(Reading time: 11 - 22 minutes)

 “ஹாய்.. நீங்க தமிழா..? ரொம்ப சந்தோஷம்.. எப்படி டா.. என் ஓட்ட ஹிந்திய வச்சு சமாளிக்க போறேன்னு நினைச்சேன்.. thank god” என,

“உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்றானே அர்ஜுன்..”

பழக்க தோஷத்தில் “ யாரு.. நம்ம தளபதி தம்பியா..?” என

பரத் “வாட்..?” என்று வினவிய பின்பே . நாக்கை கடித்துக் கொண்டே.. “சார்.. அது உங்க friend பேர் அர்ஜுன் இல்லியா.. கேப்டன் என்னோட சீனியர்.. அவர எப்படி பேர் சொல்றதுன்னு யோசிச்சு.. indirect அஹ இப்படி என் friend கிட்டே சொல்லுவேன்.. அதுவே பழக்க தோஷத்தில் வாயில் வந்துடுச்சு..” என்று அசடு வழிந்தாள்.

“இது உங்க கேப்டன் க்கு தெரியுமா?”

“தெரியுமே.. நான் அப்போ அப்போ வைக்குர பேரை அவர்கிட்டே நானே உளறிடுவேன்..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“சுபா.. நீ ஒரு தனி பீஸ் தான் போ.. அவன் கிட்டே பயபடாத உன்னை பார்த்து guide பண்ண என்னை அனுப்பிருக்கானே.. இது எல்லாம் நல்லதுக்கு இல்லை..”

“சார்..” என்று மீண்டும் ஆரம்பிக்க, “சுபா.. இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம்.. பரத் சொல்லு.. இல்லையா அண்ணா சொல்லு..” என,

“தேங்க்ஸ் அண்ணா.. எப்போடா இப்படி சொல்லுவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. அண்ணா.. உங்க friend.. கேப்டன் பிரபாகரன் முன்னாடி கொஞ்சம் கைப்புள்ள சீன் போடுவேன் .. அத நம்பிட்டார் போலே இருக்கு அதான் எனக்கு bodyguard அனுப்பி இருக்கார்.”

“அது சரி.. “ என்றவன் அவளை அழைத்து சென்றான் defence colony க்கு..

பரத் ஒரு RAW சீப் கமாண்டோ.. ஆனால் அது அங்கே யாருக்கும் தெரியாது.. அவனுக்கு கீழ் நிறைய ரா ஆபீசர்ஸ் உண்டு.. அவர்களை ஒருங்கிணைத்து தகவல்கள் பெறுவது அவன் வேலை. ஆனால் வெளியில் யாருக்கும் தெரியாது. அவன் யாரிடம் ரிப்போர்ட் பண்ண வேண்டும் என்று.. அவன் ரிப்போர்ட் செய்ய வேண்டிய நபர் defence மினிஸ்டரிடமே.. ஆனால் அங்கே defence அகாடமிஇல் dummy ஆக ஒரு போஸ்ட் போட்டு அங்கே உள்ள ஆபீசரிடம் ரிப்போர்ட் செய்கிறான்.

அவன் சுபாவை அழைத்து வந்து, அவள் சேர வேண்டிய ட்ரைனிங் அகடமிக்கு அவளை பற்றின புல் details கொடுக்கும் போது அது எதற்கு, என்ன மாதிரி தேவை ஏற்படும் என்பதை அவளுக்கு விளக்கி duty join பண்ண வைத்தான்.

அங்கே அவளுடைய வீடு பற்றிய விவரங்களில் இருந்து நிறைய விஷயங்கள் கேட்டு அறிந்து கொண்டார்கள்.

இவளுடைய வேலையும் ரா வேலையும் இனைந்து பணியாற்ற வேண்டியது என்பதால் அவளை பற்றின விவரங்கள் வாங்கியவர்கள், அந்த விவரங்கள் நேரடியாக ரகசிய file அறைக்கு சென்று விட்டது.

சுபா கொஞ்சம் பயத்தோடு இதை பற்றி பரத்திடம் கேட்க, அவன் அதற்கான காரணத்தை விளக்கினான்.

