(Reading time: 21 - 41 minutes)

04. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

AEOM

“நட்சத்திர நடுக்கம் கண்களிலே

மேஹங்களின் தொடக்கம் கூந்தலிலே

ஒருகிராம் மின்னல் இடையினிலே

நான் உனக்கேன பிறந்தேன் பூமியிலே

தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே

சுட சுட ஆசை வருகிறதே

துள்ளி துள்ளி உந்தன் மடியினிலே பனிதுளி

மனசு விழுகிறதே...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

திங்கள் ஒளிந்துக்கொண்டதால் திங்கள் பிறக்க அந்த நாள் தனக்கு வைத்திற்கும் நிகழ்வுகளை அறியாமல் தனது அலுவலகத்தை நோக்கி பயணமானால் கவி. காலையிலிருந்து அவள் ஆகாஷை பார்க்காமல் இருக்க அது அவளுக்கு நிம்மதியை மட்டும் தராமல் ஏமாற்றத்தையும் தந்தது.ஆனால் அந்த ஏமாற்றம் அவளை மிகவும் பாதிக்கவில்லை.ஏமாற்றத்தையே வாழ்கையாய்  கொண்டவளுக்கு அது பெரிதாக தெரியவில்லை.

அலுவலகத்தை அடைந்ததும் அனு அவளது ஸ்கூட்டியை நிறுத்த செல்ல,பார்கிங் ஏரியாவின் அருகில் நின்றிருந்த கவியிடம் வந்த செக்யூரிட்டி அவளிடம் ஒரு பார்சலை தந்தார்.

அவளிடம் கொடுக்குமாறு ஒருவர் கொடுத்து சென்றதாக அவர் சொல்ல அதை வாங்கி கொண்டவள்,யார் கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் யோசித்து கொண்டிருந்தபொழுது அவள் அருகில் வந்தாள் அனு.

“என்ன கவி கிப்ட் பார்சல் கையில இருக்கு, இன்னைக்கி உன்னோட பர்த்டே கூட இல்லையே..”

“யாரு குடுத்தாங்கனு தெரில,செக்யூரிட்டி அண்ணா குடுத்தாங்க..”

“ம்...,அப்படி என்ன இருக்குனு பாரு..,அப்பறமா யாரு குடுத்துருப்பாங்கனு யோசிக்கலாம்..”

என்று அனு கூற அதை பிரிக்க ஆரம்பித்தால் கவி. கிப்ட் கவரை பிரித்து பார்த்தாள் ஒரு ப்ரௌன் கலர் பாக்ஸ் இருந்தது.அதனை அவள் திறக்க அதனுள் சிறுசிறு கிப்ட் கவர் செய்யபட்ட பாக்ஸ்கள் இருந்தன.

அதனை பார்த்து எடுத்து பிரித்த அனு அதனுள் இருந்த பொருளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

அவள் சிரித்தவுடன் அதை வாங்கி பார்த்தவளுக்கு கோபம் தலைக்கேறியது.யாரோ தன்னை கலாய்க்க செய்திருக்கிறார்கள் என்று நினைத்தாள். பின்ன என்னாங்க யாராவது குச்சிமிட்டாய அனுப்பவுவாங்களா...

அடுத்து என்ன என்ன இருக்குதுன்னு பார்க்க ஆரம்பித்தால் அவள்.

அனைத்தும் அவள் சிறு வயதில் விரும்பி சாப்பிட்ட பொருள்கள்.

ஈச்சங்காய்,நாவல்பழம்,ஏலந்தபழம்,விளாம்பழம் என அவளுக்கு பிடித்த திண்பண்டங்களாக இருந்தது.அதில் ஒரு கடிதம் இருந்தது அதில் கீழ்கண்ட வரிகள் இருந்தது.

 “கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு உன் கைவிரலாய்

நான் இருந்தேன்

பட்டாம்பூச்சி வண்ணம் தொட்டு உன்

நெற்றியிலே பொட்டு வைத்தேன்

“கவி உன்னை யாரோ கலாய்க்கதான் அனுப்பி இருக்காங்கனு நினைக்கிறேன்..”என்றாள் அனு`

ஆனால் கவிக்கு புரிந்தது இதை தனக்கு தெரிந்தவர்கள் தான் அனுப்பியுள்ளனர்.அது ஆகாஷ் இல்லை,அவனுக்கு கண்டிப்பா இதப்பத்தியெல்லாம் தெரியாது,வேற யார இருக்கும்,ஒருவேளை அந்த கொசுவா இருக்குமோ..என்று யோசித்தவாரே அலுவலகத்தை நோக்கி சென்றாள் கவி

தனது நண்பர்கள் கூட்டத்தில் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு தனது கேபினுக்கு சென்றவளுக்கு அடுத்த அதிர்ச்சிக்காத்திருந்தது.

அவளது சிஸ்டத்திற்கு அருகில் அவளுக்கு பிடித்த பூக்களினால் ஆன பூச்செண்டும்,அவளுக்கு பிடித்த கலரில் ஆன ஒரு சுடிதாரும் இருந்தது.அதனுடன் அதே போல் வரிகளுடன் கடிதம் இருந்தது.

“கூழாங்கல்லை கொண்டுவந்து நீ

கோலி ஆட கற்றுதந்தேன்

அவளது சந்தேகம் ஐம்பது சதவீதம் உறுதியாகிவிட்டது.

அதை ஓரமாக எடுத்து வைத்தவள் புது ப்ராஜெக்ட் பற்றி அளிக்கப்பட்ட தகவல்களில் தனது எண்ணத்தை செலுத்தினாள்.

ஒரு வழியாக மதியஉணவுவேளை வரவும், தனது வானர பட்டாளங்களுடன் காண்டீன் சென்றவளுக்கு அங்கேயும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவள் ஆர்டர் செய்ததாக கூறி ஒரு ஹோட்டலில் இருந்து உணவு வந்திருந்தது.அதிலும் அவளுக்கு மட்டும் அல்லாமல் அவளது கூட்டத்திற்கும் சேர்த்து வந்திருந்தது.

“என்ன கவி திடீர்னு இதையெல்லாம் பண்ற..” என்றான் சுதாகர்.

“ஒன்னும் இல்ல,அதபத்தி சாப்பிட்டுகிட்டே பேசலாம்..”என்றாள் கவி.

“என்ன கவி,பேசாம நீ ஆர்டர் பண்ணத விட நாம ஹோட்டலுக்கு போயிருக்கலாம்...” என்றாள் மித்ரா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.