(Reading time: 21 - 42 minutes)

ன்னதான் ராகுல் மேலிருந்த கோபத்தினால் இதை செய்திருந்தாலும் ஜெய்யின் பேச்சும் அந்த சூழ்நிலையும் மைத்ரீயினுள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

“சாரி!” இருவருக்கும் பொதுவாக சொன்னவளின் முகம் சோர்ந்துவிட்டது.

“பரவாயில்ல, விடு மைதி! ராகுல் உங்கிட்ட கடையில வம்பு பண்ணினான்னு உனக்கு அவன் மேல கோவம்… அவன் செய்ததுக்கு இது தேவைதா” மைத்ரிக்கு சாதகமாக பேசி அவளை தேற்ற முயன்றாள் சரயூ.

“சியர் அப் மைதி! ராகுலும் இப்போ ஃபோன்ல பிஸி ஆயிட்டாரு.  ஸோ நாம இப்போ அதை பற்றி யோசிக்க வேணா” தன் வலது கையால் அவள் தலையை ஆட்டி அவளை இயல்பாக்கினான் ஜெய்.

ஒரு பெரிய இடத்தை சிறு சிறு பகுதிகளாக (அறை) பிரித்து உள்ளே செல்ல வெளியே வர என இரு வாயில்கள் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது ஸ்கேரி ஹௌஸ்.  ஒருவர் மட்டும் செல்ல கூடிய வாயில்களாக இருந்ததால் ஒருவர் பின்னால் மற்றொருவர் என நடக்க வேண்டியிருந்தது.

ஸ்கேரி ஹௌஸின் முதல் பகுதியினுள் ‘எண்ட்ரி’ என்ற வாசகத்தை தன் கைகளில் தாங்கியபடி நின்றிருந்தது பூதம் ஒன்று.  பூதத்தின் பெரிய வயிற்றிலொரு சிறு நுழைவாயில் அமைக்கப்பட்டிருக்க அங்கிருந்த காவலாளி இவர்களுக்காக அக்கதவை திறந்தான்.  குதூகலமாக ஸ்கேரி ஹௌஸினுள்ளே அடி வைத்த மைத்ரீயினுள் தயக்கத்தை பரப்பியது அங்கு அவள் கண்ட எதையும் காணமுடியாத கும்மிருட்டு.

“ஜெய்! இங்க எனக்கு ஒன்னுமே தெரியல… ஒரே இருட்டாயிருக்கு” என்றபடி தன் காலை பின்னெடுத்து நின்றுவிட்டாள்.

“அப்படிதா இருக்கும் மைதி! இங்க வெளிச்சத்துக்கு பழகின கண் கொஞ்ச நேரத்துல இருட்டுக்கு பழகிரும்.  அப்புறம் உன்னால பார்க்க முடியும்” அவளின் முகம் தயக்கத்தை காட்ட “சரி இரு! நான் முன்னாடி போயி உங்களை கைட் பண்றேன்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

சரயூ தன் பயத்தை சந்தித்து அதை வெற்றி கொள்ள வேண்டுமென மனதினுள் சொல்லியபடி நின்றிருந்தாள்.  ஏதும் பேசாமல் அமைதியாக இருக்கும் சரயூவை கவனித்த மைத்ரீயால் அவளை புரிந்து கொள்ள முடிந்தது.

“சரயூ, அடுத்து நீ போ! உனக்கு முன்னால ஜெய் இருப்பா, பின்னால நான் இருப்பேன்.  நீ பயப்படாம ஜெய் கையைப் பிடிச்சுக்கோ, நானும் உன் கையைப் பிடிச்சுக்கிறேன் ஸோ நாம ஒன்னாவே இருப்போம்”

மிகவும் கவனமாக அடியெடுத்து வைத்து உள்ளே சென்றான் ஜெய்.  இரண்டு அடிகள் கடந்ததும் படிகள் இருப்பதை உணர்ந்தான்.