“க்ரிப்ட் அனலிஸ்ட் செய்பவர்கள் , நிறைய ரகசிய தகவல்களை எதிரிகளிடமிருந்து பெற முடியும் , அதே சமயம் எதிர்களுக்கு தெரியாமல் சொல்லவும் வேண்டி இருக்கும். உங்களை பற்றிய விவரங்கள் வெளியே தெரிந்தால் உங்களையோ அல்லது உங்கள் குடும்பத்தாரையோ மிரட்டி எதிரிகள் விஷயங்களை வாங்க முடியும்.. அதே சமயம் உங்களை விலைக்கு வாங்கவும் முயற்சிக்கலாம். அதனால் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, உங்களை கண்காணிக்கவும் வசதியாக எல்லா விவரங்களையும் வாங்கி கொள்வார்கள். இந்த விவரங்கள் உனக்கு தெரியாது என்பதால் நீ தயங்கலாம் இல்லை பயபடலாம். அதோடு மற்ற மிலிடரி அகாடமி விட இங்கே எல்லா ரூல்ஸ் உம ரொம்ப கடுமையாக இருக்கும். அதற்கும் நீ பழகி கொள்ள வேண்டும் என்றுதான் என்னை உனக்கு உதவி செய்ய சொல்லி அனுப்பினான் அர்ஜுன்..” என்று முடித்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. நீங்க சொன்னது போல் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. கேப்டன் சார் சொல்லி நீங்க வந்து செய்த உதவி ரொம்ப பெரியது. “

“ஓகே மா.. மற்றபடி இங்கே உள்ள hostel procedure எல்லாம் வழக்கம் போல் தான்.. நீ பார்த்து கொள்கிறாயா ? நான் கிளம்பட்டுமா..”

“சரின்னா.. ஒன்றும் பிரச்சினை இல்லை.. நான் சமாளித்து கொள்கிறேன்.. நீங்க ப்ரீயா இருக்கும்போது கொஞ்சம் என்னை வந்து பார்த்துட்டு போங்க.. “ என்று விடை கொடுத்தாள்.

பரத் சுபாவிற்கு செய்த வேலைகள் பற்றி ஒரு update கொடுத்து விட்டு அவன் வேலைக்கு சென்று விட்டான். அர்ஜுன்க்கு தெரியும் அவன் வேலை பற்றி.. அதனால் அவனுக்கு தேங்க்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டன.

சுறா அர்ஜுன்க்கு “தேங்க்ஸ் அர்ஜுன்.. உங்க friend அனுப்பினது timely ஹெல்ப்.. அவர் வரல என்றால் ரொம்ப திணறி இருப்பேன்.. தேங்க்ஸ் சோ மச்..” என்று அனுப்பி விட்டாள்.

அர்ஜுன் “நோ ப்ரோப்லேம் சுபா.. ஆல் தி பெஸ்ட் & டேக் கேர் ஒப் யு  “ என்று அனுப்பினான்.

சுபத்ரா அங்கே பழக ஆரம்பித்தாள். இங்கேயும் மிலிடரி கேம்ப் போலே எல்லா ட்ரைனிங் உண்டு.. ஆனால் எல்லோரும் trained soldiers என்பதால் அதிக நேரம் இல்லாமல், மறக்காமல் இருக்க மட்டுமே பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். ஷூட்டிங் ஆரம்பித்து, physical exercise , மார்ச் பாஸ்ட் வரை எல்லாமே உண்டு.. மதியத்திற்கு மேல் cryptograph பற்றிய பாடங்கள், பயற்சிகள் எல்லாமே கொடுக்கப்படும்.

சில நியூஸ் பேப்பர் செய்திகள், notices இவைகளை எல்லாம் க்ரிப்டோ முறைப்படி எழுதி பயிற்சி எடுப்பார்கள்.

கிட்டத்தட்ட இது ஆறு மாத பயிற்சிதான். நாட்கள் வேகமாக செல்ல ஆரம்பித்தது சுபாவிற்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.