(Reading time: 11 - 22 minutes)

27. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ராகுல் சுபத்ரா, நிஷா இருவரும் வேறு வேறு ஊர் மற்றும் துறைகளில் பணியில் சேருகின்றனர் என்றவுடனே அர்ஜுன் யோசிக்க ஆரம்பித்து இருந்தான். நிஷாவின் வேலை மற்றும் ட்ரைனிங் கிட்டத்தட்ட டேஹ்ரடுன் மாதிரி தான் இருக்கும். ஆனால் சுபத்ராவின் ட்ரைனிங் முற்றிலும் வேறாக இருக்கும். இதை பற்றி அவள் தெரிந்து கொண்டு இருப்பாளா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவளாக பேசாமல் எப்படி தெரிந்து கொள்வது என்று தயங்கினான் அர்ஜுன்

பின் அவளே அவனுக்கு மெசேஜ் செய்யவும், அவளுக்கு வேண்டிய உதவி செய்ய எண்ணிய அர்ஜுன் மிதுனிடமிருந்து சுபத்ரா பயணம் செய்யும் தகவல்கள் எல்லாம் வாங்கினான். அவனுக்கு சுராவின் குணம் நன்றாக தெரியும். திறமை, தைரியம் எல்லாம் இருந்தாலும் தனிமை அவளின் தைரியத்தை குறைக்கும். அதை முதல் நாள் டேஹ்ரடுன் வந்த அன்றே தெரிந்து கொண்டான். அவளின் நல்ல நேரம் அங்கே நிஷாவும் அவளுக்கு ஈடு கொடுத்து அவளோடு சேர்ந்து கொண்டது.

ஆனால் இப்போது அவள் செல்லும் ட்ரைனிங் university அவள் அந்த மாதிரி எதிர்பார்க்க முடியாது. அதோடு இங்கே கட்டுபாடுகளும் அதிகமாக இருக்கும். அர்ஜுன் செட்டில் நிறைய பேர் நேஷனல் சர்வீஸ் department இல்தான் இருக்கின்றனர். அவர்களில் ஒருவன் DIA என்று அழைக்கப்படும் Defence Intelligence agency இல் இவனுக்கு சமமான பதவியில் இருக்கிறான்.

அர்ஜுன் அப்போதே அவனுக்கு போன் செய்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ஹலோ .. பரத் ஸ்பீகிங்”

“ஹாய். பரத் .. திஸ் இஸ் அர்ஜுன்..”

“ஹே.. அர்ஜுன்.. என்ன இந்த நேரத்துலே.. “

“ஒரு ஹெல்ப் வேணும் மச்சான்..”

“சொல்லுடா..”

“அது .. என்னோட friend நாளைக்கு டெல்லி வராங்க.. நீ கொஞ்சம் receive பண்ணி அவங்கள போக வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் விடனும். “

யோசனையோடு “ஏண்டா. அவங்களுக்கு ஹிந்தி தெரியாதா?”

“அது எல்லாம் தெரியும்.. “

“அப்படின்னா அவங்களே manage பண்ணிக்கலாமே..”

“ஏண்டா.. உனக்கு எதுவும் வேலை இருக்கா?”

“அப்படி இல்லடா.. நீ யாருக்காகவும் இந்த மாதிரி பேச மாட்டியே.? & உன்னோட thought process உம.. யாரா இருந்தாலும், ஸெல்ப் ஆ manage பண்ணனும் சொல்வியே.. அதான் கேட்டேன்..”

“எஸ்.. ஆனால் இவளுக்கு மட்டும் அப்படி சொல்ல முடியலடா..”

“என்னது.. இவளா..? பொண்ணா.. ? அதுவும் அர்ஜுனா? நம்பவே முடியலே..?”

“டேய்.. என்னை என்ன சாமியார்னு நினைச்சியா..?”

“மச்சான்.. நீ அப்படிதானே இருந்த..? இப்போ இப்படி ஆயிட்டியா..?”

