(Reading time: 12 - 23 minutes)

29. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ரு வாரங்கள் கடந்த நிலையில் அன்று பரத் மற்றும் சுபத்ராவிற்கு ரா தலைவரிடமிருந்து அழைப்பு வந்தது. அன்று போல் இன்றும் பரத் அவளை வெளியே போவது போல் அழைத்து கொண்டு சென்றான்.

அங்கே அவர்கள் சீப் ஆபீசரோடு  வேறு ஒரு நபரும் இருந்தார். இவர்கள் இருவரையும் வரவேற்ற சீப் “ஹாய்.. guys.. வாங்க .. “ என்றவர் “இவர் Mr. மிதுன் .. ஒன் ஒப் அவர் ரா ஆபீசர் “ என்று அறிமுகபடுத்த . ஆச்சரியத்தில் ஞே என்று விழித்தாள் சுபா ..

மிதுனிடம் “மிதுன்... இவர் Mr. பரத் .. & Ms. சுபத்ரா..” என்று அறிமுகபடுத்த , வேகமாக ஏதோ சொல்ல வந்த சுறா , மிதுன், பரத் முகங்களை பார்த்தவள் அமைதியாக அவளும் ஹலோ என்று சொன்னாள்.

“உங்க மூணு பேரையும் ஏன் இங்கே வர சொன்னேன் என்றால் உங்க மூணு பேரோட ரிப்போர்ட்டும் கிட்டத்தட்ட ஒன்னு போல் இருக்கு.. அதுனாலே ஒரு மீட்டிங் போட்டு நாம தெளிவு படுத்திக்கலாம் என்று தான் அழைத்தேன்.. “ என்றார்.

“எஸ்.. சீப்..” என மூணு பேரும் சொல்லவும்,

“முதலில் பரத் .. உங்களோட ரிப்போர்ட் என்னன்னு explain பண்ணுங்க..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“சார்.. எனக்கு கிடைத்த தகவல் பாகிஸ்தானில் இருக்கும் நம்ம secret agents கிட்டேர்ந்து கிடைத்த தகவல்.. அதன் படி பாகிஸ்தான் பிரதமரும், ராணுவ தளபதியும் ரகசியமா சந்திச்சு இருக்காங்க.. அந்த தகவல் எந்த மீடியாவிற்கும் வெளிலே வரவில்லை. அதோட அந்த சந்திப்பு நடந்த இரு வாரங்களில் பாகிஸ்தான் ராணுவ துணை தளபதி ராவல் பிண்டியில் இருந்து ச்கர்டு ராணுவ முகாம் போயிருக்கார்.. அவரை தொடர்ந்து நம்ம secret agents போக முடியவில்லை.. அங்கே ராணுவ அணிவகுப்பு மும்மரமாக நடைபெறுவதாக தகவல் சொல்றாங்க.. “

பரத் சொன்ன தகவல் மூணு பேரும் கேட்டுக் கொண்டனர். அடுத்து சீப் மிதுனிடம்

“மிதுன் உங்களுக்கு கிடைத்த தகவல் என்ன?”

“சார். எனக்கு நம்ம காஷ்மீர் secret agents கிட்டேர்ந்து தகவல் கிடைச்சுருக்கு.. xxx .. தீவரவாதிகள் சில பேர் ஸ்ரீநகர் ... லே .. ஹை வே பிளாக் பண்ணிட்டதா தகவல் வந்துருக்கு.. அதுவும் நம்ம ராணுவ முகாம் climate ப்ரோப்லேம் இருப்பதால் பக்கத்து நகரத்திற்கு மூவ் செய்துருக்காங்க... இந்த நேரத்தில் நம்மோட ராணுவ தளத்தில் ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா தகவல் செய்துர்க்காங்க..”

“இப்போ சுபத்ரா நீங்க சொல்லுங்க..”