“இங்க மூனு படியிருக்கு அதுல ஏறனும்.  பத்திரமா கவனிச்சு ஏறுங்க”

ஒருவர் பின் மற்றொருவரென இப்போது மூவரும் உள்ளே வந்திருக்க கதவு மூடிக்கொண்டது.

அந்த படிகளை கடந்த போது இத்தனை நேரம் நிலைத்திருந்த அமைதியை கிழித்தது செயற்கையாக ஒலிர விடபட்ட இருளின் சத்தம்.  அதை தொடர்ந்து நாய்கள் குரைக்க, நரிகள் ஊளையிட்டன.  வெளிச்சத்தை அறிந்திறாத பயங்கரமான விலங்குகள் நிறைந்த காட்டினுள் மாட்டிகொண்ட அச்சத்தை ஏற்படுத்துவனவாக அமைந்தன அங்கு ஒலித்த இனமறியா வேறு சில சத்தங்கள்.

சட்டென மனதில் மேலோங்கிய பயத்தினால் உறைந்து நின்றுவிட்டாள் சரயூ. அவளின் பயத்தை அறிந்த ஜெய் தைரியம் அளிக்குபடியாக அவளின் கையை அழுத்தி பிடித்து முன்னேறினான்.

இருட்டுக்கு பழகியிருந்த கண்கள் அங்கு பரவியிருந்த மெல்லிய ஒளியில் சுற்றியிருப்பவையை பார்க்க உதவின இப்போது.

ஜெய்யின் கண்களில் பட்டது அந்த எலும்பு கூடு.  அவன் வலபுறமாக அந்த அறையின் மூலையில் தலைக்கு மேல் அது தொங்கி கொண்டிருந்தது.

“இப்போ உங்க ரைட்ல ஒரு எலும்பு கூடு இருக்கும்” ஜெய் பெண்களை எச்சரித்தபடி அதை கடந்தான்.  சரயூ அதனை கடக்கும்போது பெரும் சத்தத்தோடு தனது வாயை திறந்து மூடியபடி அந்த எலும்பு கூடு கீழ் நோக்கி அவளின் அருகே சரிந்தது.  அத்தனை அருகில் அதை பார்த்த பயத்தில் தனது கைகளை இருவரிடமிருந்தும் உருவியவள் ஜெய்யை நெருங்கி அவன் முதுகு புற சட்டையை இறுக்கமாக பற்றி அவன் பின்னங்கழுத்தில் தன் தலையை முட்டினாள்.

ஸ்கேரி ஹௌஸின் அமானுஷ்யத்தை கண்டு கொள்ளாது ஜெய்யின் மனம் சந்தோஷத்தில் மூழ்கியது.  சரயூ, பயத்தினால் இவனின் சட்டையை இறுக்கி பிடித்திருக்க மோகத்தின் முதற்படியை தொட்டிருந்தான் ஜெய்.  இவன் இப்படி குதூகலித்திருக்க மைத்ரீயோ பயத்தில் மூழ்கிகொண்டிருந்தாள்.

இத்தனை நேரம் பயமிருந்தாலும் இங்கு நடப்பதெல்லாம் செயற்கையே! இவைகளை இயக்குவது மனிதர்கள் என்றிருந்த தெளிவு மறைந்து மைத்ரீயின் மனதை பயம் ஆக்கிரமித்தது.  சரயூவும் தன் கையை உருவிகொள்ளவும் அவளின் இதயதுடிப்பு அங்கு ஒலித்த எல்லா சத்தங்களையும் மிஞ்சியது.  இருப்பினும் முன்னேறி அந்த எலும்பு கூடை கடந்தாள் மைத்ரீ.  பயத்தில் கால்கள் பின்ன அவளின் நடையின் வேகம் வெகுவாக குறைந்தது.  சரயூ பின்னால் வந்தவளை முற்றிலுமாக மறந்திருந்தால் மைத்ரீ அவளை தொடரவில்லை என்பதை அறிந்திருக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.