(Reading time: 9 - 17 minutes)

11. வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

ஹாய் சகோ'ஸ் ... என்ன இது ரொம்ப நாள் கழித்து வந்ததுமட்டும் இல்லாமல் காபி பத்தி கதாகாலேட்சேபம்ன்னு நினைப்பது புரியுது ... ஒரு ஹாப்பி நியூஸ் எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்காங்க ... நம்ம தோழிகள் பலர் லாஸ்ட் 2 வீக்ஸ் டெலிவரி முன்னாடி இருந்த குழப்பத்தில் இருந்து இன்னைவரை கூட இருக்கீங்க .. எனக்காக பிராத்தனை பண்ணீங்க உங்க எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ...சரி காபி கதைக்கு வந்துட்டேன் .... ரெண்டு குட்டிஸ் தூங்கவிடாம தொந்தரவு பண்ணதுல நம்ம கூட எப்பவும் இருக்கும் உற்ற துணை காப்பிதாங்க அதுனால இந்த எபி காப்பிகே டெடிகேட் பண்ணிட்டேன் ... லாஸ்ட் 3 months எல்லா அப்டேட் படிச்சாலும் கமெண்ட் பண்ண முடியல இனிமே கரெக்டா ஆஜர் ஆகா ட்ரை பண்ணறேன் ...

என் மனமார்ந்த நன்றிகள் chillzee டீமுக்கு எனக்கு வாய்ப்பளித்தது மட்டும் அல்லாது ..டிலே ஆனாலும் சூழ்நிலை உணர்ந்து டேக் யுவர் தடவை னு சொன்னதுக்கு

வீணை இசை மனதை மயக்க கூடியது ரஞ்சிக்கு அதன் மீது ஒரு மயக்கம் எப்போதும் உண்டு ....அந்த இசை பூபாளமாய் ஒலிக்க கண்விழித்தாள் ..

கைகளை பரபரவென தேய்த்து அதில் கணபதித்து நிமிர்ந்தவள் கண்ணில் தெரிந்தான் அந்த கோகுல கண்ணன் காதல் பார்வையை தான் ராதை நோக்கி செலுத்தியவாறு ..

அவன் அருகில் ஆளுயர புகைப்படம் அதில் சிரித்தவாறு விக்ரம் கண்ணனை ஏந்தியிருக்க அருகில் நிறைவான புன்னகையுடன் ரஞ்சி ...

அதை பார்த்தவுடன் மனதில் ஒரு பெரும் நிம்மதி , நிறைவு .. நினைவுகள் பின்னோக்கி செல்ல உடன் பயணிக்க அனுமதிக்காத நிகழ்காலம் அவளை அழைத்தது ..மெல்ல எழுந்து தன் மேல்இருந்த விக்ரமின் கைகளை அவன் தூக்கம் கலையாமல் அகற்றியவள் தன் காலை கடன்களை முடித்துவிட்டு மாடியில் இருந்து இறங்கும்போதே கம கம என காபி மனம் அவளைவரவேற்றது ...

இங்கே வேலைசெய்யும் மாமி கும்பகோணம் பக்கம் இருந்து வந்தவர் .. எனவே தினமும் தன் கையால் தேவையான அளவு காபிக்கொட்டை சிறிது நெய்விட்டு வறுத்து அதை சிறிதுநேரம்ஆறவைத்து பின் அதை அரைத்து அதில் டிக்காஷன் எடுத்து அதனுடன் சுண்டக்காய்ச்சிய பால் கலந்து காபி போடுவார் ... ரஞ்சி வரும்வரை அங்கு எல்லோருக்கும் இன்ஸ்டன்ட் காப்பிதான்... ஒருநாள் மாமியின் கையில் காபி குடித்துவிட்டு அதை மற்றவர்களுக்கும் கொடுக்க ... இப்போது காலையும் மாலையும் மாமியின் ஸ்பெஷல் பில்டர் காபி ..அது அரைசக்கரையுடன் சிறுகசப்புடனும் நினைக்கவே சுகமாக இருக்கும் ...குடித்தபின் நாவில் நிற்கும் சிறுகசப்பு ஓர் தனி சிறப்பு

அது அப்படித்தான்...பக்கத்திலிருப்பவர் காபி குடித்தால் நமக்கும் குடிக்க வேண்டும் என்று தோன்றும்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

மாமியுடன் சிறிதுநேரம் பேசினால் எதை பத்தி வேண்டுமானாலும் தகவல் கிடைக்கும் ...மாமி ஒரு அமுதசுரபி .. அமிஞ்சிக்கரைமுதல் அமெரிக்கா வரை அனைத்தும் அத்துப்படி .. உள்ளூர்நடப்பு முதல் உலக அரசியல் வரை அனைத்தும் அத்துப்படி ... அவளுடன் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் உபயோகமானது ...