“மவனே.. நீ ஒட்டியது போதும்.. கேட்டதுக்கு பதில் சொல்லு..”

“சரிடா.. போறேன்.. details சொல்லு “

“அவ பேர் சுபத்ரா.. “ என்றவன் ட்ரைன், கோச் details எல்லாம் சொன்னவன்.. “அவளை பிக் up பண்ணி defence colony லே கொண்டு விடனும்..”

“என்னது நம்ம ஏரியா வா..? அவங்க இங்கே எதுக்கு வந்துருக்காங்க..?”

அர்ஜுன் அவளின் போஸ்டிங் பற்றி சொல்ல .

“டேய்.. மச்சி.. இது உனக்கே அநியாயமா தெரியல.. ஆர்மி கமாண்டோக்கு என்னை bodyguard வேலை பார்க்க சொல்ற.. இது நீதானடா..”

“அப்படி இல்லைடா.. ரெகுலர் ஆர்மி அகாடமின்னா procedures normal ஆஹ இருக்கும்.. இவளோட போஸ்டிங் RAW வோட சம்பந்தப்பட்டது.. சோ formalities நிறைய இருக்கும்.. உன்னோட guidance இருந்தா ஈசி ஆஹ இருக்கும்..  அதான் கேட்டேன்..”

“ஹ்ம்ம்.. ஓகே டா.. நாளைக்கு போறேன்.. அதுக்கு அப்புறம் எதுவும் செய்யனுமா “

“இல்லைடா.. அது எல்லாம் அவ சமாளிசுப்பா.. initial என்ட்ரிக்கு மட்டும் நீ ஹெல்ப் பண்ணு..”

“ரைட் மச்சான்..” என்று வைத்தான்..

பரத்திடம் பேசிய பின் அர்ஜுன் சுபத்ராவிற்கு “சுபா.. ஒன் ஆப் மை friend பரத் வில் கம் அண்ட் guide யு & யுவர் வொர்க்.. டேக் கேர்..” என்று மெசேஜ் செய்தான்.

இதுவரை அவளிடம் போனில் பேசியதில்லை என்பது ஒரு காரணம். மற்றது அவன் இந்த எண்ணில் பேசுவது குறைவு. முடிந்தவரை முக்கியமான கால்களுக்கு மட்டுமே பயன்படுத்துவான். உதவி கேட்கும்போது மெசேஜ் செய்ய முடியாது என்பதால் பரத்திடம் பேசினான். ஆனால் சுராவிற்கு மெசேஜ் மட்டுமே செய்தான்.

அர்ஜுன் மெசேஜ் பார்த்தவளுக்கு தன்னுடைய எண்ணம் சரியோ என்று தோன்ற ஆரம்பித்தது. அவனுக்கு “ஓகே. தேங்க்ஸ் & டேக் கேர் “ என்று அனுப்பினாள்.

அர்ஜுன் அதன் பின்னே கொஞ்சம் தூங்கினான். காலையில் எழுந்ததும் முதலில் செய்தது நெட் மூலம் அந்த ட்ரைன் கரண்ட் status பார்த்தான். ட்ரைன் reach ஆக இன்னும் நேரம் இருப்பதை பார்த்து விட்டு தன் பணிக்கு கிளம்பி விட்டான்.

அங்கே சரியான நேரத்திற்கு டெல்லி சென்று சேர்ந்த சுபத்ரா அவள் compartment விட்டு இறங்கும் போதே தன் வீட்டிற்கு மெசேஜ் அனுப்பி விட்டாள்.

அவள் கோச் நேராக நின்று இருந்த பரத் சுபத்ராவை பார்த்து விட்டு “

“ஹாய். ஆர் யு சுபா?”

“எஸ்.. சார்.. Mr. பரத்.. “ என்று கேள்வியாக வினவ,

“எஸ்... வாங்க போகலாம்” எனவும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.