திரைகளை எழுதிகொடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு சென்றாள் டாக்டர் .
கவிழையாவிற்கு டாக்டர் கூறிய ஐஸ்வர்யாவின் வயிற்றில் குழந்தை உள்ளது என்று செய்தியை கேட்டதும் அதிர்ந்து! ஐஸ்வர்யாவைப் பார்த்தாள் . ஐஸ்வர்யாவும் கவிழையாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே டாக்டர் கூறிய செய்தியை கேட்டு முகத்தில் மலர்ச்சியாக வைத்திருப்பது போன்ற பாவனையை காட்டி, அதன் பின் கவிழையா அங்கு இருப்பதை பொருட்படுத்தாமல், டாக்டர் கூறுவதை கவனமாக் கேட்வாறு இருப்பதை பார்த்த கவிழையாவிற்கு மனதில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்கெல்லாம் ஐஸ்வர்யா தான் பதில்தரவேண்டும் என்ற எண்ணத்தில் படபடப்புடன் அமர்ந்திருந்தாள்.
தொடரும்
{kunena_discuss:1081}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.