(Reading time: 13 - 25 minutes)

22. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

ழக்கமான மதிய உணவு நேரம் நண்பர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டே கதை பேசிக் கொண்டிருக்க ரூபன் அவளையே தன் விழியின் ஓரப் பார்வையில் பதித்துக் கொண்டிருந்தான். இன்னும் 10 நாளைக்கு இவளை பார்க்கவியலாது எனும் ஏக்கப் பார்வை அது. வழக்கமாக ஒவ்வொரு பரீட்சையின் பொழுதும் அவள் எடுக்கும் 10 நாட்கள் லீவுகள் தான் அவை, ஒவ்வொரு முறையுமே அவளைப் பார்க்கவியலாமல் அவ்வளவாக தவித்துப் போவான். ஆனால், இன்றைய ஏக்கமும் தவிப்பும் வழக்கத்தை விட அதிகமாகவும், காலையிலிருந்து அவனை வேலையில் கவனம் செலுத்த முடியாத அளவிற்க்கு பாதிப்பதாகவும் இருந்தது.

ஜீவனிடம் ஏதோ வம்பு பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் அனிக்கா. அந்த மையிட்ட பெரிய கண்கள் சிரிக்க, அச்சிரிப்பால் அவள் கண்ணோரம் சுருங்கி, கன்னங்கள் உயர்ந்து கண்ணைத் தொட எழும்ப, முத்துப் பற்கள் மினுங்க, சிரிப்பில் மலர்ந்த அவளின் மெல்லிய அதரங்கள் அவனை சுண்டி இழுத்தன. உதடுகளின் மென்மையை விரல் கொண்டாவது ஸ்பரிசித்து பரீட்சித்து பார்க்க அவன் உள்ளம் தூண்ட அவளது முகத்தின் அத்தனை பாவனையையும் தன்னுடைய 576 மெகா பிக்சல்ஸ் கொண்ட கண்களுக்குள் நிமிடத்திற்க்கொரு ஷாட் எடுத்த்வனாய் பதித்துக் கொண்டிருந்தான்.

"அண்ணா முதல்ல இவ லீவை கான்சல் பண்ணு? என்ற ஜீவனின் பேச்சில் ரூபனை நோக்கி பார்வையை திருப்பிய அனிக்கா அவன் கண்களின் வீச்சை சமாளிக்க இயலாமல், கண்ணோடு கண் பார்க்கவியலாமல் தடுமாறியவளாய் நின்றாள்.

எனக்கும் இவ லீவை கான்சல் பண்ன ஆசைதான் மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதலும் நட்பும் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“டேய் அவ படிக்கிறதுக்கு தான் லீவ் எடுக்கிறா, பரீட்சை ஒழுங்கா எழுதிட்டு வரட்டும், உனக்கென்ன இப்போ?” என்று அவளுக்காக கடிந்தவனை,

“உனக்கு இப்படி ஒரு ஸ்டாஃப் தேவையா? அடிக்கடி லீவ் எடுத்தா அவ வேலையை யாரு பார்க்கிறது?

“அதான் நான் ஆஃபீஸ் ஜாய்ன் பண்றப்பவே அப்பா நான் ஸ்டடீஸ்க்கு லீவ் எடுப்பேன்னுன் சொல்லியிருந்தாங்கள்ல ” எனச் சொல்லி அனிக்கா ஜீவனை முறைத்தாள்.

சரி சரி அழாதம்மா குட்டி பாப்பா, லீவ் எடுத்துக்கோ ஆனா படிச்சு பாஸாகிடு என் மானத்தை காப்பாத்திடு….என அவளைக் கிண்டல் பண்ணி அடி வாங்கினான்.

"உனக்கு அவ கிட்ட அடி வாங்குறதை தவிர வேற வேலையே இல்லியாடா?" என சிரித்துக் கொண்டிருந்த ரூபனுக்கு பதில் சொல்ல விடாமல் ஜீவனை அவன் மொபைல் அழைத்தது.

