(Reading time: 30 - 59 minutes)

ம்மா நான் இன்று லீவ் போடமுடியாது இன்று முக்கியமான குறிப்புகளை நான் தான் எடுத்து கிளைன்டிற்கு அனுப்பவேண்டும். எனக்குத்தான் அதை பற்றிய விபரம் தெரியும் என்று கூறினாள்.

கவி அவ்வாறு கூறவும் ,பார்வதி அந்த மஹிந்தன் உனக்கு இவவளவு பிரச்சனை கொடுக்கிறான் என்று தெரிந்த பின்பும் அவனிடமே உன்னை வேலைக்கு அனுப்ப பயமாக இருக்கிறது. நாளைக்கு உன் அப்பா நீ வேலையில் இருந்து விலகுவதற்காக கட்டவேண்டிய பணத்தை ஏற்பாடு பண்ணிவிடுவார்.நீ இன்று ஆபீஸ் போனால் நீ நாளை மறுநாளில் இருந்து வேலைக்கு வரமாட்டாய் என்று கூறிவிடு.மேலும் அவ்வாறு வேலையில் இருந்து நிற்பதற்குத் தேவையான அனைத்து நடைமுறை பணிகளையும் இன்றே முடித்துவிடு.நீ எவ்வளவு சீக்கிரம் அந்த வேலையில் இருந்து நிற்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் எனக்கும் உன் அப்பாவிற்கும் மனம் உடல் இரண்டும் நல்ல நிலைமைக்குத் திரும்பும் என்று கூறியவள், இன்று மாப்பிள்ளை தனுஷ் உன்னிடம் பேசினால் நல்ல பதிலைச் சொல்லிவிடு என்று கூறியவர், நீ கிளம்புவதென்றால்! “தலைக்குக் குளித்து திரும்ப காய்ச்சலை வரவளைத்துக் கொள்ளாதே,’’ என்று கூறிவிட்டு தனக்கு அடுப்படியில் வேலை இருப்பதாகக் கூறிச் சென்றுவிட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

பீசில், அவளுடைய இருக்கையில் உட்கார்ந்து கொண்டு அவள் முடிக்க வேண்டிய வேலைகளை வேகமாக செய்த்துகொண்டு இருந்தாள். அப்பொழுதுதான் உள்ளே வந்த மஹிந்தன், கவிழையாவின் அருகில் வந்து காய்ச்சல் சரியாகிவிட்டதா பேபி? என்று கேட்டுவிட்டு அவள் நெற்றியில் கைவைத்துப் பார்க்க வந்த மஹிந்தனின் கைக்கு எட்டாதவாறு ரோலிங் சேருடன் பின்னால் நகர்ந்து கொண்ட கவிழையா அவன் முகம் பார்க்கப் பிடிக்காமல் வேறுபுறம் பார்த்தபடி “சரியாகிவிட்டது பாஸ்’’, என்று கூறிவிட்டு எனக்கு கொஞ்சம் அலுப்பாக இருப்பதால், என்னுடைய வேலையை இன்று உமாமேடத்துடன் பகிர்ந்து இங்கிருந்தே செய்துகொள்ள அனுமதிக்குமாறு கேட்டாள்.

அவளுடைய விலகல் மஹிந்தனுக்கு வருத்தத்தையும் கோபத்தையும் கொடுத்தாலும் அவளுடைய சோர்ந்துபோன தோற்றத்தை கண்டவன் ஓ.கே பேபி. டேக் கேர் ஆப் யூ என்று கூறிவிட்டு அவனின் அறைக்குள் வந்தவன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் மூலம் அவளைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான்.

அப்பொழுது உமாவை அருகில் அழைத்த ழையா சில கோப்புகளை கொடுத்து வேலையை பகிர்ந்துகொள்வதை பார்த்தான் உமா அவளுடைய இடத்திற்குப் போனதும் தன்னை சுற்றி யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தவள் தன் போனை தயக்கத்துடன் எடுத்து யாருக்கோ டென்சனுடன் அழைப்பு விடுப்பதை பார்த்தவனுக்கு யாருடன் இவவளவு டென்சனாக பேசப்போகிறாள்? என்று அறியும் ஆவல் மஹிந்தனுக்கு வந்தது.

உடனே உமாவை போனில் தொடர்பு கொண்ட மஹிந்தன் கவிழையாவிடம் சந்தேகம் கேட்பது போல் அவளின் அருகில் சென்று உமாவின் போனை ரெகார்ட் மோடில் ஆண் செய்து ழையா போனில் பேசுவது பதிவு ஆகும் படி வைத்து வருமாறு கூறினான்.

கவிழையாவின் அருகில் உமா சென்றதும் ஒரு நிமிடம் தனுஷ் என்றவள் சொல்லுங்க உமா என்று கேட்டதும் எந்த பக்கத்திலிருந்து வெரிபை பன்னச்சொன்னீர்கள்! என்று தன் சந்தேகத்தை கேட்பது போல் அவள் மேஜையில் தன் மொபைலை ரெகார்ட் மோடில் வைத்து மறந்துவிட்டு வருவதுபோல் வந்துவிட்டாள்.

கவிழையா தனுசிடம் பேசும் ஆர்வத்தில் அவள் போனை வைத்ததை கவனிக்காமல் தன்னுடைய உரையாடலை தொடர்ந்தாள்.

அவள் தனுசிடம் நான் மிஸ் கவிழையா கிடையாது ,ரெகார்ட் படி மிசஸ் கவிழையா என்று கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியதும் தனுஷ் பிறகு எப்படி உங்கள் வீட்டில் எனக்கு உங்களை கல்யானத்திர்க்காக் பேசினார்கள், என்று கேட்டான்.

அதற்கு கவிழையா எனக்கு கல்யாணம் ஆனவிஷயம் எங்கள் வீட்டிற்கு தெரியாது என்று கூறி நடந்த விஷயத்தை கூறினாள்.

அவள் கூறியதை கேட்ட தனுஷ் மிகவும் வருத்தத்துடன் உங்களுக்கு நடந்தது திருமணமே கிடையாது கவிழையா. நீங்கள், அந்த மஹிந்தன் மேல் வழக்கு பதிவு செய்து உங்களை கட்டாயப்படுத்தி திருமணம் முடித்ததாக கூறி விவாகரத்து பெற்றுக்கொள்ளுங்கள் கவிழையா அதற்கான எல்லா உதவிகளையும் நான் செய்கிறேன் என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறியதை கேட்ட கவிழையா அப்படி செய்தால் எனக்கு விவாகரத்து கிடைக்கும் ஆனால்.என்னால் மஹிந்தனின் பணப்பலத்திற்கு முன் அவனுடன் நேரடியாக் மோதி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை.மேலும் மஹிந்தன் பத்திரிக்கையாளர்களால் கவனிக்கப்படும் ஒரு பிரபலமான தொழில்அதிபர். எனவே இவ்விசயம் வெளி உலகிற்கு தெரிய வந்தால் என்னுடைய பெயரையும் களங்கப்படுத்த ஊடகங்கள் தயங்காது பிறகு என்னுடைய அமைதியான வாழ்க்கையே போராட்டத்தில் தான் முடியும்.

எனவே நான் மஹிந்தனின் கண் பார்ப்வையில் இருந்து தூரமான இடத்திற்கு அவன் அறியாமல் விலகி செல்ல நினைக்கிறேன் அதற்கு உங்களால் எனக்கு உதவ முடியுமா? என்று கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.