(Reading time: 7 - 14 minutes)

13. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

டுத்து என்ன என்று அறியாத நிலையில் வாழ்க்கை நம்மை நகர்த்தி சென்றிடும் முறைதான் சுவாரஸ்யத்தின் உச்சம்.! இனிநம் வாழ்க்கை எந்த திசையில் பயணிக்க போகிறது என்ற எண்ணம் அறியாத நிலையில் ஆச்சர்யத்திற்குபஞ்சமே இல்லை.

அதுபோல தான் இன்றும் தன் வாழ்வின் பெரும்பகுதியை ஆட்கொள்ள போகிறவளை சந்திக்க போகிறோம் என்று அறியாதவனாய் சரவணனின் காரிலிரிந்து இறங்கினான் ராகவேந்திரன்.

அது அர்ப்பணாவின் வீடு! ஆடம்பரத்தின் உச்சத்தை அந்த வீடு பிரதிபலித்தது.எல்லாம்பேராசை பிடித்த அவளின் தந்தையின் ஏற்பாடு என்று யார் அறிவார்?

எந்த ஒரு அலட்டலுமின்றி அவள் வீட்டு வளாகத்தினுள் நுழைந்தான் ராகவன். ஏற்கனவே காரில் சரவணன் அர்ப்பணாவைப் பற்றி சொல்லியிருந்தான். அவன் சொல்லி முடித்ததுமே ராகவனுக்கு அதிருப்தியாகத்தான் இருந்தது.

“ஏன்டா,இதெல்லாம் ஒரு நியூஸா? ஒரு பொண்ணோட ஃபோட்டோ கேவலமா வெளில வந்திருக்கு,,அதை எப்படி சரி பண்ணனும்னு இல்லாமா,அது யாரு என்னனு கேட்பீங்களா? அந்த பொண்ணோட மனசை பத்தி கவலையே இல்லையா?”என்று கேட்டிருந்தான் ராகவேந்திரன். ஒரு புன்னகையுடன் பதிலளித்தான்.

“மச்சி இது எங்க தொழில். இது முழுக்க முழுக்க சரின்னு நான் சொல்லல அதே நேரம் நூறு சதவிகிதம் தப்பும் இல்லையே. ஸ்டார் அப்படின்னுஒரு எடத்துலஇருக்குறவங்களுக்கு ப்ரைவசியே இல்லை.அவங்க வாழ்க்கையிலெ எது நடந்தாலும்,அது மக்களுக்கு தெரியனும். அவங்க அதிகமாய் விஷயங்களை மறைக்கிறதுனாலத்தான் தெரிஞ்சுக்கனும்னு ஒரு ஆர்வம் எல்லாருக்கும் உருவாகுது..!”

“புல்ல்ஷிட்..இந்து ஆர்வம் இல்லை..அதிகபிரசங்கித்தனம்”

“இருக்கட்டும்டா..! சமுதாயத்தின் ஆர்டிஸ்ட்குன்னு ஓர் இடம் இருக்கு.  முன் நிலையில் நிறுத்துறாங்க. முதல் மரியாதையும் உண்டு. ஒன்னு கிடைக்கனும்னா ஒன்னை இழக்கனும் மாதிரி, இவங்க ப்ரைவசியை இழந்து புகழை அடைஞ்சுட்டாங்க விடு”என்று அந்த பேச்சுக்கு சுமூகமான முறையில் முற்றுப்புள்ளி வைத்தான் சரவணன்.என்னதான் இருந்தாலும் பத்திரிக்கை நிருபன் அல்லவா? வார்த்தகள் அவன் பேச்சில் வலியே இல்லாமல் நழுவி ஓடின.

