(Reading time: 21 - 42 minutes)

லூசு மாதிரி பேசாதடா… பயப்படுவேன்னு நானே நினைக்கலை… நீ என்ன செய்ய முடியும்? விடு ஜெய்! இன்னொரு முறை நீ இதை பற்றி பேசக்கூடாது” உறுதியாக சொன்னவள் அவன் சம்மதத்திற்காக முகத்தை ஏறிட்டாள்.

“ஐ ம் வெரி லக்கி மைதி!” என்று ஜெய் அகமும் முகமும் மலர சொன்னான்.

“ஐ ம் லக்கி டூ!” மைதியும் புன்னகைத்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

ன்று காலேஜில் ஃபேஸ் பெயிண்டிங்க் காம்பிடிஷன் இருந்தது.  அந்த போட்டியில் கலந்து கொள்வோரின் பெயர் பட்டியலில் தன் பெயரை கடந்த வாரம் சேர்த்திருந்தாள் சரயூ.  இன்னும் சிறிது நேரத்தில் போட்டி தொடங்கவிருப்பதால் இவள் ஆடிட்டோரியம் செல்ல தயாராகி கொண்டிருந்தாள். 

“எல்லா எடுத்துட்டியா சரயூ?”

“ஹும்… எடுத்துக்கிட்டேன் வேதிக்.  வர சொல்லு நேரமாகுது” என்று சஞ்சயை சுட்டினாள்.

“இன்னைக்குமா உங்க சண்டை முடியல?! கடவுளே என்னை காப்பாத்து” புலம்பிய வேதிக்கை முறைத்தாள் சரயூ.

“சரி…சரி…முறைக்காத! பேசுறேன்” இப்போது சஞ்சயின் பக்கம் திரும்பியவன்

“உனக்கு கேக்கலையா… நேரமாகுது மச்சா! கிளம்பி சரயூவோட போ”

“எதுக்கு? நான் ஏன் போகனும்?” சரயூவை பார்த்தபடி வேதிக்கிடம் கேட்டான் சஞ்சய்.

“இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சனோ? எல்லா எந்நேரம்டா… உனக்கு எதுக்குன்னு தெரியாது?”

“ம்ஹீம்” இட வலமாக தலையை ஆட்டினான் சஞ்சய்.

சரயூ வேதிக்கை முறைத்தபடி தனது கைகடிகார்த்தை பார்த்தாள்.

“நீ ஏன் என்னை முறைக்கற? பொறுமையாயிரு பேசுறேன்” சரயூக்கு பதிலளித்துவிட்டு சஞ்சயிடம் திரும்பினான்.

“ஃபேஸ் பெயிண்டிங்க் காம்பிடிஷனுக்கு சரயூ உன்னோட முகத்துல வரையறதா தானே பேசியிருந்தோம்.  பத்தாததுக்கு ரெண்டு முறை ப்ராக்டீஸ் பண்ணியாச்சு.  இன்னும் பத்து நிமிஷத்துல போட்டி துவங்கிரும் மச்சா… வா போகலாம்”

“சரி வரேன்…. ஆனா சரூ எங்கிட்ட பேசனும்.  அப்பதா வருவேன்”

சரயூ தன் முகத்தை திருப்பி கொண்டாள்.

“வேதிக் வர முடியுமா? இல்லையானு கேளு… எனக்கு நேரமாகுது”

“மச்சா ப்ளீஸ்! என்னால முடியல… தயவு பண்ணி போயேன்”

வாய் திறந்து ஏதும் பேசாமல் புன்னகைத்தபடி தலையை இட வலமாக ஆட்டினான் சஞ்சய்.

“நீங்க ரெண்டு பேரும் போட்டிக்கு போகலாமா வேணாமான்னு ஒரு முடிவு பண்ணி வந்து சேருங்க.. நான் இப்போ போறேன்.  உங்க சண்டைக்கு நான் பலியாடு இல்லை” விட்டால் போதுமென ஓட்டம் பிடித்திருந்தான் வேதிக். 

சிறிது நேரம் அவர்களிடையே அமைதி நிலவியது.

சரயூ திரும்ப திரும்ப கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்து கொண்டிருந்தாள்.

அவளின் முகத்திலிருந்த கோவமும் போட்டிக்கு நேரம் குறைவாக இருந்தும் அவனிடம் பேசாமலிருந்த பிடிவாதமும் அவனை வெகுவாக ஈர்த்தன.

