(Reading time: 13 - 25 minutes)

ரவு வரை படிப்பில் மூழ்கியவள் அத்தை வீட்டுக்கு போயிட்டு வாரேம்மா எனப் புறப்பட கிரிஸ் இவ்வளவு லேட்டா எதுக்கு? என அதட்ட, பிரபா இவ்வளவு நேரம் படிச்சு ஸ்ட்ரெஸ் ஆயிருக்கும் போயிட்டு வரட்டுமே என ஆதரவு குரல் கொடுக்க, சரி சரி துணைக்கு நான் வரேன் என அண்ணனவன் புறப்பட்டான்.

அண்ணா நான் என்ன சின்ன பாப்பாவா? என அடம்பிடித்து அவளோ தனியே சென்றாள். அங்கே ஜீவன் ரூபனை உடல் நிலைக் காரணம் காட்டி சீக்கிரமே வீட்டிற்க்கு அனுப்பி வைத்து விட்டு தான் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. 

ரூபனின் அறையில் கட்டிலில் முதுகைச் சாய்த்து தலையை பின்னோக்கி சாய்ந்து அமர்ந்திருந்தவன் முகத்தில் ஏகத்திற்க்கு களைப்பு தெரிந்தது. பக்கத்திலிருந்த மாத்திரை அட்டைகளை அவள் எடுத்துப் பார்க்க மதியம் சாப்பிட்டதற்கு பின்னர் சாப்பிட்டதான அடையாளமே இல்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

உடனேயே மருத்துவ ஃபைலில் குறிப்பிட்ட படி இரவுக்கான மாத்திரைகளை எடுத்து அவனருகில் செல்ல,

முதல்ல சாப்பிட்டு மாத்திரைச் சாப்பிடு ரூபன் என்று இந்திரா பின்னோடு வந்து நின்றார்.

ஏற்கெனவே டேபிளில் இருந்த சாப்பாட்டை அவன் களைப்பில் எட்டிப் பார்க்கவும் இல்லை. அனிக்காவிடம் மாத்திரைக்காக இடது கையை நீட்டினான். “சாப்பிடாம மாத்திரை போடாதப்பா" என தாய் கூறுவதைக் கேட்கும் நிலையில் அவன் இல்லை. வலி தெறித்துக் கொண்டிருந்தது.

வலக்கையை தூக்கவும் இயலாமல் இருந்ததை பார்த்தவள் ஸ்பூன் போட்டு வைத்திருந்த சாப்பாட்டை கையிலெடுத்து ஸ்பூனில் கொஞ்ச கொஞ்சமாய் எடுத்து அவனுக்கு புகட்டி கட்டாயமாய் சாப்பிட வைத்தாள். முதலில் மறுத்தவன். இரண்டு வாய் சாப்பிடவும் தெம்பாக உணர மறுக்காமல் அவள் தந்ததை சாப்பிட ஆரம்பித்தான்..இந்திரா மகன் சாப்பிடுவதைக் கண்டவுடனே அங்கிருந்து நகர்ந்திருக்க ராபின் தன் சித்தப்பாவாடு சாப்பாட்டில் இணைந்திருந்தான். மாறி மாறி இருவருக்கும் ஊட்டிய பின்னர் அதன் பின் மாத்திரைகளை ரூபனை சாப்பிட வைத்த பின்னரே அனிக்கா அங்கிருந்து நகர்ந்தாள்.

ராபினுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு அங்கிருந்து விடைப் பெற்றாள்.

சில நாட்கள் கழிந்தன ரூபனின் உள்ளங்கை காயம் ஓரளவிற்க்கு ஆறிப் போயிருந்தது. அன்றிரவு அப்பா மற்றும் அக்காவிடம் ஏற்கெனவே பேசி வைத்திருந்தபடி கான்பிரன்ஸ் காலில் அவர்களை அழைக்கவிருந்தான். எனவே தீபன் ஃப்ரீதா , அம்மா , ஜீவனோடு தன்னுடைய ரூமில் அனைவரையும் வரச் சொல்லி கூட்டி இருந்தான்.

