(Reading time: 21 - 41 minutes)

வள் அந்த  வீட்டில் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நினைத்தாள்.ஆனால் நாம் நினைத்தது எல்லாம் நடந்தா விடுகிறது.அதேதான் அவளது வாழ்கையிலும் நடந்தது.பெரியவர்களுக்கு இடையேயான கோபம் சிறியவர்களை வந்தடையும் பொழுது அது அந்த பிஞ்சு நெஞ்சை  எவ்வளவு பாதிக்கும்.அதுதான் கவியின் விழயத்திலும் நடந்தது...

அந்த வீடு சிலரால் சொர்க்கத்தையும்,சிலரால் நரகத்தையும் அவளுக்கு தந்தது.

அவளுக்கு சொர்கத்தை தந்தவர்களில் விஷ்வாவும் ஒருவன்.நாகராஜன்-நளினி அவர்களின் மகன்,மகள் தான் விஷ்வாவும்,காவ்யாவும்(கவலை படாதிங்க இவங்களையும் சீக்கிரம் அறிமுக படுத்துறேன்...).

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

முதல் நாள் அவர் தாத்தா அவர்களை அந்த வீட்டின் அராத்துகள் என்று அவளுக்கு அறிமுக படுத்த அவள் சிரித்துக்கொண்டே அவர்களை அவள் ஏறிட அந்த அராத்துகள் இரண்டும் அவளை முறைத்துக்கொண்டே பார்த்தனர்.

அவர்களுக்கு தனது தாத்தா புதியதை ஒரு குட்டி பெண்ணை ஏந்தியுள்ளார்.அதுவும் தங்களை விட்டு விட்டு ..என்றாள் எவ்வளவு கோபம் வரும்...அதைதான் அவர்கள் செய்துக்கொண்டிருந்தனர்.

அதுமட்டும் இல்லாமல் தாத்தாவேறு அவள் அந்த இடத்துக்கு புதியவள்  அவளுக்கு அவளது அன்னை ஞாபகம் வரகூடாது என்று நினைத்து சாப்பாடு கூட அவர் ஊட்டிவிட்டார்.அவர் உடனே அவளை படுக்க வைத்துக்கொண்டார்.

இது எல்லாம் சேர்ந்து அவளை அவர்களுக்கு எதிரியாக்கி விட்டது.அவர்களுக்கு அவள் வந்த அரைநாளிலே அவளை பிடிக்காமல் போய்விட்டது.

AEOM

மாலைவேளை அவள் தோட்டத்தில் இருந்த பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தாள்.          

அப்பொழுது அவள் அருகில் வந்த  விஷ்வாவும்,காவ்யாவும் அவளை முறைத்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம்.

“ஏய் உன் பே...ரு என்ன..”என்று தன்னை ஹீரோ ரேஞ்சுக்கு பீல் பண்ணி கேட்டான் விஷ்வா.

தனது கையை ரெண்டு பக்க இடுப்பில் வைத்துக் கொண்டு அவனை பார்த்து ஒரு லுக் விட்ட கவி அவனிடம்”என் பேரு கவி...மலர்,உன் பேரு என்ன..,இது உன்..னோட.. தங்கச்சி பா..ப்பாவா...,அழகா இருக்கு..”என்று காவ்யாவின் கன்னத்தை கிள்ளினால் கவி.

அவள் கிள்ளியவுடன் காவ்யா தனது அண்ணனை அழுதுக்கொண்டே பார்த்தாள்.

“அன்னு...,அவ ...கிள்ளி..”என அவனது கையை பிடித்து ஆட்டினாள் அவள்.

அந்தநேரத்தில் அங்கு வந்த நளினி,அவள் தன் குழந்தையை கிள்ளுவதை பார்த்து,கவியை அப்படியே கீழே தள்ளிவிட்டு விட்டார்.

“அம்மா.....”என்று கூவளுடன் கவி விழுந்து அழ தொடங்கிவிட்டாள்.அதனை பார்த்த விஷ்வா, காவ்யாவிற்கு மனது கஷ்டமாகிவிட்டது.

“என்ன தைரியம் இருந்தா என் பொண்ணு மேல கையை வச்சிருப்ப..,அவளை இன்னொரு தடவ தொடு அப்படியே...”

“இல்ல அத்த..,நான்....”என்று அழுதுகொண்டே கவி பேச

“ஏய் வாய மூடு..,யாரு யாருக்கு அத்தை..,தடவ என் பொண்ணு,பையன தொட்ட..அவ்வளவுதான்

அவங்கள என்ன உன்ன மாதிரி அநாதைனு நினைச்சியா...”என்று அவர் மேல பேச போக அங்கு வந்த நாராயணன் இதையெல்லாம் கேட்டுவிட்டார்.

“நளினி..”என்று நாராயணன் கோபமாக இடையிட்டார்

“சின்ன குழந்தைட என்ன பேசுறதுன்னு தெரியாது..”

“மாமா..,இவளையும் இவங்க அம்மா மாதிரி பாசம் காட்டி வளக்காதீங்க,அப்பறம் அவள மாதிரி ஒடுகாளிய....”என்று அவர் முடிக்கவில்லை

“நளினி...”என்ற காட்டமான குரலில் திரும்பி பார்த்த நளினி தனது மாமனார் ருத்ர மூர்த்தியாக நிற்கவும், தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

கீழே விழுந்திருந்தவளை தூக்கினார் நாராயணன்.

“அம்மா...அம்மா..”என்று அழுத தன் பேத்தியை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டார்.

“அழ கூடாது கவிம்மா,நம்ப அத்தை தான..,நீங்க அழகூடாது..”என்றார்.

ஒரு வழியாக அவளை சமாதான படுத்தி சிரிக்க வைத்துவிட்டார்.ஆனால் அவள் தன்னிடம் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் அவரை குற்ற உணர்வு தாக்க அவருக்கு அவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

அவள் அவரிடம் கேட்ட கேள்வி”அனாதை..னா என்ன தாத்தா...”என்றுக் கேட்டாள்.

“அப்படினா ஒன்னும் இல்ல, தாத்தா சொன்ன கேட்பிங்கள,நாம இப்ப டீ குடிக்க போகலாம்...”என்று அந்த பேச்சை அதோடு முடித்து அழைத்துச் சென்றுவிட்டார்.

ஆனால் இன்று பலர் சொல்லாமலே அவள் புரிந்துக்கொண்ட வார்த்தை அவளை எவ்வளவு துடிக்க வைத்துள்ளது. 

அதன் பிறகு அவள் யாரிடமும் பேசவில்லை.அவளுக்கே தெரியாமல் ஒரு பய உணர்வு அந்த பிஞ்சு மனதில் துளிர் விட ஆரம்பித்தது.

அவளது அன்னை நினைவு அவளுக்கு வர தாத்தாவிடம் அவளது அன்னைப் பற்றிக் கேட்க அவர் அவளிடம் அவளது அன்னை அப்பாவை அழைக்க சென்றிருப்பதாக கூறினார்.அம்மாவுடன்,அப்பாவும் வர போகிற சந்தோஷத்தில் அவள் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சி  கானல்நீர் போன்றது என்று அந்த பிஞ்சு மனதிற்கு தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.