நண்பனுடன் இதை விவாதித்த ராகவனுக்கு மனதில் ஏதோ ஒரு மூலையில் இனம்காண முடியாத தவிப்பு, ஒருமுறை அவளை பார்த்துவிட வேண்டும்.என்ன செய்து கொண்டிருப்பாள்?அழுது கொண்டிருப்பாளா?வெட்கி இருப்பாளா? போன்ற கேள்விகள் ஒரு புறம் அலைக்கழித்தன.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

ன்னொருபக்கம் தன்னைப் பற்றிய வந்திருந்த ஆபாசமான படங்களைப் பார்த்து உடைந்து போயிருந்தாள் அர்ப்பணா! “வினய்”கசப்பும்,வலியும் கலந்த குரலில் அவன் பெயரை உச்சரித்தாள்.

கனவிலும் இப்படியொரு துரோகத்தை அவள் எதிர்ப்பார்க்கவில்லை! அவன் முரடன்தான்,  ஆதிக்கவாதிதான். காதலின் ஆழம் புரியாதவன்தான். ஆனால் ஒரு பெண்ணின் கற்பினை கலங்கபடுத்தும் அளவிற்கு கேவலமானவன் என்று அவள் நினைத்து பார்க்கவே இல்லை.

தன் ஃபோனில் பேஸ்புக்கை திறந்து பார்க்க,அங்க பல வினய்கள், வினைகளான வார்த்தகளை கொட்டியிருந்தனர்.

“ஹீரோயினிகளில் ஏதுடா பத்தினி?

இப்போதானே கொஞ்சம் ரிலீஸ் ஆயிருக்கு?”

இவ மூஞ்சிய பார்த்தாலே உண்மைதான்னு தெரியுது!”

“கொடுத்து வெச்ச வாழ்க்கை”இப்படி பலரும் பலவிதமாய் விமர்சித்து இருக்க,அவளுக்கு அங்கமெல்லாம் எரிந்தது.

எங்கோ ஒரு மூலையிலமர்ந்து கொண்டு முகத்தை கூட காட்ட அவசியமில்லாமல் வெட்டி கருத்துகளை சுமந்திடும் வாய்ப்பு ஏன் இவர்களுக்கு தரப்படவேண்டும்? பெண்ணாய் அவதூறுபேசக் கூடாது என்ற சின்ன படிப்பினையை கூடவா இவர்களாய் கடைப்பிடிக்கமுடியவில்லை?

சினிமாவுக்காக, என் சொந்த வாழ்வின் கனவுகளைத்தான் துறந்தேன், என் சின்ன சின்ன ஆசைகளைத்தான் அடகு வைத்தேன்! என்னையும் என் பெண்மையையும் நான் யாருக்கும் விற்கவில்லையே! இதுவரை கவர்ச்சி என்ற வார்த்தையை வசனத்தில் கூட சேர்க்கவில்லையே!எந்த நடிகரிடமும், படப்பிடிப்பைப் பற்றி தவிர்த்து பேசியதில்லையே! லேசாய் துப்பட்டா நகர்ந்தாலும் அதை சீர் செய்து கொள்ளும் சுய ஒழுக்கம் மறைவில்லையே! அப்படியிருக்க, ஏன் என்னை இந்த சமுதாயம் இப்படி சித்தரிக்க வேண்டும்?

நேற்றுவரை அழகிய பெண், திறமையான நடிகை, நம்பிக்கை நட்ச்த்திரம் என்று என்னை பாராட்டு மழையில் நனைய விட்டார்களே! இன்று மழைத்துளியெல்லாம் அமிலமாகிறதே! என்று அவள் அரற்றும்போதே அவள் அறைக்குள் நுழைந்தார் சொக்க்லிங்கம்! அர்ப்பணாவின் தந்தை.

“அப்பா” என்று அவள்கேவிட, அவளை அணைத்து ஆறுதல் சொல்லும் கடமையை மறந்திருந்தார் அவர், அவரைப்பொறுத்தவரை, இது வீழ்ச்சி! மிக பெரிய சரிவு! கஷ்டப்பட்டு இவளை சினிமாவிற்குள்நுழைத்து, கார் ,வீடு பணமெனவசதியாய் வாழவேண்டிய நேரத்தில் இவள் பெரும் ஏமாற்றத்தை தந்து விட்டாளாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.