(Reading time: 30 - 59 minutes)

ஹிந்தன் அவ்வாறு கேட்டதும் கடுப்பான கதிர் சொன்னான் , நீ இந்த வீட்டை வாங்குவதிலிருந்து ஒவ்வொன்றும் ஆல்ட்டர் பன்னும்போதும் கூடவே இருந்து பார்த்துப் பார்த்துப் வேலை செய்யும் என்னிடம் வந்து புதிதாக நான் வீட்டை இப்பொழுதுதான் பார்ப்பதுபோல் எப்படி இருக்கு? என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன் என்று கேட்டான்.

விழையாவிற்கு, தன் கழுத்தில் உள்ள மாங்கல்யத்திர்க்கும் அன்று ரெஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்த ஆதாரத்திற்கும் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுந்தது.

மேலும் மஹிந்தனுக்கு தன்னுடைய வாழ்க்கையில் இதுபோல் விளையாட எப்படி மனம் வந்தது, என்ற வருத்தம் எழுந்தது.இதற்க்கு மேலும் அவன் தன் வாழ்கையில் விளையாடவிடாமல் தப்பித்து எங்காவது சென்றுவிடவேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.

அவ்வாறு தான் தப்பித்துப் போவதர்க்கு தனக்கு அப்பா இப்பொழுது பார்த்திருக்கும் மாப்பிளை தனுஷ் தான் உதவமுடியும் என்றும் அவனிடம் எவ்வாறு உதவி கேட்கவேண்டும் என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டாள்.

டாக்டர் கொடுத்த மாத்திரை மற்றும் மனம் மற்றும் உடல் துயரத்தால் கவிழையா அன்று பகல் முழுவதும் தூக்கத்திலேயே பொழுதை செலவழித்தால்.அன்று இரவு ஒன்பதுமணிக்கு தன் மொபைலில் 001என்று தொடங்கும் நம்பரில் இருந்து அழைப்பு வந்ததும் கவிழையா அது தனுசின் நம்பர் என்று யூகித்தால்.முதல் இரண்டு நீண்ட ரின்க்டோனில் எடுக்க தயக்கத்துடன் கழித்தவள், மூன்றாவதில் எடுத்தாள்.தயக்கத்துடன் காதில் வைத்தவள் ஹலோ என்றதும் ,ஹாய் கவிழையா நான் தனுஷ் பேசறேன் என்றதும் கவிழையா “ம்”அப்பா “நீங்கள் என்னிடம் பேசுவதற்கு போன் நம்பர் வாங்கியதாக சொன்னார்கள்’’ என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும், அப்போ நான் பேசுவேன் என்று காத்துக்கொண்டு இருந்தீங்களா கவிழையா? ,தாமதமாக பேசியதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் எனக்கு இங்கு முக்கியமான் வேலையிருந்ததால் நேற்று என்னால் பேசமுடியவில்லை அதனால் தான் இன்று எழுந்தவுடனே உங்களுக்கு போன்செய்தேன், என்றான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

உடனே கவிழையா அச்சோ! நான் ஒன்றும் காத்திருக்கவில்லை அதற்காக உங்களிடம் பேச எனக்கு விஷயம் இல்லை என்பதற்கில்லை.நான் உங்களிடம் ஓர் உதவியை எதிர்பார்க்கிறேன் ஆனால் இப்பொழுது என்னால் என் நிலைமையை வீட்டில் எல்லோரும் இருக்கும் போது சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறேன்.நான் நாளை ஆபீஸ் வேலையில் இருக்கும் போது உங்களிடம் இந்த நம்பரில் தொடர்புகொண்டு பேசலாமா? என்று தான் பேச நினைத்ததை மூச்சுவிடாமல் பேசி முடித்தாள்.

கவிழையா பேசுவதை கேட்ட தனுஷ் அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம்மில்லை என்பதை தெரிந்துகொண்டான் மேலும் தன் அப்பா மஹிந்தனை பற்றிச் சொல்லிருந்ததால் மேலும் கவிழையாவிற்கு பிரச்சனை இருக்கலாம் என்ற யூகம் அவனுக்கு இருந்தது. தான் ஆசைப் பட்ட பெண்ணுடன் தனக்கு கல்யாணம் முடியாவிட்டாலும், அவளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யச் சொல்லி அவன் மனம் அவனுக்கு கட்டளையிட்டது அதனால், கவிழையா நீங்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு எந்த உதவியையும் என்னிடம் தாராளமாக கேட்கலாம். இது தான் என்னுடைய போன் நம்பர் அப்போ! நாம் நாளை பேசலாம் என்று கூறி தொடர்பைத் துண்டித்தான்.

கவிழையாவிற்கு போன்தொடர்பு துண்டிக்கப்பட்டதும் தான் சற்று படபடப்பு குறைந்தது.பிற ஆண்களுடன் தேவையில்லாமல் பேசக்கூட யோசனை செய்யும் தன்னால், தனுசிடம் உதவிகேட்கும் நிலையில் இருப்பதை நினைத்து வருந்தியவளுக்கு எப்படியாவது மஹிந்தனின் கண் பார்வையை விட்டு மறைந்துபோனாள் சரி, என்ற எண்ணம் வலுத்தது.

றுநாள் கவிழையா காலை கண் விழிக்கும்போதே அவள் அம்மா பார்வதி கவலையுடன் அவள் அருகில் அமர்ந்துகொண்டு தன் மகளின் நெற்றியில் கைவைத்து காய்ச்சல் இன்னும் இருக்கிறதா? என்று பார்த்துக்கொண்டிருந்தார். கவிழையா கண் விழித்ததும் இப்பொழுது காய்ச்சல் சற்று குறைந்திருக்கிறது அதற்க்காக, இன்றே ஆபீஸ் கிளம்புகிறேன் என்று நிற்காதே கவி, என்று கூறினாள்.

தன் அம்மா தன் அருகில் அமர்ந்து கொண்டு வருந்தவும், சலுகையாக புரண்டு அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்ட கவிழையா உன்மடியில் தலை வைத்துப் படுத்தால் காய்ச்சல் எல்லாம் காணாமல் போய்விடும். இப்பொழுது நான் மடியில் படுத்தால் கல்யாணம் ஆகிற வயசில் அம்மா மடியில் படுத்து என்ன செல்லம்? என்று கூறி விரட்டிவிடுகிறீற்களே.உடம்பிற்கு முடியவில்லை என்றாள் தான் உங்களிடம் செல்லம் கொஞ்ச முடிகிறது, என்று தன் தாயின் மடியில் படுத்த சுகத்தை அனுபவித்துக்கொண்டு கூறினாள் கவி.

சரிசரி நீ சொல்வதை நான் நம்பிட்டேன் எதற்காக இந்த கொஞ்சல் என்று தன் மகளின் தலையைத் தடவியபடி கேட்டாள் பார்வதி.

அது எப்படிமா நான் உன்னை ஐஸ் வைக்கிறேன் என்று கரைக்டா கண்டுபிடித்து விடுகிறாய்? என்று கேட்டாள் கவிழையா

“முசப்பிடிக்கிற நாயை மூஞ்சியைப்பார்த்தால் தெரியாதா?’’ அதுதான் உன் கண்ணே! எதுவோ என்னிடம் கேட்கப்போவதை காட்டிக்கொடுக்கிறதே என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.