காபி பற்றி ரஞ்சிப்பேசும்போதும் அவள் கொடுத்தவிளக்கம் அற்புதம் ..

காபி பொடியைப் பொறுத்தவரை கம்பெனி தயாரிப்புகளைவிடவும் தேவையான அளவுகளில் சிக்கரி கலந்து அரைத்துக்கொடுக்கும் உள்ளூர்க் கடைகளுக்கே முன்னுரிமை. சுருக்கமாகச்சொன்னால், தஞ்சைப் பகுதியே ஆனந்தக் கசப்புக்கு அடிமையான பிரதேசம். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும்கூட காபிக்கென்று புகழ்பெற்ற உணவகங்கள் இருக்கின்றன. இருந்தாலும்தஞ்சாவூருக்கும் காபிக்கும்தான் அதிக நெருக்கம். மாவட்டம் முழுவதற்குமான காபி பெருமையைத் தற்போது கும்பகோணமே தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்டது. கோயில் நகரம்,அங்கு கூடுகின்ற சுற்றுலாப் பயணிகள் என்ற காரணங்களையெல்லாம் தாண்டி கும்பகோணத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது பஞ்சாபிகேச அய்யர் நடத்திய லெட்சுமி விலாஸ் என்றகாபிக் கடையால்தான். காபிக்குத் தேவைப்படும் பாலுக்காக அவர் பதினைந்து பசு மாடுகளைப் பராமரித்து வந்தார். அதனால் அந்தக் கடைக்குப் பசும்பால் காபிக்கடை என்ற பெயரும்கூடஉண்டு.

முதலில் ஃபில்டர்...

ரொம்பப் பெரிய துளைகள் இல்லாமல் சிறிய துளைகள் உள்ள ஃபில்டர் தேவை.

ஈரமில்லாமல் காய்ந்து இருக்க வேண்டும். துளைகள் அடைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

நல்ல காஃபிப் பொடி - பழையதாக இல்லாமல் புதிதாய் - ஸ்பெஷல் கிரேடும், முதல் தரமும் கலந்து அரைத்ததாக இருக்கலாம். கொஞ்சம் சிக்கரி இருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம்தான்.இல்லாமல் இருந்தால் காஃபியில் கனம் இருக்காது. நிறைய இருந்தால் காஃபியில் சுவை இருக்காது. (கட்டுப் படியும் ஆகாது!) அரைக் கிலோவுக்கு இருபத்தைந்து கிராம் அல்லது ஐம்பதுகிராம் சிக்கரி சேர்க்கலாம்.

அந்த காஃபிப் பொடியை ஃபில்டரில் போடுமுன்பு அரை ஸ்பூன் சர்க்கரையை தூவிக் கொண்டு, ஃபில்டரில் முக்கால் பாகம் வருமளவு பொடியை ஸ்பூனால் சரித்த வகையில் போடவேண்டும். ஸ்பூனால் லேசாக அதை அமுக்கி விட வேண்டும். லேசாகத்தான். பிறகு மேலேயும் லேசாக சர்க்கரை தூவ வேண்டும்.

தண்ணீரைக் நன்றாகக் கொதிக்க வைத்து, கொதிக்கும் போது ஃபில்டரில் தண்ணீரை விட வேண்டும். மூடியோ, டபராவோ போட்டெல்லாம் தட்டக் கூடாது. தானாய் இறங்க வேண்டும்.

முதல் நாலு சொட்டு டிகாக்ஷன் இருக்கே, அதான் விசேஷம்,

கவர்ப் பாலில் கலக்கக் கூடாது...அப்போது கறந்த பாலில் கலக்கணும்.

பாலில் தண்ணீரே விடாமல் காய்ச்ச வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் காய்ச்சினால் காஃபி நல்லா வரும்.

சூடு குறையுமுன் ஒரு டம்ளரில் ஆடை இல்லாத பாலை விட்டு டிகாக்க்ஷனை (முதல் நாலைந்து சொட்டு மட்டும் விட்டால் ரொம்ப விசேஷம்!) மெல்ல கலக்க வேண்டும். அதிகமாகவும் விட்டுகறுப்பாகக் கலக்கக் கூடாது. குறைவாய் விட்டு வெள்ளையாகவும் இருக்கக் கூடாது. அழகிய காபிக் கலரில் இருக்க வேண்டும்! இந்தக் கலவை ஒரு டெக்னிக்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.