(Reading time: 23 - 46 minutes)

டுத்தவளுக்கோ தூக்கம் வராமல் பழைய நினைவுகள் நினைவு வந்தது.

“ என் அருகில் நீ வரும் பொழுது

இதயம் வெளியில் குதிப்பது

போல் துள்ளி துடிப்பதேன்

நீ எனக்கு தேவையில்லை

என்று மூளை சொல்ல

உன் அருகாமை வேண்டும்

என்று மனம் சொல்ல

எதற்கு முக்கியதுவம் தருவேன்

நான் சொல்வாயட என்

பெண்மையின் பாதுகாவலனே

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

தனது தாத்தா மற்றும் மாமாவுடன் பயணபட்டாள் கவி மிகவும் மகிழ்ச்சியாக,காரில் வரும் போது உறங்காமல் தன்னை கேள்விமேல் கேள்விகேட்கும் தனது பேத்தியை பார்த்து பெருமையாக இருந்தது.அதேநேரம் இந்த வயதிலே அவளுக்கு வரமாக வந்துள்ள தனிமையை நினைத்து அவருக்கு வேதனையாக இருந்தது.

எந்த ஒரு நிலையிலும் அவளுக்கு தனிமையை தரக்கூடாது என்றும்,இன்று இருப்பது போல் அவளுடைய முகத்தில் இருக்கும் குறும்பும்,சிரிப்பும் என்றும் அவளிடம் நிலைத்து நிற்க வேண்டும் என்றும் அவர் உறுதி எடுத்துக் கொண்டார். அவருக்கு தெரியவில்லை அவரது உறுதியெல்லாம் உடையபோகிறது என்று, அதுவும் அவரது செல்லபேரனே அதை உடைப்பான் என்று ........

அவர்கள் வந்த கார் ஒரு வீட்டின் முன்பு போய் நிற்கவும்,அதுவரை தன் மாமாவிடம் பேசிக்கொண்டு இருந்த கவி பேச்சை நிறுத்தி விட்டு தன் மாமாவுடன் இறங்கி அந்த வீட்டை பார்க்க ஆரம்பித்தாள்.

அவளது ரசனையாக அந்த வீட்டின் முன்புறம் அமைந்த தோட்டம் அமைந்திருந்தது. அழகான பூக்கள் பூக்கும் செடிகள்,குழந்தைகள் விளையாட அமைக்கபட்டிருந்த பூங்கா என அந்த வீட்டின் முன் அமைந்திருந்த தோட்டமே அவளை கொள்ளை கொண்டன,எவ்வாறு அவளுக்கு பிடிக்காமல் போகும் அதை வடிவமைத்தது அவளது அன்னை அல்லவா....

அவள் அவ்வாறு பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு அருகில் வருவது போல் இருக்க திரும்பி பார்த்தவள் பயந்துவிட்டாள்,ஒரு நாய் அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தது,அதை பார்த்து பயந்து இவள் கத்துவதற்குள்,நடராஜன் வந்து அந்த நாயை அடக்கிவிட்டார்.

தனக்கு அந்த வீட்டில் நடக்க இருக்கும் வரவேற்பை உணராமல் அவளும் சந்தோசமாக அந்த வீட்டின் உள்சென்றாள் கவி.

வீட்டின் உள்ளேயும் அழகாக வேலை செய்யபட்டிருந்தது,அதனை அவள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவளது தாத்தா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார்.

வந்தவர்கள் அனைவரையும் அவள் ஒருமுறை பார்த்தாள் கவி.அவளை அங்கு ஈர்த்தது அவளது வயதை ஒட்டிய இரண்டு பேர்கள்.

அவளது தாத்தா அவளுக்கு அனைவரையும் அறிமுகபடுத்தும் படலத்தை ஆரம்பித்தார் அவர்.

“கவிகுட்டி, இவங்க எல்லோரையும் உனக்கு அறிமுக படுத்தவா ” என்று அவளிடம் கேட்டார் நாராயணன்.

“இவங்கதான் உன்னோட பெரிய அத்தை மஞ்சுளா,இவங்க உன்னோட சின்னமாமா நாகராஜன், இது உன்னோட சின்னஅத்தை நளினி,இது உனக்கு நம்ம வீட்டுல இருக்குற அராத்துங்க” என்று அனைவரையும் அறிமுகபடுத்தி வைத்தார் நாராயணன்.

நமக்கு இவ்வளவு உறவினர் இருக்கிறார்கள், நம்மளோட அம்மா சொன்னது போல் என்று நினைத்தால் அவள்.அவர்களுடன் நாம் சந்தோசமாக இருக்கலாம் என்று நினைத்தால் அவள். அவளது வருகை இருவருக்கு புடிக்கவில்லை என்று அவளுக்கு தெரியவில்லை. தனது நினைவுகளில் இருந்தவளை எப்பொழுதும் போல அனு தான் எழுப்பிவிட்டாள். அவளுடன் சாப்பிட்டுவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள் கவி. இந்த முறை அவளது மனம் பழைய நினைவுகளை நோக்கி செல்லாமல் அவளது கண்களை நித்ரா தேவி தழுவிக்கொண்டாள்.

“எங்கே எங்கே....நீ எங்கே என்று

காடுமேடு தேடி ஓடி இருவிழி தொலைத்துவிட்டேன்

இங்கே இங்கே நீ வருவாயென்று

சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில்

உயிர் வளர்த்தேன்

தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய்

கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்

இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் ”

ஞாயிறு வைகறை அந்த ஞாயிறின் மஞ்சள் நிற கரங்களால் அழகாக விடிந்தது. காலை 8மணி அளவில் காலிங் பெல் ஒலியில் கண் திறந்தாள் கவி.மணியை பார்த்தவள் ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட நிம்மதியா தூங்க விட மாட்டுறாங்க இந்த அனு இடியே விழுந்தாலும் எழாத மாதிரி தூங்கிக்கிட்டு இருக்கா என்று நினைத்துக்கொண்டே கதவை திறந்தவள் அப்படியே மெய்மறந்து நின்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.