(Reading time: 12 - 23 minutes)

டுத்து பரத் நீ உன் secret agents இன்னும் முடுக்கி விட்டு கிடைக்கிற தகவல்கள் வெப்சைட் மூலம் கொடு.. நீ இங்கே டெல்லியிலே இரு.. நானும் defence மினிஸ்டரும் ஜம்முவில் டென்ட் போடுகிறோம்.. எதுவும் உத்தரவு தேவை என்றால் கொடுப்பதற்கு.. அதனால் நீ இங்கே இருந்தால் அதிகம் யாருக்கும் சந்தேகம் இருக்காது.. “

“எஸ்.. சார்.. “ என்றான் பரத்.

“மிதுன் .. நீ .. இங்கிருந்து ஸ்ரீநகர் சென்று விடு.. அந்த xxx தீவிரவாதிகள் ஊடுருவல் பற்றிய உண்மை தகவல்கள் கொடு.. “ என,

“எஸ் சார்.. “ என்றான் மிதுன்..

கையோடு சுபத்ராவின் temproary deputation போஸ்ட் என போடப்பட்டு அவளின் ட்ரைனிங் incharge க்கு மெயில் அனுப்பிய copy உம .. கொடுத்தார்..

“சுபத்ரா.. இங்கிருந்து உனக்கு இன்று இரவு லடாக் செல்ல டிக்கெட்ஸ் .. எல்லாம் பரத் ஏற்பாடு செய்வான் .. அதன் படி நீ தயாராகி விடு.. “ என, மூவரும் அவருக்கு விறைப்பாக ஒரு salute வைத்துவிட்டு கிளம்பினர்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

மூவரும் சீப் வீட்டு வாசலை விட்டு வெளியே வந்ததும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பரத் வேகமாக வந்து மிதுன் முதுகில் ஓங்கி அடித்து “ஏண்டா பக்கி... நீயும் ரா agent ஆ..? இதுவரை யாரிடமும் சொல்லவே இல்லையே?” என,

“போடா.. நீ மட்டும் எதாவது சொல்லிருக்கியா..? நாங்களா ஒருதடவை கண்டுபிடிச்சு கேட்டோம்.. நீயும் ஒத்துகிட்ட.. “

“ஆனால் எங்கிட்ட கூட உங்க friend புன்னகை மன்னன் கேப்டன் பிரபாகரன் கூட சொல்லல... “ என கேட்டாள்..

“அம்மா.. சுறா.. அவன் புன்னகை மன்னனா... கேப்டன் பிரபாகரன் ஆ ? ரெண்டும் ரெண்டு extreeme.. எப்படி இப்படி பேர் செலக்ட் பண்றா..”

“ஹலோ காதல் இளவரசரே.. இது எல்லாம் தானா வரது... ஒன்னும் பண்ண முடியாது.. டிசைன் அப்படி.. “

“என்னது .. காதல் இளவரசனா... இது என்ன புது பெயர் எனக்கு..”

“நீங்க சென்னைலே விடற ஜொள்ளு மழையில் டெல்லிகே தண்ணீர் பஞ்சம் தீர்ந்துச்சாம்.. டைம்ஸ் now லே அர்னாப் கோஸ்வாமி debate நடத்திட்டு இருக்கார்.. நீங்க இதுக்கே அசந்துடீங்க.. “

“அம்மா தாயே.. உன் வழிக்கே நான் வரல.. விட்டா நீ என் காதல் கதைய ராக்கெட் ஏத்தி அனுப்பி விட்டுடுவ .. நீ வாழ்க..”

“டேய்.. என்னடா கதை அது.. ? “ என்று பரத் ஆவலாக வினவ,

“அப்பா சாமி.. நீ வேற மத்தளம் வாசிக்காத.. உனக்கு விலாவரியா அப்புறம் சொல்றேன்.. “

பரத், “ஏன்.. சுறா.. நீ எனக்கு என்ன பெயர் வச்சிருக்க..?”

“ஏண்டா.. உனக்கு நீயே ஆப்பு வச்சிக்கிற..”

“நீங்க கேட்காட்டாலும் நானே சொல்லிருப்பேன் அண்ணா.. உங்களுக்கு வால்டர் வெற்றிவேல் தான்.. கடமை கண்ணியம் கட்டுப்பாடு அப்படின்னு ரொம்ப பெர்பெக்ட் ஆ இருக்கீங்க... அதான்..”

“நல்ல வேளை... சிரிப்பு போலீஸ் பேர் வைக்கலை.. அந்த மட்டும் நான் பிழைத்தேன்.. “ என்றவன்..

பின் “ஓகே.. ஜோக்ஸ் ஓவர்.. சுபா.. உன்னுடைய schedule இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் எடுத்துட்டு வரேன்.. நீ அதுக்குள்ளே ட்ரைனிங் கேம்ப்பில் releving procedures முடித்து வை.. “ என்றவன்,

“மிதுன் உன்னோட ப்ரோக்ராம் என்ன..?”

“நான் உன்னோட வரேன்.. ஆனால் எனக்கு வேற flight டிக்கெட்ஸ் போடு.. “ என, மூன்று பேரும் கிளம்பினார்கள்.. 

சுறா தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்தவள், பாக்கிங் எல்லாம் முடித்து வைத்தாள். சென்ற முறை ட்ரைனிங் experience இருந்ததால், அவளின் பாகிங் எல்லாம் விரைவாகவும் கச்சிதமாகவும் செய்து விட்டு, தன் வீட்டிற்கு போனில் பேசினாள்

“ஹலோ.. அப்பா.. “

“என்னடா.. செல்லம் .. இப்பொ போன் பண்ணிருக்க?”

“அப்பா.. எனக்கு இப்போ காஷ்மீர்லே deputation duty போட்ருக்காங்க.. இன்னும் கொஞ்ச நேரத்திலே கிளம்பிடுவேன்... “ என,

கிருஷ்ணன்க்கும் சில information கிடைத்து இருந்தது.. லீவில் இருந்த soldiers எல்லோரையும் duty join செய்ய சொல்லிருப்பதாக.. ஆனால் அவரவர் கேம்ப்க்கு செல்ல மட்டுமே உத்தரவு என்பதால் எல்லை நிலவரம் தெரியவில்லை.. வேறு ஏதோ அரசியல் காரணங்கள் என்று நினைத்து இருந்தார்.

இப்போது தன் மகள் காஷ்மீர் செல்ல வேண்டும் என்றவுடன் சற்று சந்தேகம் ஏற்பட்டது.. இருந்தாலும் எதுவும் காண்பிக்காமல்,

“சரி டா.. பார்த்து பத்திரமா இருந்துக்கோ .. அப்போ அப்போ எங்களுக்கு தகவல் கொடு.. “ என,

கொஞ்சம் பயமும், தயக்கமும் கலந்து இருந்தாலும் சுறா தைர்யமாகவே “அப்பா.. சரி அப்பா.. அம்மாகிட்டயும் சொல்லிடுங்க.. “ என்றவள் போன் வைத்தாள்..

பிறகு கொஞ்சம் தயக்கத்தோடு அர்ஜுன்க்கும் தான் லடாக் வரவிருப்பதாக மெசேஜ் அனுப்பினாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.