(Reading time: 8 - 15 minutes)

14. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

ரு நாள்கூட நிம்மதியாய் உறங்கவில்லை ராகவேந்திரன். அர்ப்பணாவின் வீரம் ததும்பிய முகத்தில் திருப்தியான புன்னகையை பார்த்துவிட வேண்டும் என்ற தீவிரம் அவனை தூங்கவேவிடவில்லை. அவனுக்கே இது புதிதாகத்தான் இருந்தது.

“தெரியுமா அவளுக்கு? எந்நேரமும் என் சிந்தையில் தவழ்ந்து கொண்டிருக்கிறாள்!பேசாமல் பேசுகிறாள்.. நான் அவளது நினைவலைகளில்தாக்கப்படுகிறேன் என அறிவாளா?” இப்படி மனதில் ஒரு ஓரம் குறுகுறுப்பும் எழத்தான் செய்தது.

ராகவனே, உறங்கவில்லயெனில் அவன் ஆணை பிறப்பித்த மற்றவர்கள் மட்டும் உறங்கவா முடியும்? பம்பரமாய் சுழன்று வேலைப்பார்த்தனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்களிடம் பேசி ஏதேனும் கண்டுபிடித்துள்ளனரா என்று கேட்டு வைத்தான் அவன்.

அதே போல அனுதினமும் அர்ப்பணாவிற்கும் இதைப்பற்றிய தகவல்கள் சேர்வதற்கு ஏற்பாடு செய்தான்.அது மட்டுமின்றி அவளுக்கே தெரியாமால், அவளுக்காக பாதுகாப்பு கவசமொன்றை தயார் படுத்தியிருந்தான். ராகவனின் கழுகு பார்வையில் தான் அடைகாக்கப் பட்ட்தை உணராமல், மெல்ல இயல்பாகிட தொடங்கினாள் அர்ப்பணா.

சிற்பியின் வேதனை தரும் உளிதான் நல்லழகான சிற்பத்தை உருவாக்குகிறது.அதே போல தான் அவளது மனமும்! நிறைய கேலிகலும் கேள்விகளும் அவளை உளியாய் துளைக்க, அர்ப்பணாவின் மனம் வலிமைமிகு சிற்பமானது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இறுதியாய், வினயின் பொய் முகமும் வெளியுலகத்திற்கு அம்பலமானது. இந்த வெற்றிக்கு பின்னால் ராகவேந்திரன் என்ற ஒரு ஜீவன் இருப்பதே தெரியாமல் காவல்துறைக்கு மனமார நன்றி நல்கினாள் அர்ப்பணா.அதைத் தொடர்ந்து தான் சொன்னது போலவே, நிருபர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள் அவள்.

அந்த கூட்டத்தில் ஒருவனாக சரவணன் இருக்கு,நண்பன் மீது எழுந்த திடீர் பாசத்தினால் (அஹெம் அஹெம்) அங்கு ஓர் ஓரமாக அமர்ந்திருந்தான் ராகவன். அவன் பார்வை அவளை விட்டு இம்மியளவும் அகலவில்லை. சிரிக்கின்றனவா அவளது விழிகள்?என்றுத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“சொன்ன மாதிரியே நிரூபிச்சுடீங்களே ! இதை நெனச்சு எப்படி ஃபீல் பண்ணுறிங்க?” நிருபரில் ஒருவரின் குரல் ஒலித்த்து. “எப்படி ஃபீல் பண்ணுறிங்க: என்பது நிரூபர்களின் உயிர்நாடிக் கேள்வி. ஒரு படம் வெற்றி நடை போட்டாலும் அதே கேள்வி!தோல்வி அடைந்தாலும் அதே கேள்வி! புதிதான் சினிமாவின் கால் வைத்தாலும் அதே கேள்வி!காலம் காலமாய் அங்கு நிலைத்து நிற்பவரிடமும் அதே கேள்வி!இந்தகேள்வியானது நிருபர்களை காட்டிலும், நடிகர்களுக்கே மிகப்பரிட்சயம்.

