(Reading time: 23 - 46 minutes)

03. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

Avalukku oru manam

ன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

என் ஜென்மம் வீணென்று போவேனோ

உன் வண்ண திருமேனி சேராமல்

என் வயது பாழ் என்று ஆவேனோ

உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்

என் ஆவி சிறிதாகி போவேனோ

என் உயிரே நீதானே(2) ஆறடி உயரத்தில் ஆண்களுக்கு உரிய இலக்கணத்துடன் கம்பீரமாய் நின்றுக் கொண்டிருந்தான் அவன்.ஆகாஷ். இவர்கள் அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு பேச ஆரம்பித்தான்.

“வெல்,மை செல்ப் ஆகாஷ். நான் தான் உங்களோட புது எம்.டி. ..”என்றுக் கூறிக்கொண்டு யாமினி அருகில் வந்தான்.அவனது குரலில் ஒரு நொடி உலகை மறந்திருந்தவள், பிறகு தன்னை மீட்டெடுத்தாள்.

“ஹாய் யாமினி,nice to meet u..”என்று அவளை நோக்கி தனது கையை நீட்டினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ஹாய் சார்” என்று அவன் நீட்டிய கையை பற்றி குளிக்கினாள் யாமினி

“இந்த சார்லாம் வேணாம்,எல்லோரும் என்ன ஆகாஷ்னே கூப்பிடுங்க..”

என்று அவன் கூறவும் எல்லோரும் தலையை ஆட்டினர்.

“ஏய்,cuteஅ இருக்கான்..”என்று கவியின் காதை கடித்தாள் மித்ரா.

அவளை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தாள் கவி.

“ யாமினி..”என்று அவன் பேச ஆரம்பிக்கவும் அவனை கவனிக்க ஆரம்பித்தனர் இருவரும்.

“நீங்க ரொம்ப சீன்சியர்னு மீனா,சொன்னாங்க,அடுத்தவங்க வேலைய கூட செய்விங்கலாம்..”என்று அவளை பற்றிக் கூறிகொண்டே அமரிடம் சென்றான்.

“ஹாய்..,அமர்.”என்று அவனிடம் கை குளிக்கியவன்,”நீங்க டோன்ட் கேர் பெர்சனாளிட்டினு கேள்வி பட்டேன்,என்றுக் கூறி கொண்டே அடுத்து அர்னவிடம் சென்றான் ஆகாஷ்.

அவன் தன்னை பற்றி கூறியதற்கு ஒரு சிரிப்பை உதிர்த்தான் அமர்.

அதுபோலவே,அனைவரிடமும் கைகுளிக்கி அவர்களை பற்றி அவன் தெரிந்தவற்றை கூறினான்.(கண்டிப்பா நான் சொல்லால அவன் என்ன இல்லாம ஒரு உளவு துறை வச்சி இருக்கான்...அத சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்)

மித்ராவை கான்டீனில் முழு நேரத்தையும் செலவிடாமல் ப்ராஜெக்ட்யையும் கொஞ்சம் பார்க்க சொல்லி அவளை கலாய்க்க தவறவில்லை அவன்.

அவன் கவியை நெருங்கி “ஹாய் மலர்..” என்று தனது கையை நீட்டினான்.அனைவரும் அதிர்ச்சியாக அவர்களையே பார்த்தனர். எல்லோரதும் கண்களும் கவினது முகத்தையே பார்த்துக்கொண்டி இருந்தது. அவள் கோபத்தை அடக்குவது அவளது முகத்தில் தெள்ள தெளிவாக தெரிந்தது.

அவனது கையை பற்றி குளிக்கியவள் ”ஹாய் சார், கால் மீ கவி” “ஏன் மலர்கூட நல்லாதானா இருக்கு..”என்று அவள் உருவிக்கொள்ள நினைத்த கையை விடாமலே கேட்டான்.

“அவளுக்கு அப்படி கூப்பிட்டா பிடிக்காது ஆகாஷ்..”என்று கவி எதாவது திட்டிவிடுவாள் என்ற பயத்தில் பதில் கூறினான் சுதாகர். “ஓகே.பட்,எனக்கு மலர்தான் கூப்பிட பிடிக்குது “என்று கவியினை பார்த்துக்கொண்டே கூறினான். “உங்களுக்கு புடிக்குதோ,பிடிக்கலையோ எனக்குனு ஒரு கொள்கை இருக்கு அதுல இந்த பெயர சொல்லி கூப்பிட்டா,நான் காதிலே வாங்க மாட்டேன்..”என்று கோவமாக கூறினாள் கவி. கவி கோவமாக பேசியதும் அனைவரும் யாமினியை என்ன செய்ய என்பதுபோல் பார்த்தனர்.இது மாதிரியே பேசிக்கிட்டு இருந்தாங்னா கண்டிப்பா சண்டையில தான் முடியும் என்பதால். அந்த சில வினாடி கேப்பில் கவியை இன்னும் நெருங்கிய ஆகாஷ், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “எனக்கும்,ஒரு கொள்கையிருக்கு,ஒரு தடவை கைய பிடிச்சிட்டனா ஆயுசுக்கும் விட மாட்டேன்” என்று ஆகாஷ் கூறவும்,அது வரை அவனது பிடியில் இருந்த தனது கையினை அவளது பலம்கொண்டு உருவிக்கொண்டாள் கவி. அவனது கண்கள் அவளது கண்களில் கலந்தது.

கண்ணுக்குள் கண் வைத்து கண் இமையால் கண்தடவி

சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ

பசியிழந்த வேளையிலே பெண்ணழகு என்மார்பில்

மூச்சு விடும் ரசனையை நுகராமல் போவேனோ

உன் கட்டுகூந்தால் காட்டில் நுழையாமல் போவேனோ

அதில் கள்ள தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ

நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ஒளிப்பதிவு

நான் செய்ய மாட்டேனோ(2)

நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்

அதை உனக்கு ஒலி பரப்ப மாட்டேனோ

என்னுயிரே நீதானே

அவளை ஒரு ஊடுருவும்பார்வை பார்த்துவிட்டு தனது பழைய நிலைக்கு வந்து அனைவரையும் நோக்கி பேச ஆரம்பித்தான் ஆகாஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.