(Reading time: 7 - 13 minutes)

21. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

என் காதலை உன்னிடம்

 சொல்லும் வரை

கனத்திருந்தது என் மனது

 

அக்காதலைச் சொல்லியே 

ஆன பின்னே இப்போது

களைத்திருக்குது என் மனது

 

ஒரு காதல் பார்வை,,,,,,,,,,,,,

 அதை நீ பார்ப்பாயா?

 

ஒரு காதல் வார்த்தை,,,,,,,,,,,,

 அதை நீ சொல்வாயா?

 

ஒரே ஒரு சம்மதம் அதை தந்தே

 

என் நெஞ்சினில் பூ பூக்க

நீ செய்வாயா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ரு நாளின் ஒரு பொழுதைப் போல அவசரமாய் கடந்து விட்டிருந்தது ஒரு வாரம். பிக்னிக் அன்று அனிக்கா தனக்கு கடலுக்குள் நிகழ்ந்த சம்பவத்தைக் கூறும் போது கொண்ட பயத்தையும், நடுக்கத்தை பார்த்த போது ரூபனின் கோபம் முன்னிலும் பன்மடங்காகி இருந்தது. அந்த சம்பவம் குறித்து அவள் பயந்து விடக் கூடாது என்பதற்காகவே அண்ணனும் தம்பியும் அதை பெரிது படுத்தாதவாறு வெளிக்காட்டிக் கொண்டார்கள், ஜீவன் பேச்சை மாற்றி அவளை கலகலக்க வைத்தான். அவளுடைய பாதுகாப்பிற்கான ஏற்பாட்டை துப்பறியும் நிறுவனத்தின் பதில் கிடைக்கும் வரைத் தொடர ரூபன் கேட்டுக் கொண்டிருந்தான்.

அன்று டிடெக்டிவ் ஏஜென்சியினர் கேட்டுக் கொண்டவாறே ரூபனும் ஜீவனும் அனிக்காவின் அருகாமையில் இல்லாமல் தொலைவில் இருக்க , அவள் ரூபனைத் தேடி பஸ்ஸிற்கு வந்த அந்த மதிய நேரம் யாரோ ஒருவர் அவளை பின்தொடரவிருந்ததாக கிடைத்த தகவல் வேறு ரூபனை மிகவும் பதட்டப் படுத்தி இருந்தது.

ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி ஏராளமான ஆர்டர்களால் ஃபாக்டரியில் குவிந்திருந்த வேலைகள் ரூபனை மூச்சடைக்க வைத்தனவென்றால், இந்த புது புது பிரச்சினைகளும் திணறடிக்க செய்தன.மற்ற பிரச்சினைகளோடு கூட அவன் அனிக்காவிடம் காதல் சொன்ன நேரம் தொட்டு , அவள் யோசித்து சொல்கிறேன் என்றுச் சொன்ன சொல்லுக்காக தினம் தோறும் எதிர்பார்த்து எதிர்பார்த்து அவன் ஏமாந்துக் கொண்டிருந்தது வேறு அவனை படுத்தி வைத்தது. ஏதோ எதிர்மறையாகச் சொல்லாமல் இப்படியாவது சொன்னாளே என்கிற ஆறுதல் ஒரு பக்கமும், சின்னதான சஞ்சலம் மறுபக்கமுமாய் அவனை வாட்டியது. ஏதோ கைப் பொருளை களவு கொடுத்து விடுவோமோ என்பதைப் போன்ற பரிதவிப்பிலிருந்து விடுபட, சீக்கிரமாய் அனிக்காவை திருமணம் செய்வது ஒன்றுதான் வழி என்று அவனுக்கு தோன்றியது.

ன்றிரவு வழக்கமான ஜீவனுடனான உரையாடலில் தன் எண்ணங்கள் அத்தனையையும் ரூபன் புலம்பி தள்ளினான்.

வழக்கம் போல ஜீவன் அதைக் கேட்டு கிண்டலாக சிரித்து வைக்க,

என்னடா உனக்கு சிரிப்பாயிருக்கு?

உன் மேரேஜ் அரேஞ்ச்ட் ஆ தான் முடியும் நீ வீணா லவ் மேரேஜ் செய்ய ட்ரை செய்யாத…..

எப்ப பார்த்தாலும் எடக்கு மடக்கா தான் பேசுவியாடா…. என் மேரேஜ் அரேஞ்ச்ட் தான் லவ் கம் அரேஞ்ச்ட் மேரேஜ்……கண்களில் காதல் மின்ன சொன்னவனைப் பார்த்து கேலியாக சிரித்தவன்,

நாங்கள்லாம் உண்மைதான் பேசுவோம் அதான் உனக்கு எடக்கு மடக்கா தெரியுது…………..

நானே அவ எப்ப பதில் சொல்லுவான்னு பார்த்துட்டு இருக்கேன் நீ என்னடான்னா இப்படிச் சொல்லுற…

உனக்கு பிடிச்ச ஆள் அப்படி, அதுக்கு நான் என்ன செய்யிறது. அவ சட்டுன்னு உன்னை எனக்கு பிடிக்கும்னு உன்கிட்ட வந்து பதில் சொல்வான்னு நினைக்கிறியா? அது கொஞ்சம் கஷ்டம் தான். அவளுக்கு அவ அப்பா ,அம்மா, அண்ணா எல்லோரும் தான் ரொம்ப முக்கியம், ஸ்கூல்லயே ரொம்ப பயந்து தான் நடந்துக்குவா. நாம இப்படிச் செஞ்சா அவங்களை ஹர்ட் செய்யற மாதிரி ஆகிடுமோன்னு யோசிக்கிற குணம் வேற……எனக்கு அவளைப் பத்தி நல்லா தெரியும் அதான் அப்படிச் சொன்னேன், அதுக்கு நான் உன் காதலுக்கு எதிரின்னு அர்த்தம் கிடையாதுண்ணா, என்னால ஓரளவுக்கு அவ மைண்ட ரீட் செய்ய முடியும் அத வச்சி அவ இப்ப எப்படி யோசிச்சிட்டு இருப்பான்னு சொன்னேன்.

ம்ம்… அப்ப அவ சொல்ல மாட்டாங்கிறியா? பெருமூச்செரிந்தான்.

எதுக்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசற ஆள் அவ, பின்ன எப்படி இருப்பா?, லாஸ்ட் வீக் அவ பெஸ்ட் ஃபிரண்ட் சில்வியா மேரேஜ்க்கே அவ போகலை………

ஏன் லவ் மேரேஜ்ங்கிறதாலயா? அவங்க பேரண்ட்ஸ் ஒத்துக்காத மேரேஜா……..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.