உதட்டில் கேலி புன்னகை உதிர்ந்திட, “இந்த கேள்வியை நான் மக்களிடமும், அவர்களை நம்பவைத்த சமூக வலைதளத்திடமும்,உங்களிடமும்தான் கேட்கனும் !”என்றாள் அர்ப்பணா. இந்த சம்பவத்திற்கு முன்புவரை அர்ப்பணா மிக அமைதியான நடிகை. எந்த ஒரு நேர்காணலிலும் அவக் அதிகம் பேச மாட்டாள். அவளது நளினமும் புன்னகையுமே உரக்க பேசும்.

இன்றோ அவள் தன் கூட்டினை மொத்தமாய் உடைத்திருந்தாள்.

“ஒரு வேளை அந்த புகைப்படங்கள் உண்மையாகவே இருந்திருந்தால், அது எந்த ரசிகனின் வாழ்வினை பாதித்து விட்ட்து?அது யாருக்கு தீங்காகிவிட்டது? ஏன் இவ்வளவு வெறுப்பினை நான் சுமக்கவேண்டும்?”

“உங்க பேச்சில் நிறைய அதிருப்தி தெரிகிறதே!?”-நிருபரில் ஒருவர்.

“அதிருப்திதான்!பின்ன நான் ஏன் சந்தோஷப்படனும்?ஒரு பெண்ணை தப்பாக பேசி அவளை நெருப்பில் குதிக்க வெச்சு,அவ தன்னையே நிரூபிச்ச பிறகும் கூட,மீண்டும் சந்தேகிச்சு காட்டுக்கு அனுப்பி மனதளவில் அவளை கொன்னுட்டு இப்போ அவள்தான் எங்கள் தெய்வம்னுகும்பிடுற சமூகம் தானே நாம? நான் சீதை இல்லை சார், எல்லாத்தையும் பொறுத்துகிட்டு ஆசி நல்குறதுக்கு? நான் கண்ணகி! எனக்கான நீதி கிடைக்கலன்னா நான் கேட்பேன்!”

“சீதை-கண்ணகின்னு நல்ல உவமைதான் ! ஆனால் சினிமா வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்னு உங்களுக்கு தெரியாதா?இப்படி ஒரு வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தது நீங்கள் தானே?”

“ சினிமாவுக்கு மறுப்பெயர் ஒழுக்கமின்மைன்னா, அதை ஏன் இந்த சமூகம் ஆதரிக்க வேண்டும்?”

“..”

“ நான் சூதாட போகிறேன்! நான் மது அருந்த போகிறேன்! நான் ஒரு பெண்ணின் கற்பினை சூரையாட போகிறேன்! இப்படி யாரவது சத்தம் போட்டு சொல்லி இருக்காங்களா?இல்லை!காரணமதெல்லாம் இழிவான செயல்கள்! அப்படியிருக்கும்பட்சத்தில், சினிமாவை நீங்கள் ஒழுக்கமில்லாத துறையாய் பார்த்தால், இதையும் ஒதுக்கி இருக்கலாமே? ஹேய் நான் சினிமா பார்க்க போறென்னு சொன்னதும் முகம் சுளிக்கலாமே?”

“..”

“தவறுன்னு தெரிஞசு ஏன் வளர்த்து விடுறிங்க?”

“இந்த மாதிரியான  பேச்சு உங்கள் வாழ்க்கையில் பெரிய விளைவுகளை சந்திக்க வைக்கும் தெரியுமா?”

“ஓ! நன்றாகவே தெரியுமே ! நான் பத்து வரியில் பேசும் விஷயம் உங்கள் கை வண்ணத்தில் பத்து நாட்களாவது மக்களால் விமர்சிக்கப்படுமளவு பெரிதாக்கப்படும்னு தெரியுமே! அதனால்தான் இனி என் நேர்காணலை எல்லாம் “பேஸ்புக் லைவ்” மூலமாக மக்களிடம் சேர்க்க போகிறேன்!” என்று அவள் சொன்னதும் அங்கு சலசலப்பு அதிகமானது.

“நீங்க மீடியாவை தாக்குறமாதிரி இருக்கு!இதற்காக நீங்க மன்னிப்புகேட்கத்தான் வேண்டும்” என்று சிலர் குரலெழுப்பவும் அவள்கண்ணில்மின்னல் வெட்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.