(Reading time: 30 - 59 minutes)

10. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

Pemp

டாக்டரிடம் பேசிவிட்டு வெளியே வந்ததும் ஐஸ்வர்யா கவிழையாவிடம் நான் மஹிந்தனின் குழந்தையை என் வயிற்றில் சுமப்பதை அவர் கேட்டால் எவ்வளவு சந்தோசப்படுவார் தெரியுமா? கவிழையா.

ஆனால் கல்யாணத்திற்கு முன்னாள் என் கர்பத்தை மற்றவர்கள் அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை ஏனெனில் மீடியாவில் எங்கள் கல்யாணத்தை பற்றிய விமர்சனத்தை கடைபரப்புவதை விட்டுவிட்டு எங்களின் அந்தரங்கத்தையும் பரப்பி காசாக்குவதை நான் விரும்பவில்லை. மேலும், அடுத்தமாதம் நிகழும் எங்கள் கல்யாணத்தின் போது இதை வைத்து எங்களின் கல்யாணத்தின் சுவாரஸ்யத்தை குறைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை என்று கூறி, ‘ஒவ்வொரு விரும்பவில்லைக்கும்’, கவிழையாவின் சோர்ந்து போகும் முகத்தோற்றத்தைக் கண்டு உள்ளுக்குள் சந்தோசப்பட்டாள்.

கவிழையாவிற்கு எப்போது அந்த இடத்தைவிட்டு போவோம் என்று இருந்தது. அவளின் சோர்ந்துபோன நடையை பார்த்து வேகமாக வந்த கதிர் கவிழையாவுடன் வரும் ஐஸ்வர்யாவை பார்த்து இவளை எப்படி கவனிக்காமல் விட்டோம், என்று யோசனையுடன் கவிழையா மேடம் உங்களை ரிசப்ஷனில் காணோம் என்று உங்கள் அம்மா வெளியில் வந்து தேடினார்கள் அதனால்தான் நான் உள்ளே தான் நீங்கள் இருப்பீர்கள் என்று நினைத்து தேடிவந்தேன் என்று கூறும் போது ஐஸ்வர்யாவைப் பார்த்து முறைத்துக்கொண்டே நீங்கள் எதற்கு இங்க வந்தீர்கள் ஐஸ்வர்யா? என்று கேட்டான்.

ஐஸ்வர்யாவிற்கு கதிரைப் பார்த்ததும் உதறல் எடுக்க ஆரம்பித்தது ,கவிழையா "தான் ஏன் ஆஸ்பிடல் வந்திருக்கிறோம்", என்று கூறிவிடுவாளோ? என்று பயந்து ,இல்ல வந்தேன் என்று வேகமாக கூறியவள். கவிழையாவிடம், “எதுவும் கூறாதே'' என்று லோ வாய்சில் கூறிவிட்டு, அப்போ நான் வருகிறேன் கவி என்று கூறிவிட்டு விறு விறு என்று வெளியேறினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவளின் அவசர ஓட்டத்திலேயே எதுவோ விஷயம் இருக்கிறது என்பதை யூகித்த கதிர் கவிழையாவை அவள் அம்மா இருந்த இடத்திற்கு கூட்டிச் சென்றவன் இருவரையும் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு அவன் திரும்ப நேராக அந்த மருத்துவமனைக்கே வந்தான். ரிசப்ஷனில் வந்து கொஞ்ச நேரம் முன் வந்த ஐஸ்வர்யா எதற்கு யாரைபார்க்க ஆஸ்பிட்டல் வந்தாள் என்பதை விசாரித்தான்.

கேஸ்சீட்டை பார்த்து செக்செய்து சொல்லும் படி கேட்டான்.முதலில் கூற மறுத்த செவிலியர், தொடர்ந்து அவன் பணத்தால் விசாரித்ததும், ஐஸ்வர்யா கர்ப்பாமாக உள்ளதை கன்பார்ம் செய்வதற்காக வந்தாள் என்றும் பரிசோதனையின் முடிவில் மூன்று மாதம் குழந்தை அவள் வயிற்றில் உள்ளது, உறுதியானதையும் கூறினர்.

