(Reading time: 30 - 59 minutes)

நெனச்சேன் அந்த ஐஸ்வர்யா உன்னிடம் இப்படித்தான் பேசியிருப்பாள் என்று. உன்னை அவள் ஆஸ்பத்திரியில் சந்தித்து பேசினால் என்று தெரிந்ததுமே அவளை உண்டு இல்லையென செய்திருக்க வேண்டும். அவள் சொன்னாளாம் இவள் நம்பினாளாம் யார் குழந்தைக்கு? யார் அப்பன்?. அவளை நான் எச்சரித்தும் உன்னிடம் வந்து இவ்வாறு பேசியிருப்பதற்கான தண்டனையை உடனே நான் அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னவன்.

ழையா ! அவள் கர்பத்திற்கு காரணம் நான் இல்லை. உனக்கு மட்டுமில்லை எனக்கும் இந்த ஜென்மத்தில் மனைவி என்றாள் அது நீ மட்டும் தான் அதையும் நீ மனதில் வைத்துக் கொள்! நான் உன்னை கல்யாணம் செய்த விதம் வேண்டுமென்றால் தவறாக் இருக்கும் ஆனால் நான் உன்மேல் கொண்டுள்ள காதல், காதல் என்று மட்டும் சொல்ல முடியாது, நீ எனக்குறியவள் எனக்குமட்டுமானவள் என்று நான் உணர்வது, அந்த உணர்வினால் உன்னை என் அருகில் வைக்க என்னவேண்டுமென்றாலும் செய்யச் சொல்கிறது.

அதற்க்காக் உன் பின்னால்வந்து உன்னைச் சுற்றி உன் மனம் மாறும் வரை காத்துக்கிடக்க நான் ஒன்றும் சாதாரணமானவன் கிடையாது.நீ என் அருகில் வந்துவிட்டால் தானாக என்னை என் அன்பை புரிந்து கொள்வாய் அதனால் தான் உண்னை என் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள அத்தனையும் செய்தேன், என்று கூறியவன் சோர்வுடன் அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவன் அவ்வாறு கூறியதும் கவிழையா அவனிடம், நல்ல நடிப்பு! ஆனால் இதை நம்ப நான் ஒன்றும் முட்டாள் கிடையாது என்றவள், ஒருப் பெண் எந்த விஷயத்திலும் பொய் சொல்லிவிடுவாள். ஆனால், தான் கர்ப்பமாக் இருக்கும் விஷயத்திலும் அதற்கு காரனமானவனையும் பொய்யாக சொல்ல வாய்ப்பு இல்லை என்றாள்.

அவன் அவ்வாறு கூறியதும் அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டே தன் போனை எடுத்தவன் நீ எல்லாம் படித்து பெரிய வேலையில் இருப்பதாக் சொல்லிக் கொள்ளாதே! அல்ட்ரா மாடல் பெண்கள் என்று தன்னை கான்பிப்பதர்காக நம் கல்ச்சர் மறந்து ஆட்டம் போடும் பெண்களை நீ இதுவரை பார்த்ததில்லையா? கோபமாக் கேட்டுக்கொண்டே தன் போனில் கதிருக்குத் தொடர்புகொண்டு பேசினான்.

ஐஸ்வர்யாவைப் பற்றிய அனைத்து விசயங்களுக்கும் உண்டான ஆதாரத்தை எடுத்துக் கொண்டு காரில் வாசலில் காத்துக்கொண்டு இருக்குமாறு சொன்னான்.

பின் தன் அப்பாவிற்கு போன் செய்து , ஐஸ்வர்யாவுடன் தனக்கு ஏற்பாடுசெய்துகொண்டு இருக்கும் கல்யாண ஏற்பாட்டை நிறுத்தும் படி கூறினான்.

அவன் கூறியதை கேட்ட மஹிந்தனின் அப்பா.சிறிது நேரம் அமைதியாக ஒன்றும் பேசாமல் இருந்தார்.பின் ஏன் இந்த முடிவு? என்று கேட்டார்.இதனால் வரும் பின் விளைவுகளை எப்படி சமாளிக்கப்போகிறாய் என்று கேட்டார்.

