(Reading time: 21 - 41 minutes)

தற்குள் அவர்கள் இருந்த இடத்தை அவளது படை வந்தடைந்தது. அவனைப் பார்த்த யாமினி இவனா என்று மனதில் நினைக்க, அனு இவங்கிட்ட எதுக்கு இப்படி இவ முறைச்சிகிட்டு இருக்கா என்று யோசிக்க ஆரம்பித்தாள் அனு.

“ஏய் என்னடி என்னை உனக்கு தெரிலியா...”என்று அவன் கோபமாக கேட்க, அந்த புதியவனை முறைத்தனர் அனைவரும்.(பின்ன என்னாங்க அவன் யாருனே தெரில, பட்டுன்னு டி போட்டு கூப்பிட்டா...)

“ஆமாம்டா அப்படிதான் சொல்லுவேன். என்னடா பண்ணுவ..”என்றாள் கவி.

அவளது இந்த பதிலில் அவன் அவளுக்கு தெரிந்தவன் என்று புரிந்துக்கொண்ட நண்பர்கள் அதன்பிறகு ஒரு புன்னகையை மட்டுமே தங்கள் வசம் வைத்துக்கொண்டனர்.

அவள் கூறியதை கேட்ட அந்த புதியவன் ,சிவாஜிகணேசன் ரேஞ்சுக்கு ஒரு ஆக்டிங் போட்டுவிட்டு 

“கருப்புஎறும்புகள் நடக்கையிலே

கணக்கெடுத்தது நினைவில்லையா

கரும்பினை நீ கடிக்கையிலே உன்

பல்லுடைந்தது நினைவில்லையா

அதைக்கூடவா நீ மறந்துவிட்டாய்

அதற்குள்ளவா நீ மறந்துவிட்டாய்

ஆலம் தோணியில் ஆட்டம்போட்டது

தூண்டில் போட்டு பாம்பை பிடித்தது

பல்லாங்குழியில் இட்லிசுட்டது

நினைவில்லையா...”  என்று கவியைப் பார்த்து பாடினான் அந்தபுதியவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அவனை பார்த்த கவி சிரிப்புடனே அவனை துள்ளிகுதித்து கட்டிக்கொண்டாள். அவளை அணைத்துபிடித்தவன் ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சுவிட்டான்.அவள் கோபமாக அவனை தெரியாது என்று சொன்னவுடன் அவனது மனம் பட்டபாடு அவனுக்கு மட்டும் தான் தெரியும். எங்கு மற்றவர்களைபோல் தன்னையும் அவள் புறகணித்துவிடுவாளோ என்று பயந்துக் கொண்டுதான் அவன் காலையிலிருந்து இதனை செய்துக்கொண்டிருந்தான்.ஆனால் அவள் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கை அவனை காப்பாற்றியது.

“எப்படி டீ, இருக்க புலவி..”என்றான் அந்த புதியவன்.

“நல்லா இருக்கேன்டா கொசு...”என்றாள் கவி.

அவர்களிடம் ஆகாஷும் வந்து சேர்ந்தான்.அந்த புதியவனை பொறாமையுடன் பார்த்தான் ஆகாஷ்.

ஆகாஷின் பார்வையில் இருந்த ஏக்கத்தை உணர்ந்தவன்,அவளை விளக்கி நிறுத்தி,”உன்னோட பாடிகார்டலாம் அறிமுக படுத்தமாட்டியா....”என்றான் அந்த புதியவன்.

கவி அனைவரிடமும் திரும்பி ”நண்பர்களே இவன் பேரு விஷ்வா,என்னோட மாமா பையன்..” என்று அனைவருக்கும் அறிமுகபடுத்தி வைத்தாள்.அனுவுக்கும்,யாமினிக்கும் முன்பே தெரியும் என்பதால் அவர்கள் அவனிடம் இயல்பாகவே பேசினார்கள்.

அதன் பிறகு அனைவரும் ஒரு காபி ஷாப் சென்றனர்.அங்கு சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு சென்றனர்.

கிளம்புபொழுது அர்னவ் விஷ்வாவிடம்”எங்க ஸ்டே பண்ண போரீங்க விஷ்வா..”என்றுக் கேட்டான்.

“ஆகாஷ் அண்ணா வீட்டுல தான்..”என்று அவன் கூறியதும் அனைவரும் ஆகாஷையும் அவனையும் மாறிமாறி பார்த்தனர்.

“ஓ...,உங்ககிட்ட சொல்லவில்லை இல்ல,இவரு எங்க அண்ணாவோட காலேஜ் ப்ரண்டு..”என்று அதற்கு விளக்கம் அளித்தான் விஷ்வா.

அதற்கு மேல் அனைவரும் அவர்கள் வீடு நோக்கி செல்ல புறப்பட்டனர்.அனைவரும் பார்க்கிங் நோக்கிசெல்ல யாமினி கொஞ்சம் பின்னால் தனியே வந்துக்கொண்டிருந்தாள். அவளின் அருகே சென்றவன் அவள் காதருகில் சென்று,

”தேடினேன் தேடினேன்

பார்க்கும் இடமெங்கும் தேடினேன்

என்னவள் என்பவள் யார்...(2)”

 என்று பாடிவிட்டு கவியுடன் இணைந்துக் கொண்டான்.யாமினிக்கு தான் அவன் இன்னும் எதையும் மறக்கவில்லை என்று தோன்றியது.

யாமினி வீட்டில் யாருமில்லாததால் கவி,அனுவுடன் யாமினி தங்குவதாக இருந்ததால் அவளும் அவர்களுடனே சென்றாள்.யாமினி,அனு இருவரும் ஸ்கூட்டியில் வருவதாக சொல்லிவிட கவி,விஷ்வா இருவரும் ஆகாஷுடன் அவனது காரில் சென்றனர்.

ஆகாஷ் டிரைவ் பண்ண,பின்னால் கவியும்,விஷ்வாவும் அமர்ந்திருந்தனர்.

“என்ன சார் உங்க ஆளுகிட்ட பேசியாச்சா..”என்று விஷ்வாவை கேட்டாள் கவி.

“ஆமாம் பேசினா உன்னோட ப்ரண்டு கேட்டுட்டு அதுக்கப்புறம்தான் மத்த வேலை பார்ப்பா...”என்றான் விஷ்வா.

“ம்..,அவ மனசுல இருக்கறத தான் சொல்லமுடியும்...” என்றாள் கவி.

“அததான் நானும் சொல்லுறேன்..”என்றான் அர்னவ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.