(Reading time: 23 - 46 minutes)

தவை திறந்த ஆகாஷ்,அவளை பார்த்து ஒரு புன்னகை செய்ய,கவியோ மனதிற்குள் அவன் எது செய்தாலும் வாயை திறக்க கூடாது என்ற முடிவுடன் வந்திருந்ததால் அவன் சிரித்ததை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றவள் தனது மொபைலிற்கு,அனுவின் மொபைலில் இருந்து

கால் பண்ணி தேட ஆரம்பித்தால்.

அவளது நினைப்பில் உழன்றுக்கொண்டிருந்தவன் தனது நினைவுகளின் தேவதையே தன் முன் வந்து நிற்க,அவளிற்கு வழிவிட்டு விட்டு,கதவை சாத்தி விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

Avalukku oru manam

மொபைலின் ஒலி சமையலறையில் இருந்து வர அதை எடுக்க சென்றாள் கவி.மொபைலை ஒரு வழியாக தேடி எடுத்தவள்,திரும்ப ஆகாஷின் மேல் முட்டி நின்றாள்.அவன் அவளையே பின்தொடர்ந்து வந்திருந்தான்.

கோபத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்கள் பேசிய பாஷையில் கட்டுண்டு கிடந்தாள். மூளை அவள் இவ்வளவு நேரம் எடுத்த பாடங்களில் எல்லாம் தோற்று யோசிக்கும் திறனற்று அவன் முன் நின்றிருக்க, கன்னி அவளுக்கு உதவி செய்யாமல் கை விரித்தது.

அவனை தாண்டி செல்ல வழியில்லாமல் அங்கு இருந்த சுவற்றில் சாய்ந்துக் கொண்டாள்.

ஆகாஷின் கைகளோ நிமிர்ந்து பார்த்த அவளது முகத்தை ஏந்திக் கொள்ள,அவனது முகமோ, அவளது முகத்தை நோக்கி இறங்கியது. அவனது மூச்சுக்காற்று,அவளது கன்னங்களில் பட்டு அவற்றை செம்மையுற செய்ய,அதனை கண்டவனின் கண்கள் அவளது கன்னங்களில் நிலைக்க அவனது வலது கை விரல்கள் தானாகவே உயரே எழுந்து அவளது முன் நெற்றியில் வலம் வர அவன் பரிசம் தாங்காமல் ஏற்கனவே சொக்கி இருந்தக் கண்கள் முழுவதுமாய் மூடிக் கொள்ள,அவனது கை விரல்கள் கண்,மூக்கு என்று வலம் வந்து அவளது கன்னங்களில் இறங்கி அவளது கன்னத்தில் ஓட்டி இருந்த ஸ்டிக்கர் பொட்டை மெதுவாக பிர்த்தெடுத்து, அதனை அவளது வில் போன்ற கண்களிற்கு அம்பாய் அமைந்த இரண்டு புருவங்களின் இடைவெளியில் ஓட்டினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஒட்டிவிட்டு அவளின் காதுகளில் தனது உதடு உரசும் மாறு பேச ஆரம்பித்தான்.

“ஏய், அழகி இப்பதான் அழகா இறுக்க..”என்று கூற

“போடா, ஸவி மாமா..”என்றுக் குழைந்தக் குரலில் அவள் கூற, பலநாள் கழித்து தன்னை அவள் அப்படி அழைக்க, தன்னவளின் குரலில் முழுவதுமாய் தொலைந்தவன்,அவளை தன்னோடு இறுக்கி அணைக்க எண்ணி அவனது வலது கையை அவளது இடுப்பு நோக்கி நகர்த்த அந்த வேலையில் அவனது மொபைல் ஒலித்தது.

மொபைலின் ரிங் டோனில் விழி விரித்தவள்,அந்த ரிங்க்டோனில் உள்ள பாடல் வரிகளில் சுய உணர்வுப் பெற்று அவனை தள்ளி விட்டு விட்டு தனது பிளாட்டை நோக்கி சென்றாள்.

(அவனோடா ரிங்க்டோன் என்னானு உங்களுக்கே தெரியும் அப்ப அவளுக்கு கோபம் வரதுல தப்பு ஒன்னும் இல்லைல..)

தாமரையே தாமரையே நீரினில் ஒளியாதே

நீ நீரில் ஒளியாதே

தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்

அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்

சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை

விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்

மரம்கொத்தியே மரம்கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்

குளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்.......... தூங்கும் காதல் எழுப்புவாய்

நீ தூங்கும் காதல் எழுப்புவாய்

அவள் அப்படி தள்ளிவிட்டு சென்றதில் அவனுக்கு கோபம் வரவில்லை. அவள் தன்னை மனதில் நினைத்துக் கொண்டு இவ்வாறு தன்னை விட்டு தூரம் செல்ல நினைக்கும் அவளின் முடிவு தான் அவனை வேதனை கொள்ள செய்தது.

தனது மொபைல் மீண்டும் ஒலி எழுப்ப அவனது சிந்தனையில் இருந்து கலைந்தவன், அழைப்பை ஏற்றான்.

“சொல்லுடா..”

“......”

“என்ன அதுகுள்ளவா,நானே இப்பதானடா வந்தேன்...”

“.....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.