(Reading time: 21 - 41 minutes)

டுத்தநாள் காலையில் அவளது மஞ்சு அத்தை கொடுத்த பாலை தோட்டத்தில் அமர்ந்தது குடித்துக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது அவளது அருகில் வந்து விஷ்வாவும்,காவ்யாவும் அமர்ந்தனர்.

அவர்களை கண்டுகொள்ளாதது போல் அமர்ந்துக்கொண்டாள் கவி. அவளது அருகில் வந்த “காவ்யா  நேற்று தனது அன்னை தள்ளி விட்டதால் ஏற்பட்ட சிராய்ப்பினை தனது பிஞ்சு கைகளால் தடவி விட்டு,ஊதியும் விட்டாள்.

“க..வி உங்கு வலிக்குதா...”என்று கேட்டாள் காவ்யா.

அக்கம்பக்கம் பார்த்தவள் தனது அத்தை இல்லை என்பதை உணர்ந்தவள்,

“பாப்பா..,உங்க அம்மா பார்த்து திட்டமாட்டங்க...”என்றாள் கவி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவளின் அருகில் வந்த விஷ்வா, “என் பேரு விஷ்வா…” நேற்று அவள் கேட்ட கேள்விக்கு இன்று பதில் சொன்னான்.

கவி அவனிடம் சினேகமாக சிரித்தாள்.இருந்தாலும் சுற்றும்முற்றும் மீண்டும் பார்க்க

“பயப்படாத கவி,அம்மா இனி திட்டமாட்டாங்க,தாத்தா நேத்து வந்து திட்டினாறு..,நீ பயப்படாத இனி அவங்க நீ எங்ககிட்ட பேசுனா ஒன்னும் சொல்ல மாட்டாங்க..”என்று அவளை பார்த்துக் கூறினான் விஷ்வா.

“நிஜமாவா...”என்று அவனிடம் கேட்டாள் கவி.

“ஆமாம்...,இனி உன்னை நாங்க பத்திரமா பாத்துக்கணும்னு சொன்னாரு..”என்றான் விஷ்வா.

“ஐ ஜாலி,அப்ப பாப்பாவ நான் கொஞ்சலாம...”என்றாள் கவி.

“நீ..என்ன.கிள்ளலாம்..”என்றாள் காவ்யா.

அதன் பிறகு அவர்கள் மூவரும் சேர்ந்து அந்த வீட்டையே கதிகலங்க வைத்தனர்.கவி மிகவும் சந்தோசமாக இருந்தாள்.ஆனால் அது வெறும் பதினைந்து நாட்களுக்கு மட்டும் தான் நீடித்தது.

அவள் அந்த வீட்டிற்கு சென்று பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது ஒருவாரு அந்த வீட்டில் ஒன்ற ஆரம்பித்து இருந்தாள்.அவளுக்கு அந்த வீடு பிடித்திருந்தது. அவளது தாத்தாவும்,மாமாவும் தான் அவளுக்கு அனைத்துமாய் அவளுக்கு இருந்தார்கள்.அவளது பெரியஅத்தை மஞ்சுளா அமைதியானவர். அவளை அன்பாய் பார்த்துக்கொண்டாள்.அவளது சின்ன அத்தை மட்டும் அவளை கண்டாள் எரிந்து விழுவாள்.அவளது சின்னமாமா மனைவி இல்லாத நேரங்களில் அவளிடம் பேசுவார்.மற்ற நேரங்களில் பேசமாட்டார். விஷ்வாவும்,காவ்யாவும் சொல்லவே தேவையில்லை அவளுடன் நன்கு ஒன்றிவிட்டனர்.

அன்றும் அதுபோல தான் அவர்கள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.பின்னால் பார்த்தவாரே ஓடி சென்ற கவி ஒருவன் மீது மோதி நின்றாள்.அவன் அவளைவிட உயரமாக இருந்தான்.அவளை விட ஒரு ஐந்து வயது அதிகமாக இருக்கும்.

“யார் நீ..”என்று அந்த புதியவன் அவளை பார்த்துக் கேட்டான்.

“கவி...”என்றாள்

அங்கு வந்த விஷ்வா,அவனை பார்த்து”அண்ணா...”என்று ஓடி வந்துஅவனை கட்டிக்கொண்டான்.

“கவி..,இது என் அண்ணா..”என்று அவளுக்கு பெரியமனிதன் தோரணையில் அறிமுகபடுத்தி வைத்தான்.

“யாருடா..,இது..”என்று அவன் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது ,அங்கு வந்தார் மஞ்சுளா.

“டேய்..,ஆகாஷ் எப்படா வந்த..”என்று அவனிடம் கேட்டார்.

“இப்பதான் அம்மா..,யாருமா இந்த பாப்பா..,நம்ம காவி மாதிரி இருக்கா..”என்றுக் கேட்டான் ஆகாஷ்.

“இது...இது...உன்னோட கவியரசி அத்தை பொண்ணு...”என்று அவர்க்கூறி முடிக்கவும் அவனது முகம் மாறியது.

அவனது முகமாற்றத்தை கண்ட அவள் பயப்பிட,அவன் அவள் அருகில் வந்து “நீ எதுக்கு இங்க வந்த இந்த வீட்ட விட்டு போ...” என்றுக் கத்தினான்.

அதில் மிகவும் பயந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

னது மொபைல் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்க அதில் தனது நினைவுலகத்திற்கு வந்தவள், யாரு என்றுப் பார்க்க யாமி என்று வர சலித்துக் கொண்டாள்.

“சில நேரங்களில் விழ வைக்கிறாய்

சில நேரங்களில் எழ வைக்கிறாய்

எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு

விழ வைப்பதும் எழ வைப்பதும்

அழ வைப்பதும் சுகம் சேர்ப்பதும்

அழகு பதுமையின் கையோடு”

கதவும் இடைவிடாமல் தட்டிக்கொண்டிருக்க அழுததால் தலைவலி வேறு அவளை இம்சிக்க ஒரு வழியாக கதவை திறந்தாள்.

அங்கே ஆகாஷ் நின்றுக்கொண்டிருந்தான்.அவனை பார்த்து சலித்தவள்..,கதவை சாத்தபோக அவன் அவளை தடுத்தான்.

“என்ன வேணும் உங்களுக்கு,என்ன நிம்மதியா விட மாட்டிங்களா..”என்றாள் காவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.