யாருமற்ற அந்த கடற்கரையில் அமைந்திருந்த அந்தவீட்டில் ஒவ்வொரு அங்கமும் அழகால் மிளிர்ந்தது அவ்வீட்டை சுற்றி கோட்டைச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அவ்வீட்டின் பக்கவாட்டில் வானின் நிறத்தை பிரதிபலித்து கொண்டிருந்த நீச்சல்குளம் அமைந்திருந்தது வீட்டின் வாசலில் கண்காணிப்பு நிழற்குடையில் அடியில் காவளாளி ஒருவன் அமர்ந்திருந்தான்.வாசலிலிருந்து அவ்வீட்டின் முன்வரை கார்செல்ல ரோடு போடப்பட்டிருந்தது அந்த ரோட்டின் இருபுறமும் அழகிய குரோட்டன்ஸ் மற்றும் சிலைகள் கொண்டு அழகாக அவ்வீட்டின் சூழலை காட்டிக் கொண்டிருந்தது.

அவ்வீட்டின் இன்டீரியர் டெக்கரேட்டிற்கு ஏற்ற சில சீனரிஸ்கள் மற்றும் வீட்டு அழங்காரப் பொருட்களை அதற்குரிய இடத்தில் வைப்பதர்க்கான பணிகளை வேலையாட்கள் செய்துகொண்டிருந்தனர்.

அவ்வீட்டின் பின்புறம் அமைந்திருந்த இளைப்பாறுவதர்கென்று அமைக்கப் பட்டிருந்த மேசையுடன் கூடிய மூங்கில் குஷன் சேரில் எதிரெதிரில் அமர்ந்திருந்தனர் கதிரும் மகிந்தனும்.

மஹிந்தன் கதிரிடம் டேய் வீடு எப்படி இருக்கிறது, ஒன்றுமே சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம், என்று கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டதும் கதிர் கோபத்துடன் நான் எவ்வளவு சீரியசான விசயத்தைச் சொல்லியிருக்கிறேன்.நீ என்னடா என்றால் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் வீட்டைப்பற்றி கேட்டுக்கொண்டு இருக்கிறாய் என்றான் கதிர்.

எவளையோ பற்றி நாம் ஏன் பேசவேண்டும். அந்த ஐஸ்வர்யாவை நான் கல்யாணம் செய்யகூடாது என்று ஏற்க்கனவே முடிவெடுத்து விட்டேன்.அதனால் இந்த கல்யாணம் நிற்க அவள்தான் காரணமாக இருக்கவேண்டும் என்று நான் முடிவெடுத்திருந்தேன். எனவே அவளது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன்.

அன்று சோழாஹோட்டலில் இருந்து அவள் போனபோது எனக்கு கிடைத்த தகவலின்படி அன்று இரவு அவள் அந்த அஜயுடன் தான் தங்கியிருந்தாள், என்று தெரிந்ததோ, அன்றே அவளை நான் என் வாழ்கையிலிருந்து விளக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆனால் எஸ்.வி.எம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அவளை வைத்தே திரும்ப என் கைக்கு வர வைக்கவேண்டும் என்பதற்காக நான் கொக்குபோல காத்துக்கொண்டு இருந்தேன். இப்பொழுது லட்டுபோல சான்சை எனக்குக் கொடுத்திருக்கிறாள் அந்த ஐஸ்வர்யா, நான் அதை மிஸ் பண்ணமாட்டேன்.சோ, அந்த ஐஸ்வர்யா சேப்டர் முடிந்துவிட்டது. கதிர் நீ இப்பொழுது என் ழையாவிற்காக நான் வாங்கியிருக்கும் இந்த வீட்டை பார்த்து பிடிச்சிருக்கா என்று சொல் என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.