(Reading time: 12 - 23 minutes)

சொன்னபடி இரண்டு மணி நேரத்தில் பரத் டிக்கெட்சோடு வர, இந்த முறை அவளை பரத் ஏற்றிவிட செல்ல வில்லை.. மிதுனும் ஏர்போர்ட் வருவதால் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான்.

ஏர்போர்ட் சென்ற போது இன்னும் அரை மணி நேரம் போர்டிங்கிற்கு டைம் இருக்க, மிதுனும், சுராவும் பேசிக் கொண்டு இருந்தனர்.

சுறா “மிதுன் அண்ணா ... உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.. “

“சொல்லும்மா.. “

“இல்லை.. நீங்கள் எல்லாம் experience பெர்சன்.. ஆனால் நான் இன்னும் trainee தான்.. என்னுடைய சீனியர் யாராவது இந்த வெப்சைட் டிசைன் செய்ய மாட்டார்களா ? ஏன் என்னை தேர்ந்தெடுத்தார்கள் ..?”

“இயல்பான உன்னுடைய துருதுருப்பு.. அந்த வெப்சைட் மெசேஜ் எல்லாம் சரியான நேரத்திலே உன் கண்ணில் பட்டு, அதை சரியான ஆளிடம் எடுத்து கொடுத்த உன்னுடைய திறமை மற்றும் சமயோசித தன்மை தான் காரணம்.. அதோடு வேறு ஒருவரிடம் இந்த வேலை கொடுத்தால், அவர் முழுதும் படித்து , புரிந்து அதற்கு பின் டிசைன் செய்ய வேண்டும். அதற்கு அவகாசம் இல்லை.. உன்னால் தொடர்ந்து அந்த xxx சைட் கண்காணிக்கவும் முடியும் என்பதுதான்..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ஹ்ம்ம்.. சூப்பர்.. நல்ல ஐடியா தான்.. அண்ணா.. நல்ல வேளை உங்கள சீப் இன்ட்ரோ கொடுக்கும்போது வழக்கம் போலே என் வாலை காண்பிச்சு இருப்பேன்.. உங்க ரெண்டு பேர் முகத்திலே எந்த expression உம இல்லையா.. கொஞ்சம் சுதாரிசுட்டேன்..” என,

“ஹேய்.. அப்படி எல்லாம் நினைக்காதே.. நம்மள பத்தின எல்லா detail உம சீப் க்கு தெரியும் .. ஆனால் வேலைன்னு வந்துட்டால் எதுவும் தெரியாத மாதிரி இருப்பார்.. நாங்களும் அப்படியே நடந்துக்குவோம்” என்றான் மிதுன்.

“ஒ.. அப்படியா..” என்று சற்று ஆச்சரியம் அடைந்தவள், பின் “அப்புறம் என்ன உங்க காதல் கதை எந்த அளவில் இருக்கு..? இண்டர்வல் விட்டுட்டு வந்துட்டீங்களா?”

“ஹா. ஹா.. சுறா.. உனக்கு எப்படி தெரிந்தது.. ? அர்ஜுன் கிட்ட பேசினியா ?”

“ஹலோ சார்.. உங்க டிகிரி தோஸ்து ஒன்னும் வாய் திறக்கலை.. நானும் எப்படி எல்லாமோ போட்டு வாங்குறேன்.. எதை கேட்டாலும் அவன் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ அப்படின்னு சொல்லிடுறார்..” என்றபடி பழிப்பு காட்டினாள்..

“ஹா..ஹா.. அவனை பத்தி எனக்கு தெரியுமே..? அப்புறம் எப்படி தெரிஞ்சுது?”

“அதான்.. ஸ்டேஷன்லே வச்சு அப்படியே பறக்க விட்டீங்களே.. உங்க காதலை. அப்போ தெரிஞ்சிகிட்டேன்..”

“அட.. நாந்தான் எல்லாத்துக்கும் காரணமா?”

“சாட்சாத் நீங்களே தான்” என்று பேசி முடிக்கவும், போர்டிங் anouncement வர அவனிடம் விடை பெற்று சென்றாள்.