“சார் .. ஒரு பர்டிகுலர் வெப்சைட் xxx.. லே கடந்த ரெண்டு வாரங்களா கோடிங் மூலமா தகவல் பரிமாற்றம் நடக்குது.. முதலில் ஏதோ error என்றுதான் நினைத்தேன்.. ஆனால் தொடர்ந்து வேற வேற மெசேஜ் வரவும் அதை decode பண்ணினேன்.. அதிலே கிடைத்த தகவல் சில machinery code மாதிரி இருந்தது .. அவை எல்லாம் பதர் ஜியாத்க்கு வந்து விட்டது.. அதே மாதிரி அங்கே உள்ள xxx அமைப்பை சேர்ந்தவங்க இதில் இந்த இடத்திலிருந்து .. இங்கே போக வேண்டும் என்ற உத்தரவும் இருக்கு.. முதலில் சாதாரணமா எடுத்து கிட்ட நான் அந்த வெப்சைட் பற்றிய இன்போ எல்லாம் பார்த்தப்போ , அது xxx இந்த இயக்கத்தோட தளம் என்று தெரிந்து கொண்டேன்.. அப்போ தான் இது தீவிரவாதிகள் ஊடுருவலா இருக்குமோன்னு தோணிச்சு.. நான் இப்போதான் trainee ஆக இருப்பதால் யார் கிட்ட சொல்லன்னு யோசிச்சு , பரத் சார் கிட்ட ஹெல்ப் கேட்டேன்.. அவர் உங்க கிட்டே அழைச்சுட்டு வந்துட்டார்.. “ என்று சொல்லி முடிக்கவும்

“குட்.. உங்க மூணு பேரோட தகவலும் கார்கில் பகுதியில் ஏதோ அந்நிய நடமாட்டம் இருக்கோ என்ற சந்தேகம்.. இப்போ ஒரு slide ஷோ உங்களுக்கு காண்பிக்கிறேன்... பாருங்க..” என்றபடி போட்டோஸ் காண்பித்தார்.. அதில் கார்கில் அடுத்துள்ள மலை முகடுகளில் சில மனிதர்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் இருந்தது.. கிட்டத்தட்ட 20 போட்டோ பார்த்தனர்.

அவர் முடிக்கவும் அவரை மூவரும் கேள்வியாக பார்க்க,

“இது அங்கே நம்ம லெப்டினென்ட் கர்னல் அர்ஜுன் அனுப்பிய படங்கள்.. இதிலே தெளிவா தெரியுது .. அங்கே நிச்சயம் அந்நிய நடமாட்டம் இருக்கு என்பது.. இப்போ நம்ம PM & defence மினிஸ்ட்ரி யோசிக்கிறது என்னவென்றால் இது பாகிஸ்தான் ராணுவ செயலா அல்லது xxx தீவிரவாதிகள் ஊடுருவலா என்பது.. அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அதை அங்கே உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.. இப்போ நம்முடைய வேலை என்ன என்று வரையறுக்கதான் உங்களை கூப்பிட்டு இருக்கேன்.. “ என,

“எஸ் சார்.. “ என்று அலெர்ட் ஆக மூன்று பேரும் கவனிக்க ஆரம்பித்தனர்.

“முதல் வேலை .. சுபத்ரா உனக்கு வெப்சைட் டிசைன் செய்ய தெரியும் இல்லையா? “

“எஸ் சார்.. “ என்றாள்..

“ஒரு secret வெப்சைட் ஆபரேஷன் விஜய் இந்த பெயரில் ஓபன் செய்ய வேண்டும்.. அதில் நீ, பரத், மிதுன், அர்ஜுன், என்னுடைய பெயர், மற்றும் நம்ம PM. defence மினிஸடர், ஆர்மி சீப் ஜெனரல். இந்த எட்டு பேர் மட்டும் தான் ஓபன் செய்யுமாறு இருக்க வேண்டும்.. அதற்கு உனக்கு மூன்று நாட்கள் டைம்.. அதற்குள் நீ எல்லா விஷயங்களையும் பாதுகாப்பு முறைகள் குறையாமல் முடித்து இருக்க வேண்டும்.. அந்த வெப்சைட் ஆபரேஷன் பற்றிய முழு தகவல்களும் நான்காம் நாள் காலையில் என்னிடம் கொடுக்க வேண்டும்.”

“எஸ் சார்..” என்றவள் சற்று தயங்க “சார்.. எனக்கு superior இடம் என்ன சொல்ல வேண்டும்” என கேட்டாள்..

“ஹ்ம்ம்.. உனக்கு வேலை இங்கே இல்லை.. நீ செல்ல வேண்டியது கார்கில் அடுத்துள்ள லடாக் நகருக்கு .. அங்கே சென்று நம்முடைய ராணுவ முகாமில் வேலை செய்ய வேண்டும்..”

“எஸ் சார்.. “ என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.