அவர் அவ்வாறு கேட்டதும், டாட் டோன்ட் வொரீ நான் ஏற்கனவே இதை பற்றி பார்த்தீபனிடமும் நம் மதுராவிடமும் கலந்து பேசிவிட்டேன் இக்கல்யாணம் நின்று விடுவதால் நம் மதுராவின் வாழ்வில் எந்த பிரச்சனையும் வராது, என்று பார்த்தீபன் உறுதிகொடுத்துள்ளார்.மேலும் நாம் நம் மதுராவிற்கு கொடுத்துள்ள எஸ் வி எம் பங்கை நமக்குத் திரும்ப எழுதி கொடுத்து விடுவதாகவும் அதற்கு பதில் நான் அந்தப்பங்கினைப் போல் இரண்டு மடன்கிற்கும்மேலான மதிப்புடைய நான் தற்போது ஆரம்பித்து நன்றாக் போய் கொண்டிருக்கும் என்னுடைய கோயம்புத்தூர் கிளையை மதுராவிற்கு எழுதிக் கொடுத்துவிடுவதாப் பேசியிருக்கிறேன்.ஆனால், அவ்விசயத்திற்க்கு ஒத்துக்கொண்ட பார்த்தீபன் அவன் அப்பாவிடமும் பெரியப்பாவிடமும் பேச கொஞ்சம் அவகாசம் கேட்டிருந்தார்.

ஆனால் இப்பொழுது அந்த அவகாசத்திற்குரிய நேரம் முடிந்துவிட்டது நான் இப்பொழுது மாப்பிள்ளை பார்த்தீபனிடம் பேசிவிடுகிறேன் என்று கூறி, தன் தொலை பேசியின் தொடர்ப்பைத் துண்டித்தான்.

துண்டித்தவன் பார்த்தீபனுக்கு போன் செய்து, நான் இப்பொழுது உங்கள் வீட்டிற்கு வரப்போகிறேன் நீங்கள் உங்கள் வீட்டின் பெரியவர்களை வீட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினான்.

அவன் கூறியதை கேட்ட பார்த்தீபன் கொஞ்சம் பொறுங்கள் மஹிந்தன், நான் இன்னும் அப்பாவிடமும் பெரியப்பாவிடமும் பேசவில்லை என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறியதும் இனி இந்தவிசயத்தை பேசாமல் தள்ளிப் போட முடியாது ,அவ்வாறு தள்ளிப் போட்டால் உங்கள் தங்கையின் வாழ்க்கையே என்று கூறியவன் பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஆனாலும் உங்கள் தங்கைக்கு தைரியம் ஜாஸ்திதான் என்னிடமே விளையாடி பார்க்கிறாள், என்று கோபத்துடன் கூறியவன் போன் தொடர்பைத் துண்டித்தான்

பார்த்தீபனுக்கு மஹிந்தன் தன்னிடம் பேசியதைவைத்து இந்த ஐஸ்வர்யா மேலும் எதுவோ பிரச்சனையை இழுத்துவைத்திருக்கிறாள்..நான் ஏற்க்கனவே அவளை கூப்பிட்டு மஹிந்தனின் கோபம் பற்றி கூறியிருக்கிறேனே அதன் பிறகும் இந்த ஐஸ் எதற்கு அவனிடம் பிரச்சனையை வளர்த்து இருக்கிறாள், என்று குழம்பிப்போய் தலையை பிடித்தபடி உட்கார்ந்திருந்தான்

தன் கணவன் எதுவோ கவலை மற்றும் யோசனையுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மதுரா.பார்த்தீபனின் அருகில் வந்தவள், “என்ன பிரச்சனைப்பா? ஏன் ஒரு மாதிரி டென்சனுடன் உட்கார்ந்திருக்கிறீர்கள்’’, என்று கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.