(Reading time: 30 - 59 minutes)

வள் கூறியதை கேட்ட தனுஷ், நீங்கள் சொல்வது போல அந்த மஹிந்தன் பண பலமும், மீடியாவினால் கவனிக்கப்படும் பிரபலமானவனுமாக இருப்பதால் நீங்கள் அவனிடம் இருந்து அவன் அறியாமல் தப்பிக்க நினைப்பது புத்திசாலித்தனம் தான்.ஆனால் இனி வேறு ஒருவனை நீங்கள் மணக்க முடியாது என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் கவிழையா தயவு செய்து கல்யாணம் என்ற பேச்சை என்னிடம் இனி எடுக்காதீர்கள் தனுஷ்..நான் உங்களிடம் அறிமுகம் ஆகி பேசும் முன்னரே உங்களிடம் உதவியை கேட்க்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணம் வந்ததற்குக் காரணம், நீங்கள் என் அப்பாவின் மூலம் எனக்கு அறிமுகமானவர் என்றது தான்.மேலும் எனக்கு உங்கள் அப்பா சீனிவாசன் மாவையும் நன்குத் தெரியும் அதனால்தான் உங்களிடம் நான் தயக்கம் இல்லாமல் பேசுகிறேன்.

மேலும் உங்களுடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே உங்களுடன் நட்பு பாராட்டுவது எனக்கு எளிதாகவும் உங்களின் ஆதரவான கண்ணியமான பேச்சு உங்கள் மேல் எனக்கு நல்ல மதிப்பையும் உருவாக்கியுள்ளது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

எனவே உங்களின் நட்பு தொடர்ந்து எனக்கு வேண்டும், என்று நான் நினைக்கிறேன். ஆனால், நீங்கள் கல்யாணத்தை பற்றி பேசி தயவு செய்து உங்களுடனான என் நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாதீர்கள், என்று கூறினாள் கவிழையா.

தனுஷ்க்கு கவிழையாவிடம் இப்பொழுது கல்யாணம் பற்றி பேசினால் எங்கு அவள் தன்னுடன் பேசுவதை நிறுத்திவிடுவாலோ? என்று ஐயம் ஏற்பட்டது மேலும் அவள் தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு இப்பொழுது அவளுக்கு மஹிந்தனைவிட்டு மறைந்து போவதற்கு உதவுவதே முக்கியமாகப்பட்டது.

எனவே கவிழையா என் பிரன்ட் ஒருவன் அகமதாபாத்தில் இருக்கிறான் அவன் பேர் விஜய்பிரதாப் அவனிடம் நான் உங்களைப்பற்றிய விபரத்தை கூறி உங்களுக்கு இப்போதைக்கு கௌரவமாக தங்கி வேலை பார்க்க ஏற்ப்பாடு செய்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன் என்று கூறினான். நீங்கள் எந்த நேரத்திலும் எந்துதவுதவியும் என்னிடம் கேட்கலாம். என்று சொன்னான்.

அவன் அவ்வாறு கூறியதும், கவிழையா எனக்கு தமிழ் ,ஆங்கிலம் தவிர வேறு மொழியில் பேசத்தெரியாது. “உங்கள் நண்பனிடம் எனக்கு மற்ற மொழியில் பேசத்தெரியாது என்பதையும் கூறிவிடுங்கள்,’’ என்று கூறி நீங்கள் செய்யும் இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறிய கவிழையா.மேலும் எனக்குக் கல்யாணம் முடிந்த விஷயத்தை என் அப்பாவின் உடல்நிலை காரணமாக வீட்டில் சொல்லவில்லை. நீங்களும் அவசரப்பட்டு சொல்லிவிடாதீர்கள் தனுஷ் என்று கூறி நாம் பிறகு பேசலாம் என்று கூறி தொடர்பைத்துண்டித்தாள்.

அவள் பேசி முடிக்கும் போது தன் போனை அவள் மேஜையில் மறந்து விட்டுவிட்டதாக கூறியபடி வந்த உமா, தன் போனை எடுத்துகொண்டு தன் மேஜைக்கு வந்தாள்.உமா தன் இருக்கையில் அமரவும் மஹிந்தன் தன் அறையைவிட்டு வெளியில் வந்து நேராக உமாவிடம் சென்றவன் அவளிடம் எதோ வேலை கூறுவதைப்போல் அவளின் போனை கைப்பற்றியவன் திரும்பவும் தன் அறைக்குள் சென்று மறைந்தான்.

கவிழையா மஹிந்தன் வெளியில் வந்ததை கவனிக்காமல் தன்னுடைய வேலைகளில் திரும்ப ஆழ்ந்து போனாள்.மதிய சாப்பாட்டின்போது திரும்பவும் தன் அறையில் இருந்து வெளியில் வந்த மஹிந்தனை பார்த்த கவிழையா.இவன் இன்னும் போகவில்லையா? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். மஹிந்தன் தினமும் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் தான் தங்குவான்.அவன் அவ்வாறு இருக்கும் போது செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டு செய்யுமாறு உத்தரவு பிரப்பித்துவிட்டு ஏற்கனவே முடித்த வேலைகளை சரிபார்த்துவிட்டு கோப்புகளில் கையெழுத்துப்போட்டுவிட்டு போய்விடுவான்.

அவன் அலுவலகத்தில் இல்லாவிட்டாலும் அந்தந்த பணிகளை சரியானபடி முடித்துக்கொடுக்கும் ஏற்பாடுகளை செய்துவிட்டுத்தான் போவான். ஏதேனும் முக்கியமான முடிவுகளை செயல் படுத்தவேண்டும் என்றாள் தான் அவன் அலுவலகத்தில் முழுநேரமும் இருப்பான்.

ஆனால் இன்று அவனுக்கு அப்படி முக்கிய வேலை எதுவும் இலையே பிறகு ஏன்? “வந்து மூன்று மணிக்கு மேலும் இவன் வெளியே செல்லவில்லை’’, என்று தனக்குள் கேள்வி கேட்டாள்.ஏனெனில் அவனின் துளைக்கும் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.

அப்பொழுதுதான் அவளுக்கு இன்று காலையில் தன் அம்மா தான் வேலையில் இருந்து நின்றுகொள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து முடித்துவரும் படி கூறியது நினைவு வந்தது.எனவே அவள் மஹிந்தனை பார்த்து எழுந்து நின்று பாஸ் என்று கூப்பிட்டதும்.என்ன? என்ற தன் ஒற்றைப்புருவத்தை தூக்கிக் கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.