(Reading time: 30 - 59 minutes)

வன் அவ்வாறு கூறியதும் எப்பவும் போல் கதிருக்கு தன் நண்பனின் சாமர்த்தியத்தை நினைத்து அப்பா, சான்சே இல்லடா! உன்னைப்போல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உன் எதிராளியை வேறு யாராலும் அடிக்க முடியாதுடா.

ஆனால் அந்த ஐஸ்வர்யா ஆஸ்பிடலில் கவிழையாவிடம் ஏதோசொல்லி உனக்கு ஆப்புவைத்துவிட்டுத்தான் போயிருப்பாள்.

ஏற்கனவே கவிழையாவிற்கு உன் மேல் ஏகப்பட்ட கடுப்பு இருக்கு இந்தநிலையில் ஐஸ்வர்யா கவிழையாவின் மூலம் உனக்கு என்ன ஆப்பு கொடுக்கப் போறாளோ, என்றான் கதிர்

அவன் அவ்வாறு கூறியதும் கொஞ்சம் சீரியசான மனநிலைக்கு வந்த மஹிந்தன் கதிர் இப்பொழுது ழையாவிற்கு காய்ச்சல் எல்லாம் சரியாகிவிட்டதா? என்று கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டதும், மஹி ,நான் காரில் அவர்கள் வீட்டில் இறக்கிவிடும் முன் டாக்டர் என்ன சொன்னார்கள் என்று கேட்டதற்கு, கவியின் அம்மா, என்னை குத்தவா? வெட்டவா? என்று பார்த்தார்கள் என்றான். கதிர் ஏன் உன்னை அப்படி பார்த்தார்கள்? என்று மஹிந்தன் கேட்டதற்கு கதிர் சொன்னான்

பிறகு உன்னைப்போன்ற வில்லன் நண்பனை நான் அவர்களிடம், என் நண்பன் ஹீரோ என்றும், அவர்கள் மகளை பற்றிய கவலையை இனி நீ பார்த்துக்கொள்வாய் என்றும், காரில் தான் கவி மேடத்தை கூட்டிப்போக முடியும். இனி, கவி உன் பொறுப்பு என்றும் கூறினேன் என்று சொன்னதும், இதோ பாரடா! என் மாமியாரிடம் என்னவெல்லாம் பேசியிருக்க, எப்பொழுது இப்படி பேசின என்று கேட்டான் மஹிந்தன்.

அதை ஏன் கேட்கிற, காலங்காத்தால பத்து மணிக்கு உன் டிரைவர் எனக்கு போன் செய்து இன்னும் கவிழையா மேடம் கிளம்பி வாசலுக்கு வரவில்லை எப்பொழுதுமே எட்டரை மணியில் இருந்து எட்டேமுக்கால் மணிக்குள் கிளம்பி வந்துவிடுவார்கள் நான் இன்று பத்து மணிவரை அவர்கள் வீட்டின் வாசலில் நிற்கிறேன். அவர்கள் இன்னும் கிளம்பி வாசலுக்கு வரவில்லை. இப்பொழுது என்ன செய்ய? ,என்று கேட்டான் என்றான் கதிர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

டேய் காலையில் பத்து மணி என்பது உனக்கு காலங்க்கார்த்தாலேயா? என்று கேட்ட மஹிந்தனைப் பார்த்து ,ஏண்டா நீ என்னை நேற்று வீட்டிடுக்கு அனுப்பியதே காலை ஆறு மணி இந்த லட்சனத்தில் காலை பத்துமணி என்பது எனக்கு காலங்கார்த்தாலே இல்லாமல் எப்படி இருக்கும்.

உன் டிரைவர் அழாத குறையாக என்னை கூப்பிட்டதும் பாவமே என்று அங்கு போனால் உன் மாமியார் அந்த டிரைவரை வாங்கு வாங்கு என்று வசவால் குளுப்பாட்டிக்கொண்டு இருந்தார்.நானே முதலில் எப்படி பேசுவது என்று தயக்கத்துடன் தான் இருந்தேன்.ஆனால் கவியின் அம்மாவிடம் அந்த டிரைவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் எங்கே அவர்களை ஆட்டேவில் போக விட்டுவிடுவானோ என்று சந்தேகப்பட்டு அங்கு போனேன். அங்கு போனால், உன் மாமியார் தன் வாசலில் நின்று கொண்டு என் மகளை கவனித்துக்கொள்ள எங்களுக்குத் தெரியாதா? வீட்டு வாசலில் வந்து காரை நிப்பாட்டிக்கொண்டு எங்கு போனாலும் உங்கள் காரில் தான் போக வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டு எங்கள் பிரைவசிக்கு குறுக்கே வந்து நிற்க உங்கள் எம் டி க்கு கூச்சமாக இல்லையா? என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

நான் தான் அங்கு போய் எங்கள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் மட்டும் கவிழையா மேடம் இல்லை, பாதுகாக்கப்படக்கூடிய பணிகளையும் செய்வதால் எங்கள் எதிரிகளால் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிட சந்தர்ப்பம் இருகிறது. நீங்கள் மறுத்தாலும் எங்கள் எம்.டி க்கு கவிழையா மேடத்தின் உதவி அவர்கள் மேற்க்ககொண்டுள்ள வேலை முடிக்கும் வரை வேண்டும்.மேலும் அதை பற்றிய ஆபிஸ் விவகாரத்தை மேடத்திடமே கேட்டுக் கொள்ளுங்களேன். ஆனால் இப்பொழுது கம்பெனி காரில் தான் அவர்கள் போக வேண்டும் என்று அழுத்தமாக கூறினேன்.நான் அங்கு நின்று பேசுவதை பார்த்த நம் ஆட்கள் இருவர் விரைப்புடன் என் பின்னால் வந்து நின்றனர்.அப்பொழுது அங்கு கிளம்பி வெளியே சோர்வுடன் வந்த கவிமேடமும், அவர்களின் அம்மாவும் எங்களை வில்லனை போல் பார்த்தனர். சோ, அந்த வில்லன் கெட்டப்பை மாற்ற உன்னை அவர்களின் பாதுகாவலன் என்ற இமேஜை அவர்களுக்கு கொடுக்க நினைத்தேன்.அதனால் தான் எங்கள் எம்.டி மிகவும் பொறுப்பானவர்.இனி உங்கள் மகளை பற்றிய கவலையை எங்கள் எம், டி பார்த்துக் கொள்வார்கள்.இனி கவிழையா எங்கள் எம்.டி பொறுப்பு என்று கூறினேன்.உடனே என்னை முறைத்து பேசப்போன அம்மாவை, நம் கவிழையா மேடம் தான் தடுத்து, அம்மா விடுங்கம்மா. நம் வீட்டு வாசலை எல்லோரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். வாங்க முதலில் ஆஸ்பத்திரி போகலாம் என்று காரில் ஏறினார்கள் என்றான்.

அவன் கூறுவதைகேட்ட மஹிந்தன் யோசனையானான் இனி என் ழையாவை எங்கும் விட்டுவைக்க முடியாது.உடனே அவளை என்னிடம் கொண்டுவந்து விடவேண்டும். வீட்டுவேலை எல்லாவற்றையும் கூடுதல் ஆட்கள் வைத்து இன்று இரவே முடித்துவிடவேண்டும். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்தவீட்டில் என் ழையாவுடன் என் வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்று கூறினான்.சரிடா வீடு எப்படி இருக்கு என்று திரும்பவும் அபிப்ராயம் கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.