“சரூ! வா போகலாம்… நேரமாச்சு” அவளுக்காக விட்டுகொடுத்தான்.

“நீ ஒன்னும் விட்டுகொடுக்க வேணா… நந்தி விஷயத்தை சொல்லு.  அப்புறமே போகலாம்”

அவளின் பிடிவாதத்தினால் இவனிடம் உதித்த இளநகையோடு நந்தி விஷ்யத்தை சொல்லி முடிக்கவும் சரயூ சிரிக்க ஆரம்பித்தாள்.

“இதுக்குதானா நந்தி பற்றி பேசினப்போ மைதி கோவபட்டாளா?”

“ஆமா! சரூ உனக்கு அண்ணன் இருக்காரு… எப்போ வேணாலும் நீயும் நந்தியாகலாம்”

“என்ன சொன்ன?” அவனை அடிக்க கையை ஓங்கினாள்.

அவளிடம் தப்பித்து சஞ்சய் ஓடவும் சரயூ அவனை துறத்தி கொண்டு ஓடினாள்.

சஞ்சய் எதிரில் வந்து கொண்டிருந்தவனின் மேல் மோதவும் அவன் கையிலிருந்த புத்தகங்கள் நழுவி கீழே விழுந்தன.

“சாரி பாஸ்!” என்று மன்னிப்பு கேட்டபடி புத்தகங்களை எடுத்து அவனிடம் கொடுக்கும்போது சரயூ இவனை பிடித்துவிட்டாள்.

“மாட்டினியா சஞ்சு! வாங்கிக்கோ” சஞ்சயின் முதுகில் நான்கு அடி கொடுத்தாள்.

எதிரிலிருந்தவன் இவர்களை வேடிக்கை பார்த்தபடி நிற்கவும்

“ஐ ம் சாரி பாஸ்! இவ என்னை விரட்டவும்தா உங்க மேல மோதிட்ட” மறுபடியும் மன்னிப்பு கேட்டான் ஜெய்.

அப்போதுதான் அவனை கவனித்தாள் சரயூ.  ஒரே ஒரு நொடி யோசனை கோடுகள் தோன்றி மறைந்தன.  சட்டென அவளின் முகம் மலர்ந்து போனது. 

“ஹெல்லோ! நீங்க….” பெயர் தெரியாமல் இழுக்கவும்

“கிரண்” தன்னை அவள் கண்டு கொண்டாள் என்ற மகிழ்ச்சி மனதில் பொங்க பதிலளித்தான் எதிலிருந்தவன்.

“சாரி கிரண்! டென்ஷ்ன்ல உங்க பேர கூட கேட்காம வந்துட்டே… தேங்க்ஸ் அ லாட் கிரண்!”

“இட்ஸ் ஆல்ரைட் சரயூ!” புன்னகைத்தான் கிரண்.

“ஸோ ஸ்வீட் ஆஃப் யூ! உங்களுக்கு என் பேரு தெரியுமா?” ஆச்சரியத்தில் விரிந்த அவள் கண்களும் மேலேறிய புருவங்களும் கிரணை ஈர்த்தன.

“ஒரே காலேஜுல படிக்கறப்போ பேரு தெரியாம இருக்குமா?”

“நீங்களும் இங்கதா படிக்கிறீங்களா கிரண்!”

“ஆமா! ஈ.என்.ஸி தர்ட் இயர்”

“தட்ஸ் நைஸ்! இவன் என் ஃப்ரெண்ட் சஞ்சய்”

“இவர் கிரண்…நேத்திக்கு இவரு வண்டில மோதிட்ட…ஹீ ஸ் வெரி கைண்ட்… என்னோடதுதா தப்பு… இருந்தாலும் நான் க்ளாஸ்க்கு நேரத்துக்கு வறர்துக்கு ஹெல்ப் பண்ணாறு” இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகபடுத்தினாள் சரயூ.

இப்போது இருவரும் “ஹாய்” என்றபடி கையை குலுக்கினர்.

“சாரி கிரண்! இப்போ எங்களுக்கு ஃபேஸ் பெயிண்டிங்க் காம்பிடிஷன் போக நேரமாச்சு… அப்புறம் பார்க்கலாம்”

“பரவாயில்லை! நீங்க கிளம்புங்க… ஆல் தி பெஸ்ட்” என்று நகர்ந்தான் கிரண்.

Episode 09

Episode 11

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.