(Reading time: 13 - 25 minutes)

பேக்டரி வாயிலில் வண்டியை நிறுத்திய டிரைவர் அடுத்த பக்கம் வந்து கதவை திறக்க ரூபன் தன் வலது கையை ஏதோ பெரிய துணியில் பொதிந்தவனாக முகத்தில் சின்னச் சுளிப்போடு காரில் ஏறுவதை அனிக்கா பார்த்துக் கொண்டிருந்தாள்..

“அடிப்பட்டது அவனுக்கா” சட்டென்று கண்கள் கலங்க ஆரம்பிக்கவே அதே நேரம் அவளை அழைத்துப் போக வந்திருந்த தன்னுடைய காரில் ஏறினாள்.

டிரைவர் அண்ணா, நம்ம ராஜேஷ் அண்ணா ஹாஸ்பிடல் தெரியுமில்ல, அங்க போங்க” எனக் கூற அவரும் புறப்பட்டார். கார் நகர ஃபேக்டரி வாயிலின் அருகே சொட்டியிருந்த துளி ரத்தங்களில் அவள் கண்கள் நிலைப் பெற்றிருக்க வேகமெடுத்து அதனைக் கடந்துச் சென்றது கார்.

ஓரளவு மத்திய தரமான ஹாஸ்பிடல் தான் அது, உள்ளே வந்தவள் வழக்கமாக வரும் பழக்கத்தின் காரனமாக சிகிச்சை பெற வந்த ரூபன் எங்கிருப்பான் என யூகித்த்வளாக ராஜேஷின் அறைக்குள் நுழைய முயற்சிக்க பக்கத்து அறையில் அவனுக்கு ஸ்டிச்சஸ் போடுவதற்கான ஆயத்ததில் இருந்தார் டாக்டர் ராஜேஷ்.

“அதெப்படிடா நான் சாப்பிட போற நேரமா வர்றீங்க” என பொய்யாய் சலித்துக் கொண்டு, என்ன மெஷின் குள்ள போய் கையை விட்டியாக்கும்” என ராஜேஷின் குரல் கேட்க திறந்திருந்த அந்த அறையின் வாயிலில் வந்து நின்றாள் அனிக்கா.

சிகிட்சைக்காக திறந்து வைத்திருந்த ரூபனின் வலது உள்ளங்கையில் அழுத்தமான வெட்டுக்காயம். அதனை இவளால் கண்கொண்டு பார்க்க இயலவில்லை. அனுமதி கேளாமலேயே கண்கள் அருவியாக பொழிய ஆரம்பித்தது. சட்டென்று அங்கிருந்து நகர்ந்தவள் வெளியில் சற்று நேரம் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

நாலு ஸ்டிட்சஸ் போடணும் என்று ஆராய்ந்து கூறிய ராஜேஷ் தன்னுடைய வேலையை செய்து முடிக்க,

நர்ஸ் அங்கிருந்து நகர்ந்தவுடன் ரூபனிடம்,

என் தங்கச்சி அழுது நான் பார்த்ததே இல்லை தெரியுமா? என சம்பந்தமே இல்லாமல் கேட்க,

அவன் தங்கச்சி எனக் குறிப்பிடுவது அனிக்காவைத் தான் என அவனுக்கு தெரிந்தும் இப்போது ஏன் அப்படிச் சொல்கிறான் என்பது போல அவனைப் பார்க்க,

இத்தனை வருஷத்தில இன்னிக்கு தான் அவளை அழுது நான் பார்த்திருக்கேன்……..ஏன் ரூபன் நீ அனியை உண்மையாவே லவ் பண்றதான? என அதிரடியாக கேட்க

பகிரப் படாத ஒன்றை எதிர்கொண்ட அதிர்ச்சியில் உண்மையை ஒத்துக் கொள்ளும் விதமாக தலையை ஆட்டி வைத்தான் ரூபன்.

கிறிஸ் என்ன சொல்லுவானோ தெரியலை. ஆனா, அவ உன்னை இவ்வளவு லவ் பண்றப்போ அவனும் தான் என்னச் சொல்ல போறான். நீ மட்டும் என் தங்கச்சிக்கு ஏதாவது கஷ்டம் கொடுத்தியோ மகனே அவளுக்கு நாங்க ரெண்டு அண்ணா இருக்கிறோம். உன் எலும்பை எண்ணிடுவோம். என செல்லமாய் மிரட்டியவன் தனக்கு எதிராக இருந்த கண்ணாடியில் தெரிந்துக் கொண்டிருந்த அனிக்காவின் உருவத்தை ரூபனுக்கு காட்டினான்.

அதுவரைக்கும் அவள் தனக்கு பின்னோடு வந்திருப்பதை அறிந்திராத ரூபன், கண்ணாடியின் பிம்பத்தில் சற்றுத் தள்ளி நின்றுக் கொண்டிருப்பவள் கண்ணில் பெருகி வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து பேச்சற்று நின்றான்.

ம்ம் என ரூபனின் கவனத்தை ஈர்த்தான் ராஜேஷ்.

" மேடம் நான் க்ளீன் பண்ணிட்டு இருக்கப்ப, உன் கையை எட்டிப் பார்த்துட்டு தான் வாட்டர் ஃபால்ஸை திறந்து விட்டுட்டு இருக்காங்க. நீ போய் வலிக்குன்னு காட்டி கிட்ட இன்னும் அழுவா…… வலிக்காத மாதிரி காட்டணும் புரியுதா? என்று மிரட்டியவனை பார்த்து ஏதோ ஆஸ்கர் அவார்ட் கொடுத்த பாவனையில் புன்னகை மன்னனாக இளித்து சிரித்து வைத்தான்.

போடா டேய், போய் மெடிசின்ஸ் வாங்கிட்டு போ, என்னை நேரத்துக்கு சாப்பிட விடுங்கப்பா…டேய் மரியாதையா ரிசப்ஷன்ல ஃபீஸ் கட்டிடு. என் தங்கச்சிக்கு மட்டும் தான் ஃப்ரீ சர்வீஸ் புரியுதா?

என அரட்டியவனை பாசமாய் பார்த்து ஆமோதித்தான்.

அதற்க்குள் ராஜேஷிடம் வந்து அவனுடைய மருந்துத் தாளை வாங்கிய அனிக்கா மெடிக்கல் போய் மாத்திரைகள் வாங்கி வந்து உடனே சாப்பிட வேண்டியவைகளை அவனுக்கு எடுத்துக் கொடுத்தாள். அடிப்பட்டதன் வலி அவள் கண்ணீரைப் பார்த்த நொடிமுதல் மறைந்திருக்க அவளின் அன்பான கவனிப்பில் மனம் நிறைந்துக் கொண்டிருந்தான்.

அவள் எத்தனையோ சொல்லியும் கேளாமல் வேலை அதிகமாக இருப்பதாகச் சொல்லி ஹாஸ்பிடலிலிருந்து வீட்டிற்க்கு திரும்பச் சென்று ஓய்வெடுக்காமல் ஃபேக்டரிக்கே மறுபடி திரும்பினான். அவள் மனமே இல்லாமல் வீட்டிற்க்கு திரும்பச் சென்றாள். பரீட்சைக்கு வேறு படிக்க வேண்டி இருக்கின்றதே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.