முதலில் வந்த தீபன் ஜீவன் அருகில் வந்து அமர எதிரில் இருந்த சோபாவில் இந்திராவும் ப்ரீதாவும் அமர்ந்தனர். ராபின் இன்னும் தூங்காமலிருந்ததால் உள்ளும் வெளியுமாக நடைப் பயின்றுக் கொண்டு இருந்தான். மழலை பேசிக் கொண்டு ஒவ்வொருவரிடமும் தாவுவதும் திரும்ப போவதுமாக இருந்தான்.

அனைவரும் வந்த பின்னரே ரூபன் அறைக்குள் நுழைய, என்ன? என்று தீபன் ஜீவனிடம் வினவினான். இன்னிக்கு எல்லோரும் பேசலாமா? என்று ரூபன் சொன்னானே தவிர எதற்காக? என்ன பேசப் போகிறான்? என்று காரணம் சொல்லியிருக்கவில்லை. தன்னுடைய இரண்டு தம்பிகளும் சேர்ந்தே இருப்பதால் சின்னவனுக்கு காரணம் தெரியும் என்கிற யூகம் அவனுக்கு அதனால் தான் அவனிடம் கேட்டு வைத்தான்.

ஒன்றுமே தெரியாத அப்பாவி போல ஜீவன் தோள்களை குலுக்கி எனக்கு தெரியாது என பதில் கூறினான். அவனுக்கும் உள்ளுக்குள் அனுமானம் இருந்ததேயன்றி நிச்சயமாக காரணம் தெரியாது அல்லவா?

உள்ளே வந்த ரூபன் எந்நாளும் இல்லாத திருநாளாய் தன் அண்ணன் தம்பியுடன் அமராமல் அம்மா உட்கார்ந்திருந்த சோபாவின் கீழ் அம்மா காலடியில் அமர்ந்தான். அம்மாவோ ரொம்ப நாள் கழித்து மகன் காட்டிய நெருக்கத்தில் மகிழ்ச்சியோடு அவன் தலையை தடவினார்.

ஆச்சரியத்தில் விரிந்தன ஜீவனின் கண்கள், இவன் என்னமோ ப்ளான் செய்றான் என சிரிக்க துடித்த உதடுகளை பக்கத்தில் இருந்த தீபனுக்கு தெரியாமல் அடக்கினான்.

ரூபன் தரையில் அமர்ந்ததும் அவன் மடியேறி காதில் ஏதோச் சொல்லி சிரித்த ராபினுக்கு முத்தம் வைத்தான், பதிலுக்கு சித்தப்பாவிற்கு முத்தம் வைத்து விட்டு ராபினும் மறுபடி தன் பொம்மைகளை கொண்டு வர அறையை விட்டு வெளியேச் சென்று விட்டான்.

முதலில் அக்காவிற்க்கு போனைப் போட்ட ரூபன் அக்கா அத்தானிடம் நலம் விசாரிக்க, அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் பேசி முடிய அப்பாவிற்க்கு கால் செய்து கான்பிரன்ஸ் செய்தான். அவரும் மகன் கூறியதால் ஏதோ முக்கிய விஷயமென அந்த காலுக்காக காத்திருந்தவர் லைனில் வர மறுபடி ஒரு நலம் விசாரிப்பு ஆரம்பித்து பொதுவான பேச்சுக்கள் முடிந்து அனைவரும் அமைதி ஆகினர்.

தான் பேச வேண்டிய நேரம் வந்ததை உணர்ந்தவனாக, அப்பா என போனில் அழைத்து அம்மாவென பக்கத்திலிருந்தவரைப் பார்த்து அக்கம் பக்கம் எல்லோரையும் ஒரு முறைப் பார்த்தவன், என் கல்யாண விஷயமா பேசறதுக்கு தான் கூப்பிட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.