(Reading time: 21 - 41 minutes)

ன், கவி இவ்வளவு நாள் கஷ்டபட்டு சம்பாதித்த எல்லாம் உனக்கு வாங்கி கொடுத்து அழிக்கவா...”என்றான் அமர்.அவன் அப்படி கூறியதும் அனைவரும் சிரிக்க

“டேய்...”என அவனை முறைத்தாள் மித்ரா.

அனைவரும் சென்று டேபிளில் அமர்ந்தவுடன், எல்லோருக்கும் பார்சலை கொடுக்க ஆரம்பித்தாள் யாமினி.ஒரு பார்சல் மீதி இருந்தது.

“இது யாருக்கு கவி..”என்றாள் யாமினி.

“ ஒரு வேலை எக்ஸ்ட்ராவா சொல்லிருப்பா மினி” என்றாள் மித்ரா.

“கவி அப்படினா நீ இன்னும்ல எக்ஸ்ட்ராவா சொல்லியிருக்கணும்...”என்று மித்ராவை பார்த்தவரே சொன்னான் அமர்.

“டேய்,மிதுவ வம்புக்கு இழுக்கமா உன்னால இருக்க முடியாதா..”என்று அவனை கேட்டான் அர்னவ்.

“விடு அர்னவ் சிலருக்கு பொறாமை என்னமாதிரி சாப்பிட முடியலனு..”என்றாள் மித்ரா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

“இருக்கலாம் மிது,சொல்லு கவி என்ன விஷயம்...”என்று அர்னவ் கேட்டுகொண்டிருந்தபொழுதே அவர்களை நோக்கி ஆகாஷ் வந்தான்.

“ஹாய்.,நானும் ஜாயின் பண்ணிக்கலாமா..”என்றபடி கவிக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.அவனுக்கு மீதமிருந்த பார்சலை தந்தாள் யாமினி.

அப்பொழுதுதான் அந்த பார்சல் அவனுக்கும் சேர்த்து வந்துள்ளது என்று புரிந்துகொண்டாள் கவி.

“என்ன ஸ்பெஷல் யாமினி..”என்று யாமினியை கேட்பதுபோல் கேட்டுவிட்டு கவியை பார்த்தான் ஆகாஷ்.

உனக்கு இதபத்தி தெரியாது என்பதுபோல் பார்த்தாள் கவி.அதனை உணர்ந்ததுபோல் தனக்கு தெரியாது என்பது போல் தலையை ஆட்டினான் ஆகாஷ். இத நம்ப சொல்லுரிங்களா என்னை என்பதுபோல் அவள் பார்க்க....ஒன்னும் சொல்லாமல் தனது உணவில் கவனம் செலுத்துவது போல் அவளிடமிருந்து தப்பிக்க பார்த்தான் ஆகாஷ்.

அதன் பிறகு அனைவரும் அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.மித்ரா மட்டும் அமரை தவிர்த்து மற்றவர்களிடம் மட்டும் பேசினாள்(நம்ப மித்ராவுக்கு கோபம் கூட வருமா..,என்னாலையே நம்ப முடியல..). அதை கவனித்தவன் அவளிடம் பேச முயல அவள் அவனை தவிர்த்தாள்.

“ஏய் மிது ,எதுக்குடி இப்படி பண்ற..”என்றான் அமர்.

“நான் என்ன பண்ணேன்..”என்றாள் மித்ரா.

“நீ எதுக்கு இப்ப என்கிட்ட பேச மாட்டேங்குறா....”என்றான் அமர்.

“நான் நல்லாதானே  பேசிக்கிட்டு இருக்கேன்...”என்றாள் மித்ரா.

“அம்மா பரதேவதையே...,நான் செஞ்சது தப்புதான், நீ அந்த தப்புக்கு என்ன தண்டனைக் கொடுத்தாலும் ஏத்துகுறேன்...”என்றான் அமர்.

“அப்ப  உன்னோட சிக்கன்பீஸ எனக்கு தந்துடிரியா(நான் கூட நம்ப பொண்ணுக்கு ரோஷம் இருக்குனு நினைச்சேன்..,ம்ம் இப்படி சிக்கன் பீஸ்க்கு கவுந்துட்டியே)...”என்றாள் மித்ரா.

அதுவரை அவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

அவர்களை முறைத்துபார்த்த அமர், மித்ராவை திரும்பிபார்க்க  அவளோ சிக்கன்பீஸ்ஸில் பிஸியாகி விட்டாள்.

அவளை பார்த்தவன் அடிப்பாவி என்றான்.(அமர் நல்லா யோசிச்சுக்கோ..,நான் வேணாலும் புது ஜோடிய உனக்கு இன்ட்ரோ பண்றேன் சொன்னேன்ங்க  ஆனால்  அவனுக்கு அவோனோட மிதுவே போதுமாம்..,நீங்க எல்லாரும் தான் சாட்சி பியூட்சர்ல அவன் என்ன திட்டுனா நீங்க எல்லாரும்தான் கேக்கணும்...ஓகே).

“உலகெங்கிலும் சுகம் உள்ளது

அதை வாங்கிட பணம் உள்ளது

மனசு மயங்குதே எதுக்காக

நமக்கானவன் யார் என்பதை

நம் கண்களால் நாம் தேடனும்

மனசு மயங்குது அதுக்காகே”

ரு வழியாக அனைவரும் சாப்பிட்டுமுடித்து விட்டு அவரவர்களது வேலைக்கு சென்றனர்.            

மாலையில் அலுவலகம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு அனைவரும் செல்ல, பார்க்கிங் ஏரியாவிற்கு வெளியில் நின்ற கவி முன்பு ஒருவன் ஒரு காலை மடக்கி அமர்ந்து கையில் பூச்செண்டுடன் இருந்தான்.

அவனை கோபமாகா பார்த்துக் கொண்டிருந்தாள் கவி. தங்களது வாகனங்களுடன் வெளியில் வந்த அமரும்,சுதாகரும் அதனை பார்த்து அவர்களை நோக்கி சென்றனர்.

கவியின் முன் நின்றவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “என்ன கவி யாரு இவரு” என்று கேட்டான் அமர்.

“இவரு யாருனே தெரில அமர்..”என்றாள் கவி. அதுவரை அமைதியாக இருந்தவன், எழுந்து

“அடிப்பாவி..`’ என்று கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.