(Reading time: 7 - 14 minutes)

ர்ப்பணாவின் அம்மாவோ அதற்கும் ஒருபடி மேல்.”நீயெல்லாம் என் மகளா?”என்று பார்வையாலேயே அவளை உதாசினப்படுத்தினார்.தளரவில்லை அவள்! அவளிடம் நேர்மை நிரம்பியிருந்தது. தன் காதலைப்பற்றியும் வினயைப் பற்றியும் எடுத்து சொன்னாள் அவள்.இதெல்லாம் அறிந்தால் தன் பெற்றோர்கள் தன்னை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை!

கடைசியில் அந்த நம்பிக்கையில் மண்தான் விழுந்தது. “என்மேல நம்பிக்கை இல்லாதவ்ங்களுக்கு என் வீட்டில் இடமில்லை..வெளில போங்க!” விரக்தியில் கத்திவிட்டு சிங்கமாய் இறங்கி வந்தாள் அர்ப்பணா.

அதீத வலியும் ஏமாற்றமும் அவளது பயம் தயக்கமென்றகூட்டினை உடைத்து விட்டது.இனி இழப்பதற்குத்தான் எதுவுமே இல்லையே!   அவள் ஒவ்வொரு படியாய் கீழிறங்க, அவள்முகத்தில் நம்பிக்கை படர்ந்தது.

“ நான் என்ன சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.. என்னை நான் நிரூபிக்க வேண்டிய அவசியம், வாய்ப்புகளும் இருக்கும் பட்சத்தில், ஆதாரத்துடன் உங்க கிட்ட பேசுறேன்”என்று நிருபர்கலிடம் சொன்னவள், காரை எடுக்க, ராகவன் வியப்பின் விளிம்பில் இருந்தான்.

“பெண்ணா இவள்? சக்தி! மஹாசக்தி! அந்த பாரதி அனுதினமும் வணங்கிவந்த சக்தி!”என்றே தோன்றியது அவனுக்கு. அவள் அடுத்து என்ன செய்ய போகிறாளென்ற ஆர்வம் ஒரு பக்கம் எழ, நண்பனிடம் கூட சொல்லாமல் அவளை பின் தொடர்ந்தான் ராகவேந்திரன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அவள் வந்து நின்றதோ, கமிஷ்னர் ஆஃபிசிற்குதான். ராகவன் அங்கு இல்லாத நிலையில் அவனுக்கும் கீழ் உள்ள அதிகாரியிடம் முறையாக வினய் மீது புகார் ஒன்றை கொடுத்துவிட்டு சென்றாள் அர்ப்பணா.அவள் செல்லும்வரை ஒரு ஓரமாய் நின்றிருந்த ராகவேந்திரன் இப்போது கம்பீரமாய் அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைய, அங்கு அவர் அலட்சிய குரலில் பேசிக்கொண்டிருந்தார்.

“ஆமா,இவங்களே தப்பு பண்ண வேண்டியது..அப்பறம் நல்ல பேருக்காக நம்மதாலியை அறுக்க வேண்டியது..இன்னும் ரெண்டு நாளில் பத்திரிக்கைகாரவங்களை கூப்பிட்டு,எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை,, இதபத்தி நான் போலிஸ் ரிபோர்ட் பண்ணிருக்கேன்னு, ஆதாரத்தைக் காட்டி வாயை அடைச்சிருவாங்க.. இவங்களுடைய போதைக்கு நாம ஊருகாய்”என்று அந்த அதிகாரி வாய்விட்டு தன்னதனியே புலம்ப,

“பரவாயில்லையே!”என்று அமர்த்தலான குரலில் சொன்னபடி உள்நுழைந்தான் ராகவன். அவனைப் பார்த்த்துமேஎழுந்து நின்று சலூட் வைத்தார் அவர்.

“வாங்க சார்”

“என்ன சார், கேஸை விசாரிக்காமலேயே ஜட்ஜ்மண்ட் தருவீங்க போல?” உருமும் குரலில் கேட்டான் ராகவன்,

“அப்ப்டி இல்லைங்க சார்..”

“வேறேப்படி?”

“சினிமா நடிகைன்னா?அவங்களும் பொண்ணுதானே ? அவங்களும் இந்த நாட்டு பிரஜை தானே?”

“..”

“நடிகர்களை ஒதுக்கிடுவோம்னு நாம உறுதிமொழி எடுக்கலையே!”

“அப்படியெல்லாமில்லைங்க சார்.. இது ஒரு சாதாரண கேசு”

“அப்படின்னு நாம வாய்வார்த்தையா சொல்ல முடியுமா சார்? கலத்தில் இறங்காமல் முடிவுக்கு வருவது நல்ல போலிசிற்குஅழகா?”

“..”

“இதயொரு தனிப்பட்ட நடிகையின் பிரச்சனையா பார்க்காமல் சமுதாய பிரச்சனையா பார்ங்க. சராசரி பொண்ணுங்க தொடங்கி சினிமா நடிகைவரை ஃபோட்டோ மோர்பிங்க் ப்ரச்சனையால் பாதிக்க படுறாங்க! அதை எப்படி சமாளிக்கனும்னு பாருங்க!”

“யெஸ் சார்!”

“ஒரு வேளை இந்த நடிகை தற்கொலை பண்ணிக்கிட்டா என்ன செய்வீங்க?”

“சார்??!!”

“பதில் சொல்ல முடியாதுல?அந்த நிலைக்கு அவங்களை தள்ளாமல் சீக்கிரம் என்ன பண்ண முடியும் பாருங்க..எனக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை இதைப்பத்தி அப்டேட் வேணும்”என்று விட்டு நடந்தான் ராகவன். அவனுக்குள் எழுந்த அந்த உணர்வுகளில் பெயர் அறியாமல் அவளையே யோசிக்க ஆரம்பித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

-வீணை இசைந்திடும்-

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.