(Reading time: 21 - 42 minutes)

ரு வழியாக ராகுலும் மைத்ரீயும் ஸ்கேரி ஹௌஸ் பயணத்தை முடித்திருந்தனர்.

அந்த இருட்டு அறையிலிருந்து வெளியில் வந்தாலும் அவர்கள் இன்னும் ஸ்கேரி ஹௌஸிலிருந்து முழுவதுமாக வெளியில் வந்திருக்கவில்லை.  இவர்கள் வெளிவந்த கதவு இன்னொரு அறைக்கு வாயிலாக அமைந்திருந்தது.  அந்த அறையின் சுவர்களனைத்தும் முகம் பார்க்கும் கண்ணாடிகளால் செய்யப்பட்டிருந்தன.  அங்கு ஒரே ஒரு விளக்கு இருந்தபோதும் அதன் வெளிச்சம் கண்ணாடி சுவர்களில் பட்டு கண்களை கூச செய்தன. 

நாலாபுறமும் கண்ணாடிகளில் தங்களைப் பார்த்து ரசித்தவன் தன் ஃபோனில் ஒரு ஃபோட்டோவை எடுத்து கொண்டபிறகே 

“கண்ணை திறக்கலாம் மைத்ரீ…வெளியே வந்துட்டோம்…” மெதுவாக அவள் கண்ணை திறந்து பார்க்கவும்….இத்தனை நேரம் இருட்டிலிருந்ததாலும்  அங்கிருந்த பளிச்சிடும் வெளிச்சத்தாலும் கண்கள் கூசின. 

“வெளிய வந்துட்டோம்! தேங்க்ஸ்!” நிம்மதியில் அவள் முகம் மலர்ந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

மைத்ரீ இன்னமும் ராகுலின் தோளில் சாய்ந்திருந்திருக்கவும் 

“இப்படியே வெளிய போக முடியாது” குறும்போடு ஒலித்த குரலும் அதன் பொருளும் உணர்ந்தபோது அவனை விட்டு சட்டென விலகினாள் மைத்ரீ.

அவளின் செயலை மறுபடியும் ஃபோனில் புகைப்படமாக பதிந்தான்.

அவளுக்கு இருந்த மனநிலையில் அதை கவனிக்கவில்லை.

‘எக்ஸிட்’ என்ற வார்த்தைக்கு கீழிருந்த கதவை திறந்து வெளியே சென்றான் ராகுல்.  மைத்ரீயும் அவனை பின்தொடர்ந்து வெளியேறினாள்.

இவளை காணாமல் தவித்தபடி ஸ்கேரி ஹௌஸின் வெளிக்கதவின் அருகே நின்றிருந்த ஜெய்யிற்கு அப்போதுதான் மூச்சே வந்தது.  சரயூ ஓடிச்சென்று மைத்ரீயை அணைத்து கொண்டாள். 

“சாரி மைதி! எனக்கிருந்த பயத்துல உன்னோட கையை விட்டுட்டேன்.  வெளிய வந்த பிறகுதா நான் செய்தது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சது.  சஞ்சு வேற ரொம்ப டென்ஸாயிட்டான்.  எங்க அவன் என்னை திட்டிடுவானோன்னு வேற பயமாயிருந்தது.  தேங்க் காட்! நீ வந்துட்ட”  படபடவென பேசியவள் மறுபடியும் மைத்ரீயை அணைத்தாள்.

ராகுல் மைத்ரீயை அழைத்து வந்ததும் ஜெய் அவன் கையை பற்றி

“தேங்க்ஸ் பாஸ்! மைதி ரொம்ப பயந்துட்டாளோ?” ஜெய்யின் பேச்சில் தவிப்பு கொட்டிகிடந்தது.

“ரிலாக்ஸ் சஞ்சய்! மைத்ரீ சேஃபா உங்கிட்ட வந்துட்டாங்க”

“ராகுல் நீ முக்கியமான கால் பேச போனியே….எப்போ ஸ்கேரி ஹௌஸ்குள்ள போன?”

‘சரயூ! எதுக்கு இப்படி கேள்வி கேட்டு என்னை மாட்டிவிடுற’, “அது… அந்த ஃபோன் கால் நேரமெடுக்கும்னுதா சொன்னே… அது கொஞ்ச நேரத்துலுயே முடியவும் நானும் உள்ளே வந்தேன்” தங்கையின் கேள்விக்கு எதையோ சொல்லி சமாளித்தான் ராகுல்.

இவர்கள் இப்படி தன்னை பற்றியே பேசி கொண்டிருக்க மைத்ரீயின் மனதிலோ கேள்விகளும் குழப்பங்களும் வலம் வந்தபடி இருந்தன.

‘ஏதோ ராகுலாயிருக்க போயி எனக்கு உதிவி பண்ணாரு.  இதுவே வேற யாராவதா இருந்திருந்தா என்னோட நிலைமை என்னாயிருக்கும்? அதை நினைச்சு கூட பார்க்கமுடியலை.  அவருக்கு ஸ்கேரி ஹௌஸ் டிக்கெட் வாங்காம அவமதிச்சதுக்கு என்னை இப்போ பழிவாங்கியிருக்கலாம்.  ராகுல் ரொம்ப நல்லவரோ!’ 

ஸ்கேரி ஹௌஸிலிருந்து வெளியில் வந்தபிறகும் அவன் தோள் மீது சாய்ந்திருந்தது இப்போது நினைவிலெழவும்

‘ச்சே… அவர் என்னை பற்றி என்ன நினைச்சாரோ?! போனா போகுதுன்னு பாவம் பார்த்து எனக்கு உதவி செஞ்சாரு… நான் அட்வாண்டெஜ் எடுத்ததா தப்பா எடுத்திருப்பாரோ..’ தனக்கு தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி கொண்டிருந்தவளை ஜெய்யின் வார்த்தைகள் மீட்டெடுத்தது.

“மைதி! ஆகாஷ் ஃபோன் பண்ணி நம்மளை உடனே வர சொன்னான்.  வா போகலாம்” அவசரமாக அவளை அழைத்து சென்றுவிட்டான்.

மாலில் நடந்தவற்றை மைத்ரீ சொல்லி முடிக்கவும்

“சாரி மைதி! சரூ என்னை பிடிச்சு தள்ளாத குறையில திரும்ப கூட விடாம பின்னாடியிருந்து என் சட்டையை இழுத்து பிடிச்சிருந்தா.  அவளுக்குதான் ஸ்கேரி ஹௌஸ்னா பயமா… நீ அப்படியில்லயேன்னு நினைச்சேன்.  நீ அவளுக்கு பின்னாடியே வருவன்னு நம்பினேன்.  நீ பயந்திருப்பன்னு கொஞ்சம் கூட யோசிக்கல” தன் மீதிருந்த தவறால் மிகவும் வருந்தினான் ஜெய்.

“இதுக்காகதா உனக்கு இந்த விஷ்யத்தை சொல்லாம மறைச்சிடலாம்னு நினைச்சு நேத்திக்கு சொல்லல.  ஆனா இந்த குரங்கு பண்ண சேட்டைல இப்போ எல்லாத்தையும் சொல்ல வேண்டியதா போச்சு”

“இருந்தாலும் மைதி… தப்பு என் மேலதா…..நா….” குற்ற உணர்ச்சியில் ஏதோ சொல்லவந்தவனை தடுத்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.