(Reading time: 8 - 15 minutes)

ன்னடீ பிரச்சனை உனக்கு?” என்று கோபமாய் கேட்டான் வெற்றி.அவளிடமிருந்து பொய்யான சிணுங்கல் பிறந்தது.

“எதுக்கு என்னை திட்டுறிங்க வெற்றி? நியாயப்படி நான்தான் கோபப்படனும், கண்மணியுடைய காதல் விவகாரம் உண்மையா? நீங்க ஏன் என்கிட்ட சொல்லல?” என்று கேட்டாள் அவள்.மனம் வரவில்லை அவனுக்கு! என் தோழி என்னிடம் உண்மையை மறைத்துவிட்டாளென்று காதலியிடம் சொல்லிடும் எண்ணமில்லை அவனுக்கு.

ஏனோ, தனக்கு பிடிக்காததை செய்தாலும் கூட தோழியை விட்டுக் கொடுத்து பேசுவது அதைவிட பெரிய தவறு என்ற அசைக்கமுடியாத எண்ணத்தில் இருந்தான் வெற்றி. விஹாஷினியோ தொடர்ந்து பேசினாள்.

“நேத்து அவார்ட் ஃபங்க்ஷன் பத்தி பேசும்போது, சம்பந்தமே இல்லாமல், சத்யனும் வருவாரேன்னு கண்ணு சொல்லும்போதே நான் சுதாரிச்சு இருக்கணும்” என்று வார்த்தையை அழகாய் கோர்த்தாள் விஹாஷினி.

“என்ன?”என்று அவள் சொன்னதை உறுதிபடுத்திகொள்ளும் எண்ணத்தில் வெற்றி கேட்கவும்,

“ஆமாங்க.. கண்மணி அடிக்கடி சத்யனின் பெயரை சொன்னாள். நான்தான் கவனிக்காம போயிட்டேன்!.. ஆனால் நீங்களும் எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுக்கிட்டு என்கிட்ட மறைப்பீங்கன்னு நினைக்கல”என்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ப்போ வினயை விட போறீங்களா இல்லையா?” கடைசியாக ஒருமுறை கேட்டாள் நிரூபணா. ராகவேந்திரன் வினய் மீது காட்டிடும் கோபமானது அவன் அர்ப்பணா மீது வைத்திருக்கும் காதலை எடுத்துச் சொன்னாலுமே அவளால் அதை ஏற்க முடியவில்லை.

ராகவன் இன்னமும் பிடிவாதமான முகபாவத்தை காட்டவும்,

“என் இடத்துல அர்ப்பணா இருந்திருந்த அவனை விட சொல்லி உங்களிடம் கெஞ்சி இருப்பாள். அந்த அளவுக்கு இளகின மனம் அவளுக்கு.. நீங்கதான் அவனை கொண்டு போயிருக்கீங்கன்னு அவளுக்கு தெரியும். அதுவும் அவளுக்காகத்தான்னும் தெரியும். இனி வினய்க்கு என்ன ஆனாலும்,அதுக்கு தானே காரணம்னு அவ மனசு உடைஞ்சு போயிடுவா பரவாயில்லையா?”என்று கேட்டாள் நிருபணா.

அவள் எதிர்ப்பார்த்தது தான் நடந்தது. அர்ப்பணாவின் பெயரை சொன்னதுமே இறங்கி வந்திருந்தான் ராகவன். அந்த பெட்டியிலிருந்து வினயை விடுவித்திவிட தப்பிக்கும் எண்ணம் கூட இல்லாமல் சுருண்டு போயிருந்தான் வினய். ஒரு போர்வையை அவன் மீது போட்டுவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான் ராகவேந்திரன்.

அவனையே ஆச்சர்யமாய் பார்த்தாள் நிரூபணா.

“இவ்வளவு காதலா என் தோழி மீது?”வாய்விட்டு கேட்டே விட்டிருந்தாள். புன்னகை மட்டுமே பதிலாய் வந்தது. சில நொடிகளின் மௌனத்திற்கு பின் தன் கதையை சொல்ல ஆரம்பித்தான்.

மூன்று வருடங்களுக்கு முன்பு!

“டேய் நீ அசிஸ்டண்ட் கமிஸ்னராக இருக்கலாம்.. ஆனால் இப்போ நீ என் நண்பன். என்னோடு வெளில வந்துருக்க.. இன்னைக்காவது உன் கடமையிலிருந்து வெளில வா மச்சான்”என்று மிரட்டலாய் ஆரம்பித்து கெஞ்சலாய் முடித்தான் சரவணன்.

கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு,  எதிரில் யார் வந்தாலும் அடித்து போட்டுவிடும்மிடுக்குடன் இருந்த ராகவனை பார்த்ததும் அவனுக்கு இதைத்தான் சொல்லத் தோன்றியது.

அழகாய் சிரித்தான் ராகவன்.

“மச்சான், நான் அசிஸ்டண்ட் கமிஸ்னர் டா..எனக்குன்னு எப்பவும் ஆபத்து வரலாம்.. என்னோடு இருக்குறனால உன் உயிருக்கும் ஆபத்து வரலாம்”என்று சிரிக்காமல் அவன் சொல்லவும், ஓட்டிக் கொண்டிருந்த காரை சடன் ப்ரேக் போட்டு நிருத்தியிருந்தான் சரவணன்.

“டேய்!”

“என்னடா?”

“எத்தனை நாளாக டா இந்த கொலைவெறி உனக்கு?”

“ஹாஹா” என்று சிரித்த ராகவன் ஏதோ சொல்லவர அதற்குள் சரவணனுக்கு அவசர அழைப்பு வந்தது.

“ச்ச ..ஏன்தான் இந்த வேலைக்கு வந்தேனோ!” என்று அலுத்துக்கொண்டான் அவன்.

“ அடப்பாவி ஜர்னலிசம் படிக்கனும்னு பிடிவாதமா இருந்து படிச்சவனாச்சே டா நீ!”

“ஹும்கும் எல்லாம் நாய்பொழப்பு மச்சி.. எப்போ பார்த்தாலும் ஒரே அலைச்சல்!”

“சரி இப்போ என்ன ஆச்சு? நீ எங்கேயோ போகணும்போல? என்னை இறக்கி விட்டுட்டு கிளம்புடா இன்னொரு நாள் பார்க்கலாம்”என்று ராகவன் சொல்லவும்,கொஞ்சம் யோசித்தான் சரவணன்.

பின்னர்,

“இல்லை மச்சான்..ஒரு நடிகை வீட்டுக்கு மைக்கை தூக்கிட்டு போகணும்..எப்படியும் எல்லா ரிப்போர்ட்டர்ஸும் அங்கதான் இருப்பாங்க..எனக்கு தெரிஞ்ச ப்ரண்ட்ஸ் வெச்சு நான் செய்தியை எடுத்துப்பேன்.. இப்போ நாம அங்க போயி தலையை காட்டினால் போதும்.. நீயும் ஹீரொயினை பார்த்த மாதிரி இருக்கும்!” என்று சரவணன் சொல்லும்போது அலட்சியமாய் தோளை உலுக்கினான் ராகவன்.

அறிந்திருக்கவில்லை அவன்! அங்கு அவனே தன்னவளிடம் அடைக்கலமாகிடுவான் என்று!

-வீணை இசைந்திடும்-

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.