(Reading time: 21 - 42 minutes)

10. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

லே ஏலே ஏலேலோ

ஏலே ஏலே ஏலேலோ

ஏலே ஏலே ஏலேலோ

ஏலே ஏலே ஏலேலோ

சிறு நடை தூரமும் உன்னோடு நான் வந்தேன்

சில்லென்ற உன் பார்வை பட காத்திருந்தேன்

அவ்வளவு அழகாய் அன்பே நீ இருந்தாய்

அய்யய்யோ ஐயோ நானும் என்ன செய்வேன்

ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே

ஏன் இந்த மௌனம் என் கண்மணியே

உன் விரலோடு விரல் கோர்த்து

நான் வரவேண்டும் துணையே

ஒரு நொடியில் கடந்தேன் அன்பே இவ்விரவை

என் உயிரில் வைத்தேன் உன் உறவை உறவை

நான் உனதானேன் என எப்படி சொல்வேன்

என் அன்பாலே உனை வெல்வேன் வெல்வேன்

ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே

ஏன் இந்த மௌனம் என் கண்மணியே

உன் விரலோடு விரல் கோர்த்து

நான் வரவேண்டும் துணையே

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

பொன்மாலைப் பொழுதின் கடலின் அலையோசையில் உடலை வருடி செல்லும் இளங்காற்றாய் மனதை ஆட்கொண்ட காதலியுடனான நடையும் இவனின் அருகாமையை அவளின் நாண சிவப்பு பிரதிபலிக்கவும் அதில் கரைந்து தொலைந்து கொண்டிருந்த ஜெய்யை மீட்டெடுத்தது இவன் காரினால் தடைப்பட்டு தேங்கி நின்ற வாகனங்களின் சப்தம். 

அவளின் நாணம் இவனையும் ஒட்டிகொண்டதோ? அவன் முகத்திலும் சிறு நாணம் எட்டிப்பார்த்தோ?! 

பாடல் வரிகளின் தாக்கத்திலிருந்தவன், ‘க்ரீன் சிக்னல் விழுந்துடுச்சா?!’ சட்டென தன் வண்டியை கிளப்பினான்.  பரவாயில்லையே உனக்கு அது கூட புரியுதே! என்று ஜெய்யின் மனம் அவனை சீண்டியது.  மனதை அசட்டை செய்தவனாக அதே பாடலை மறுபடியும் பாடவிட்டான். 

என்னது? மறுபடியும் அதே பாட்டா! வேணா ஜெய்… கொஞ்ச நேர முன்னாடினாலும் சிக்னல்ல வண்டியை நிறுத்திட்டு கனவு கண்ட.. இன்னொரு முறை கனவு காணுறன்னு காரை எங்கயாவது மோதி என்னை சாகடிச்சிடாத.. எனக்கு சரயூ கூட சேர்ந்து வாழனும்னு ரொம்ப ஆசையாயிருக்கு.  எல்லா உன்னால வந்தது.  என்னையும் இப்ப அவளை பற்றியே யோசிக்க வச்சிட்ட.  நீ கனவு கண்டு என்னை எவ்வளவு இம்சை பண்ணுற தெரியுமா? உனக்கு புரியாதுன்னு வழக்கமா நீதான் எங்கிட்ட சொல்லுவ ஆனா இப்போ நிலைமை அப்படியே தலைகீழாயிருச்சு.  உனக்குதா என்னை புரியலை…அவளை பக்கத்துல வச்சிகிட்டு ரொம்ப கஷ்டமாயிருக்கு.  சில சமயத்துல நீதான் என்னை கட்டுபடுத்துற இல்லைனா என்ன நடக்குமோ? நான் எப்பவாவது அவசரப்பட்டு அதனால அவளை சேர முடியாதோன்னு பயமாயிருக்கு ஜெய்.  அதுவும் நேத்தைக்கு பிறகு என்னால முடியல.  உனக்கு என்னை புரியுதா? நீ ஏன் சரயூட்ட உன்னோட காதலை சொல்லக்கூடாது? கொஞ்ச யோசிச்சு பாரு ப்ளீஸ்… புலம்பலில் ஆரம்பித்து கெஞ்சலும் தவிப்புமாய் இப்போது ஜெய்யின் மனம். 

எனக்கு புரியாதுன்னு நீ நினைச்சா அது அபத்தம்னு உனக்கே தெரியும்.  எனக்குள்ளே நீயிருக்கன்றத மறந்துடாத.  சரூட்ட காதலை சொல்ல இது சரியான நேரமில்லை.  எப்படி எதை பற்றி பேச ஆரம்பிச்சாலும் கடைசில என்னை ஃப்ரெண்டுன்னு சொல்லுறதே அவளோட வேலையா போச்சு.  ஆனா ஒரு நாள் அவளுக்கு என் மேல காதல் வரும்.  அப்போ என்னை ஃப்ரெண்டுன்னு சொல்லுறத நிறுத்துவா… அன்னைக்கு நான் அவளை ப்ரபோஸ் செய்வேன் என்று ஜெய் சொல்லவும் அலறியது அவன் மனம். 

என்னது?! அப்படி ஒரு நாள் வந்தப்போ நிஜம்…. சட்டென நெகடிவாக பேசியது மனம். 

ஏன் வராம! அன்னைக்கு சரூ என்னை பார்த்து வெட்கப்படுவா அப்போ தெரிஞ்சுக்கோ… அதுவ… ஜெய்யின் பேச்சில் இடையிட்டு,

யாரு? சரூவா… அவள் வெட்கபடறத நீ கற்பனையில மட்டும்தா பார்க்க முடியும்.  கொஞ்ச நேரத்துக்கு முன்னடி பார்த்தியே அப்படிதா.  வெட்கம்னா என்ன? எந்த கடைல கிடைக்கும்னு கேப்பா.  அவல்லா உன்னை பார்த்து வெட்கப்பட்டுட்டாலும் என்று அங்கலாயித்தது மனம். 

உனக்கு புரியாதுன்னு நான் சொல்லுறேன்னு மட்டும் சொன்னா பத்தாது! அது எந்த அளவுக்கு உண்மைன்னும் தெரிஞ்சிக்கனும்… என்று ஜெய் சொல்லவும்,

இப்போ என்ன எனக்கு தெரியாம போயிடுச்சு? சும்மா! இந்த வெட்க டாபிக்கை மாத்தறதுக்கு ட்ரை பண்ணாத என்று மனம் அவனை குற்றம் சாட்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.