லே ஏர்போர்ட் சென்றவள் , அங்கிருந்து அன்று இரவே லடாக் சென்று விட்டாள். ஏற்கனவே அங்குள்ள கேம்பிற்கு உத்தரவு வந்து இருக்க, இவளுக்கான இடம் தயாராக இருந்தது.. மறுநாள் காலையிலிருந்து தன் வேலை ஆரம்பித்து விட்டாள்.

இதற்கு இடையில் அர்ஜுன் இந்த ஆபரேஷன் சம்பந்தமாக ராணுவ தலைமை தளபதி இடம் பேசும் போது

“சார்.. இந்த ஆபரேஷன் பற்றிய மற்ற எல்லா விஷயங்களும் நான் பார்த்துக் கொள்கிறேன்.. ஆனால் இப்போ கடுமையான பனி நேரம்.. இந்த நேரத்தில் நம் வீரர்களுக்கு தேவையான உணவு, குளிர் தாங்கும் உடைகள், மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் தடை இல்லமால் கிடைக்க வேண்டும்.. அதற்கு நீங்க ஏற்பாடு செய்யுங்கள்..” என்று கூற,

“வாட் happend அர்ஜுன்..? நம்ம கான்டீன்லே என்ன பிரச்சினை..?”

“சார்.. அங்கே உள்ள பொருட்கள் எல்லாம் வெளியில் தான் விற்க ட்ரை பண்றாங்க.. எங்களுக்கு போக தான் வெளியில் இருந்து வருபவர்க்கு  என்று ஆர்டர் போட வேண்டும்.”

“ஏற்கனவே அப்படிதானே ஆர்டர் இருக்கு ?”

“அது நடைமுறையில் இல்லை சார்..”

“என்ன சொல்றீங்க.. கர்னல்?”

“எஸ் சார்.. இங்கே உள்ளவங்க அது எல்லாம் பார்க்கிறது இல்லை.. நீங்க வேற யாராவது  போடுங்க.. அட்லீஸ்ட் இந்த ஆபரேஷன் முடியற வரைக்கும்.. முடிஞ்சா freshers ஆ இருக்கட்டும்.. அவங்கதான் இப்போ நமக்கு சரியான ஆளா இருப்பாங்க.. ?” என,

“ஹ்ம்ம்.. உடனே .. ஏற்பாடு செய்கிறேன் அர்ஜுன்.. யு மே கோ now...”

“எஸ்.. சார்.. & தேங்க்ஸ் “ என்று கூறிவிட்டு சென்று விட்டான் அர்ஜுன்..

ராணுவ தளபதி உடனடியாக மும்பை கான்டீன் ஸ்டோர்ஸ் ட்ரைனிங் department பேசி திறமையான அதே சமயம் நம்பிக்கையான freshers அனுப்ப சொன்னார்..

அங்கிருந்தவர்களில் முதலில் லிஸ்ட் லே இருந்தது நிஷா.. & அவளோட துணிச்சல், தைரியம் எல்லாம் பேஸ் செய்து அவளை கார்கில் பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள்..

ஆனால் அவளுக்கும் கார்கிலிருந்து சற்று தள்ளி திராஸ் பகுதியில்தான் வேலை கொடுக்கப்பட்டது.

எல்லோரும் வந்து சேரவும், சுராவிற்கு கொடுத்த மூன்று நாட்கள் கெடு முடியவும் சரியாக இருக்க, நாலாம் நாள் காலையில் தன் வேலை பற்றிய ரிப்போர்ட் எப்படி ரா சீப் இடம் கொடுக்க என்று முழித்து கொண்டிருந்தாள் சுறா.

சற்று நேரத்தில் அவரே அவள் இருக்குமிடம் தேடி வந்தார்.

இனி என்ன ஆகும்..?

ஹாய்.. friends.. சுறா.. ரொம்ப பிஸியா இருக்கிறதால் அவள் வாலை எல்லாம் சுருட்டி நல்ல பிள்ளை வேஷம் போட்ருக்கா.. கூடிய சீக்கிரம் அவள் வாலை வெளிக் கொணர்வாள்..

அப்புறம்.. கொஞ்சம் லாஜிக் எங்கியாவது இடிச்சா.. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.. ஏதோ நம்ம சிற்றறிவுக்கு எட்டிய வரை எழுதி இருக்கேன்.. படிச்சுட்டு கமெண்ட்ஸ் கொடுங்க.. waiting ..

மழை பொழியும்

Episode 28

Episode 30

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.