(Reading time: 7 - 13 minutes)

ப்படி இல்ல அது அரேஞ்ச்ட் மேரேஜ் தான். அந்த வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு ஒரு வாரம் தான் லீவு இருந்துச்சு, சர்ச் ஏற்பாடு எல்லாம் செய்ய அட்லீஸ்ட் 2 , 3 வீக்ஸ் ஆகும், நேரமில்லைனு சொல்லி ஹால்ல மேரேஜ் அரேஞ்ச் பண்ணிருந்தாங்க,

ம்ம்……. அது தப்பா என்ன?…..

என்னமோ அது தப்பாம் என்கிட்ட ஆர்க்யூ பண்ணிட்டு இருந்தா ஹோலி கம்யூனியன் க்ளாஸ்ல படிச்சதை மறந்திட்டியாடா ஜீவா? திருமணம் செய்யிறது எவ்வளவு பெரிய மண்டபமோ இல்லை ஆயிரமாயிரம் பேர் இருக்கிற பெரிய கூட்டமோ எதுவாக இருந்தாலும், சர்ச்ல கடவுள் முன்னாடி செய்யாத திருமணம் அங்கீகரிக்கபடாத திருமணம்னு ஃபாதர் நமக்கு சொல்லி தந்தாங்கள்லன்னு என் மண்டையை உருட்டினா……… அதனால சர்ச்க்கு அகைன்ஸ்டா நடக்குற மெரேஜிக்கெல்லாம் மேடம் வர மாட்டாங்களாம். ஹ ஹா எனக்கொன்னும் அப்படி எல்லாம் ஃபாதர் சொல்லி தந்ததா ஞாபகம் இல்லை. ஆனாலும் இவளுக்கு இவ்வளவு மெமரி இருக்க கூடாது ………

(**Holy communion class என்பது கத்தோலிக்க திருச்சபையில் 9, 10 வயதினருக்கான 1 வருட காலத்திற்கான திருச்சபை அடிப்படைக் கோட்பாடுகள், ஜெபங்கள் கற்றுக் கொடுக்கப்படும் மறைக் கல்வி வகுப்புக்கள் ஆகும்.அது நிறைவுப் பெற்றதும் சிறுவர் சிறுமியர் Holy communion எனும் திருவருட்சாதனம் பெற்றுக் கொள்வர்)

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

மென்மையாக புன்முறுவல் செய்தான் ரூபன்.

ஹோலி கம்யூனியன் அப்ப நமக்கு ஒரு 10 வயசு இருந்தாலே பெரிய விஷயம் அதையே இன்னும் இப்படி பிடிச்சு வச்சிட்டு இருக்கா. எல்லாத்துலயும் ரூல்ஸ் பார்க்கிறவ அவ இனிமே உன் புரபோசலை யோசிச்சு, முடிவெடுத்து அவ்வளவு தான். பேசாம நீ வீட்ல சொல்லி கல்யாண விஷயம் பேசச் சொல்லு…….

ஹ்ம் சொல்லத்தான் போறேன், ஆனா அதுக்கு முன்னாடி அவளுக்கு என்னை கொஞ்சமாச்சும் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு. டைரக்டா இல்லாட்டாலும் இன்டைரக்டாவது ஒரு சின்ன க்ளூ கிடைச்சிட்டாலும் கூட போதும்….. கனவில் ஆழ்ந்து கொண்டு இருந்தவனிடம்

சரி சரி செய்யறதை சீக்கிரமா செய், உன்னால எனக்கும் மேரேஜ் லேட்டாயிரும் போலயிருக்கு என பந்தா காட்ட,

உனக்கு இப்பவே மேரேஜ் கேட்குதா என ரூபனும் பதில் கொடுக்க, தொடர்ந்த உரையாடல்களில் ஒருவழியாக தன்னுடைய சிந்தனைகள் தந்த பாரத்தினின்று விடுபட்டான் ரூபன்.

அனிக்காவிற்கோ இன்னும் திகைப்பிலிருந்து வெளிவராத நிலைதான். ஆனால், மனம் என்னவோ ஆனந்தமாய் இருந்தது. ஷைனி ரூபனை நெருங்கி வரும்போதெல்லாம் அவளுக்கு ஏற்பட்ட அந்த ஒவ்வாமை உணர்வின் காரணம் முழுதாய் புரிந்தது. தொடர்ந்து தீபனின் திருமணம் அன்று நிகழ்ந்த உரையாடலில் ரூபன் சொன்னவை ஞாபக பெட்டியினின்று வெளிவந்து ஆட்டம் போட்டது. அன்று அவன் எடுத்த அந்த போட்டோ குறித்து அறிந்து கோபம் வந்தபோதும் அவனிடம் போய் சண்டையிடாமல் இருந்தது ஏன்? கண்முன்னே அவர்கள் பேசுவதைக் கேட்டும், அதைக் கேட்டு கோபம் கொள்ளாமல், தன் வீட்டில் சொல்லாமல் இருந்தது ஏன்? புரிந்ததும் புரியாததுமான உணர்வில் அவள் திளைத்தாள்.

நான்கு வருடங்கள் ஆகிவிட்டது அவன் மாறியிருப்பான் என்று ரூபனின் ஃபேக்டரியில் பணி புரிய சேரும் முன்பு எண்ணியது ஞாபகத்தில் நிழலாடியது. அவன் மாறவே இல்லை, மாறவும் மாட்டான். சாதாரண வேலையிலிருந்தவன் தன்னை இவ்வளவாய் உயர்த்திக் கொள்ள நானா காரணம்? வியப்பாக உணர்ந்தாள் அவள்.

பல நாட்களாய் சிந்தனையில் கண்டுக் கொள்ளாமல் விட்டிருந்த பல்வேறு நினைவுத் துண்டுகள் மெதுவே ஒன்றாய் இணைந்தன. இணையும் போது அவற்றில் இருந்து எழுந்த சுகந்தம்......... காதல் சுகந்தம் அவளை அடித்து வீழ்த்திச் சென்றுக் கொண்டிருந்தது.

அன்பின் சுகமனைத்தும் அறிவேன்

 

எனை உன்

உயிரின் மறுபாதியாய் அங்கீகரித்த

 

உந்தன் காதலின் சுகம் தனை

மட்டும்

இன்றுணர்ந்தேன்.

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.