“ஓகே திவ்யா…இன்னும் ஒன் ஹவர்ல நான் அங்கே இருப்பேன்’ என போன் வைத்தவனை அவள் வருவது பிக்னிக் அன்றைய தினம் அவள் சம்மதித்திருந்த ஸ்கெட்ச் வரைவதற்கான வேலைக்காக என அறிந்திராத அனிக்கா திவ்யா பெயரைச் சொல்லி அவனை கிண்டலடிக்க தொடங்கினாள். அனிக்காவிற்கு அவளைச் சுற்றி போடப் பட்டுள்ள பாதுகாப்பு வேலி குறித்தோ, அன்றைய சம்பவம் குறித்து இன்றுவரை துப்பறியப்படும் விபரம் குறித்தோ தெரியபடுத்த வேண்டாம் என ரூபனும் ஜீவனும் முடிவெடுத்திருந்ததால் அனிக்காவிற்க்கு விளையாட்டாகவே ஒரு பதிலைச் சொல்லி ஜீவன் அங்கிருந்து கிளம்பினான்.

ரூபனும் அனிக்காவும் தனித்திருக்க, சாப்பிட்டு முடித்து காலியான டிபனை ஒவ்வொன்றாக அவள் பைக்குள் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் . சாப்பாட்டு டேபிளை சுத்தம் செய்ய ஆள் வரவே எழுந்து கொண்ட ரூபன், “அனி உன்னை வீட்டுக்கு விட டிரைவரை சொல்லட்டா” என்றவனை “இல்லத்தான் அண்ணா கார் அனுப்பி வைச்சிருக்காங்க, போன் பண்ணிக் கேட்டேன் இப்ப வர்றதா டிரைவர் சொன்னாங்க நான் போய்க்குவேன் என்றாள் புன்னகையோடு, "சரி" என்றவன் அவளிடம் விடைப் பெற்று தன் வேலைக்கு திரும்பினான்.

ரூபனும் , ஜீவனும் தாங்கள் வீட்டு உபயோகத்திற்க்கு வைத்திருக்கும் காரில் தங்களில் யாராவது டிரைவ் செய்து வருவார்களே தவிர ஃபாக்டரியின் காரை, டிரைவரை வேலை சார்ந்தவற்றுக்காக மட்டுமே உபயோகப் படுத்திக் கொள்வார்கள். வழக்கமான பொருட்களை கொண்டுச் செல்ல வரப் போக, மற்றும் ஃபேக்டரியில் யாருக்காவது எப்போதாவது காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவோ மட்டுமே உபயோகப் படுத்துவார்கள். அதனால் ரூபன் உட்பட யாரும் சொந்த தேவைக்கு அதை உபயோகப் படுத்துவது இல்லை.

இன்னும் ஐந்து நிமிடங்களில் வருவதாக டிரைவரின் தகவலைத் தொடர்ந்து ஆஃபீஸ் வாசலில் நின்றுக் கொண்டு செக்யூரிடியிடம் பேசிக் கொண்டு நின்றிருந்தாள் அனிக்கா. தன்னருகில் நிற்கும் செக்யூரிடி அவரது கண்பார்வைக்கு உட்பட்ட சற்று தொலைவிலான ஃபேக்டரியின் கேட்டில் டிரைவர் காரைக் கொண்டு நிறுத்த , அது வழக்கமான ஃபேக்டரி வேலைக்கான நேரமில்லையென அறிந்திருந்ததால் யாருக்கோ அடிப் பட்டிருக்க வேண்டும் என்று அனுமானித்தவறாக "யாருக்கு அடிப் பட்டிருக்கோ?" என தன்னையறியாமல் கூற அனிக்காவும் அவரது யூகம் சரியாகத் தான் இருக்கும் என்று அனுமானித்தவளாக செக்யூரிடியை போலவே வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.