(Reading time: 21 - 41 minutes)

தான் பிடிக்கலன்னு சொல்லியச்சுல அப்ப எதுக்கு இங்கயே இருந்து நேரத்த வேஸ்ட் பண்ணனும்,ஒழுங்கா ஊருக்கு போக வேண்டியதுதானே..” அதுவரை அவள் சொல்லுவதை கேட்டுக்கொண்டிருந்தவன் அவள் இப்படி சொன்னவுடன் ஒன்னும் புரியாமல் முழித்தான். பிறகு அவள் பார்வை தன்னைநோக்கி இல்லாமல் இருப்பதை கவனித்தவன்,அப்பாடா நம்பல இல்ல,படுபாவி ஒரு நிமிஷத்துல பயப்புட வெச்சுட்டாலே,நான்கூட நம்பஆளு நம்பல பிடிக்கலனு இவகிட்ட சொல்லிருப்பானு தப்பா நினைச்சி பயந்துட்டோம் “சாரிடி என் அம்முக்குட்டி”என்று மனசுக்குள்ளே தனது காதலியிடம் பேச ஆரம்பித்தான் விஷ்வா.

அவள் தன்னைதான் சொல்கிறாள் என்று புரிந்துக் கொண்ட ஆகாஷ் அவளுடன் வார்த்தைபோருக்கு தயாரானான்.

“பருவம் சொல்லும் காதல்

பாதை மாறி போனால்

அழகு பெண்ணின் வாழ்க்கை

அப்போது என்னாகுமோ

காதல் கொள்ளும் ஆண்கள் தவறு

செய்வது இல்லை

கள்ள நெஞ்சத்தில் பெண் காதல் குடிகொள்ளுமோ”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“விஷ்வா..”என்று ஆகாஷ் தன்னை அழைத்ததும் புரிந்துக்கொண்டான் இவங்க பஞ்சாயத்துக்கு நம்பதான் இன்னைக்கு நாட்டாமையா..என தன் நிலையை நினைத்து உமையாக உள்ளுக்குள் அழ ஆரம்பித்தான் விஷ்வா.

“நமக்கு உரிமையான பொருள நாமதான் எடுத்துக்கணும் புரிதா...”

“அது பொருள இருந்தா,இது உயிர் உள்ள பொண்ணு..”

“நான் இல்லைன்னு சொல்லலியே ,ஆனா அந்த பொண்ணு ஒரு குழந்த மாதிரி,தனக்கு தெரிஞ்ச உலகம்தான் நல்லது மத்தது எல்லாம் கேட்டதுன்னு நினைச்சிட்டு இருக்கு...”என்றான் ஆகாஷ்.

அதற்கு பதில் அளிக்க கவி முற்பட அதற்குள் இடையிட்ட விஷ்வா

“ஏன் குட்டிம்மா உன்பக்க நியாயத்த மட்டும் பார்த்துப் பேசுற...”என்று விஷ்வா கூற,அவனை ஒரு அடிபட்ட பார்வை பார்த்தவள்,”உங்க யாருக்கும் என் மனச புருஞ்சிக்க தெரில..”என்று அவள் கூறவும்  அவர்களது குடியிருப்புபகுதி  வரவும் சரியாக இருந்தது.ஆகாஷ் வண்டியை நிறுத்தியதும் இறங்கியவள் அவர்களை திரும்பி பார்கமால்,தனது பிளாட்டை நோக்கி சென்றாள்.

“ஏன் விஷ்வா இப்படி பண்ண..”என்றான் ஆகாஷ்.

“அப்பறம் என்ன செய்ய சொல்லுரிங்க அண்ணா,அவ வருவா வருவானு ரெண்டு வருசமா காத்துகிட்டு இருக்காங்க,அவனுங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு தர்ணா பண்றாங்க...”என்றான் விஷ்வா கடுப்பாக.

“விஷ்வா அவளை புரிஞ்சிக்கோ..”என்றான் ஆகாஷ் வேதனையுடன்,”அவ மனசுக்குள்ள நிறைய வேதனைகள் இருக்கு..,நம்மகிட்ட அவ சொல்லுல...”என்று அவன் முடிக்க,விஷ்வாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

மௌனமாக அவர்களது பிளாட்டை அடைந்தனர்.

சிறிது நேரம் கழித்து காலிங்பெல் அடிக்க,ஆகாஷ் டீபோட்டு கொண்டிருந்ததால் விஷ்வா சென்று கதவை திறந்தவன் அங்கே அனுவும்,யாமினியும் நிற்பதைக்கண்டு உள்ளே வர சொன்னான்.

“விஷ்வா....கவி கதவை திறக்க மாட்டேங்குறா..”என்றாள் யாமினி.

“கொஞ்ச நேரம் கழித்து அவளே கதவை திறப்ப..,அது வரைக்கும் இங்கே இருங்க..”என்றான் விஷ்வா.

“ஏன் விஷ்வா எதாவது பிரச்சனையா,நீங்க எதாவது கவியை சொல்லிட்டிங்களா...”என்றாள் அனு.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை..”என்றான் விஷ்வா.

“அப்ப எதுக்கு அவ கதவ திறக்கல..”என்று கேட்டாள் அனு.

“அவ வருவா..,கொஞ்ச நேரம் அவளை தனியா விடுங்க...”என்றான் விஷ்வா.

அதன்பின் யாமினியும்,அனுவும் அமைதியாக சோபாவில் அமர்ந்தனர். விஷ்வாவும் டிவியை ஆன் பண்ணி அவர்களுடனே அமர்ந்ததுகொண்டான்.

ஆகாஷ் அவர்களுக்கு டீ கப்புகளை கொடுத்துவிட்டு தானும் ஒரு டீகப்பை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான் ஆகாஷ்.

கவியோ விஷ்வாவின் கேள்வியால் மனமுடைந்துபோனால்,வீட்டினுள் சென்றவள் தனது பேக்கை தூக்கி போட்டுவிட்டு தரையில் படுத்துக்கொண்டாள்.

என்னமோ என்ன சுயநலவாதி மாதிரி சொல்லுறான்.அவன் வீட்டுல இருக்குறவங்க மாதிரிதானே அவனும் இருப்பான்.எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்காங்க.இறைவா எனக்கு மட்டும் ஏன் எனக்குனு இருக்குறமாதிரி ஒரு சொந்தத்தை தர மாட்டேங்குற…என்று அந்த இறைவனையும் சேர்த்து திட்ட ஆரம்பித்தவளின் கண்களில் கண்ணீர் உடன் பழைய நினைவுகளும் அணிவகுக்க ஆரம்பித்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.