“அய்யோ ஆகாஷ் நான் சும்மா கலாச்சேன்..”என்றாள் மித்ரா
“அவளை பத்தி எங்களுக்கு தெரியும் சார்,அவ சும்மா வந்தாலே விழுந்து விழுந்து கவனிப்பா நீங்க அவரோட பக்கத்து வீட்டுக்கே கூடி வந்திருகிங்க..”என்றுக் கூறினான் சுதாகர்.
தப்பித்தோம் என்று நினைத்த கவி,
“என்ன டிபென் செய்யட்டும் ..”என்றுக் கேட்க
“என்ன வேணாலும் செய் கவி,எனக்கு ஓகே..”என்று மித்ரா கூற
“அதுதான் அவளுக்கு தெரியுமே ,அவ கேட்டது எங்களை..” என்று அமர்க் கூற அங்கே ஒரு போர்க்களமே நிகழ்ந்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“சரி விடு மித்ரா.”என்று மித்ராவை சமாதானம் படுத்திய ஆகாஷ், கவியிடம் திரும்பி “இன்னைக்கி எல்லாரும் எங்க வீட்டுல சாப்பிடலாம், நீங்களும் அனுவும் குளிச்சிட்டு வாங்க..”
என்றுக் கூறினான் ஆகாஷ்.
“ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியினில் மடியினில் உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை.....”
அனுவும்,கவியும் கிளம்பி வந்ததும்,அனைவரும் ஆகாஷ் வீட்டிற்கு சென்றனர்.
ஆகாஷ் பாலை எடுத்துக்கொடுத்து கவியை காய்ச்ச சொன்னான்.
“அனு அப்படியே டிபனும் பண்ண ரெடி பண்ணுங்க,மாவு பிரிஜ்ல இருக்கு எடுத்துக்கோங்க.” என்றுக் கூறினான் ஆகாஷ்.
அதன் பிறகு கவி பால் காய்ச்ச, மற்ற பெண்கள் சாப்பாடிற்கு தேவையானதை செய்ய ஆரம்பித்தனர்.
பால் பொங்கிய உடன் அதனை பூஜை அறையாக ஒதுக்கிய பகுதியில் வைத்து படைத்தது விட்டு,அனைவருக்கும் அதனை கப்பில் ஊற்றி தந்தாள்.
ஆகாஷிடம் சென்றவள் ”பிடிக்கலினாலும் சாமி பிரசாதம் வேணாம்னு சொல்லக்கூடாது...”என்றுக் கூறி அவனுக்கு எடுத்து தந்தாள் கவி.
அதனை மறுக்காமல் வாங்கிகொண்டான்.
அதன் பிறகு அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு கொஞ்சநேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்படி அவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரமெல்லாம் ஆகாஷின் கண்கள் சமையலறையில் மதிய உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கவியினை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தன.
மற்றவர்கள் அதனை கவனிக்காமல் இருந்தாலும்,அவனையே பார்த்துக் கொண்டிருந்த அர்னவ் அதனை கண்டுக்கொண்டான்.
அவனுக்கு ஆகாஷின் மேல் இருந்த சந்தேகம் இன்னும் அதிகரித்தது.
ஒரு வழியாக கவி சமைத்த மதிய உணவையும் சாப்பிட்டுவிட்டு அனைவரும் விடைபெற்று சென்றனர்.அனுவும்,கவியும் அவர்களுடனே அவர்களது பிளாடிற்க்கு சென்றனர்.
தங்களது பிளாடிற்க்கு சென்றவர்கள்,உண்ட களைப்பு தீர சிறிது நேரம் உறங்கினர்.
கவியோ உண்ட களைப்பில் உறங்கிவிட,அங்கு ஆகாஷின் மனமோ ஒரு நிலையில் இல்லாமல், கவியையே சுற்றி வந்துக்கொண்டிருந்தது.காலையில் அவன் எடுத்த போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தான்.
தனது மனதை ஆட்சி செய்பவளையே சுற்றி சுற்றி கிளிக் செய்திருந்தான்.
காலையில் குளித்துவிட்டு கவி புடவை கட்டி வர பல நாட்கள் கழித்து கிடைத்த அந்த தரிசனத்தில் அவன் முழவதும் தன்னை இழந்திருந்தான்.அதன் பிறகு அவனது வீட்டில் அவள் உரிமையாய் வளையவந்து வேலை செய்தது,தனக்கு பால் பிடிக்காது என்பதால் அதை மறுக்காமல் குடிக்க சொன்னது,மதிய உணவில் அவனுக்கு பிடித்த வகைகளை செய்திருந்தது என்று ஒவ்வொன்றாய் நினைத்து பார்த்தவன் உறுதியாய் நம்பினான் அவள் மனதில் தான் இன்னும் இருக்கிறேன் என்று.
ஒரு ஐந்து மணியளவில் எழுந்தவள் தனது மொபைலை தேட ஆரம்பித்தாள்.
அப்பொழுதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது, அதை ஆகாஷின் பிளாட்டில் விட்டு வந்தது.
எப்படி அங்கே சென்று தனது மொபைலை எடுத்துவருவது என்று அவள் யோசிக்க ஆரம்பித்தால் கவி.
அங்கே சென்றால் அவன் கண்டிப்பாக எதாவது சீண்டுவான் என்று யோசித்து கொண்டிருந்தவள்,அனுவிடம் சொன்னாலும் வேற எதாவது பிரச்சனை வந்தாள் என்ன செய்வது என்று யோசித்தவள்,தானே போவது என்று முடிவு செய்து அவனது பிளாடிற்க்கு சென்று காலிங் பெல்லை அழுத்தினாள்.