(Reading time: 9 - 17 minutes)

ர்க்கரை பெயருக்குத்தான் போட வேண்டும். நிறையப் போட்டால் அதன் பெயர் காஃபி இல்லை..பாயசம்! குடிக்கும் போது சர்க்கரை போட்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்கும் அளவுமட்டும் போட வேண்டும்.

அதை எடுத்து ஒன்று அல்லது இரண்டு ஆற்று மட்டும் டபராவில் ஆற்றி நுரையுடன் குடிக்க ஆரம்பிக்க வேண்டும்.

காபி போட்ட உடன் குடிக்க வேண்டும். ஃபிளாஸ்க்கில் வைத்தோ, சொம்பில் ஊற்றியோ (அலுவலகங்களில் சில சமயம் அபபடி வாங்கி வருவார்கள்.கொண்டு வந்து குடித்தால் தரம்கம்மிதான்... ஃபிளாஸ்கின் 'வாசனை' வேறு சேர்ந்து கொண்டு நல்ல காஃபியின் மணம், சுவையைக் கெடுத்து விடும்.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு முறை இருக்கிறது. பொங்குவதற்கு இப்பவோ அப்பவோ என்று தயார் ஆகிற சமயத்தில், ஒரு ஸ்பூனால்

பொங்குகிற பாலில் படியத் துவங்குகிற ஆடையை லேசாகக் கலைத்து விட வேண்டும். இன்னும் கொஞ்சம் கூட கொதிக்கும் பாலுக்கு கொஞ்சம் கூடிய சுவை உண்டு.

இப்பொழுது காபியை கலக்குகிற கட்டம். இரண்டு பேருக்கு என்றால்

முக்கால் டம்ளர் பால் எடுத்துக் கொண்டு இறக்கிய முதல் டிகாஷனில் ஒன்றேகால் டம்ளர் எடுத்துக் கொண்டு தனியே இரண்டு சமாச்சாரங்களையும் (பால்+டிகாஷன்)கலந்து நுரை பொங்கஆற்ற வேண்டும். கால் டம்ளருக்கு நுரை வருமே-- அதுவே அலாதி டேஸ்ட்டில்லாத டேஸ்ட்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

பின் தான் சர்க்கரையின் உபயோகம்.

யாருக்காவது சர்க்கரை வேண்டாமென் றால், இந்த கட்டத்தில் சர்க்கரையை தவிர்த்து விடலாம் என்பதாலேயே கட்ட கடைசியில் சர்க்கரை உபயோகம். ஒரு முழு டேபிள் ஸ்பூன்சர்க்கரையைப் போட்டு ஆற்றக் கூடாது; ஸ்பூனால் கலக்க வேண்டும்.

எல்லாம் சரி. டீக்குத் தான் கப்-அன் சாஸர். காப்பிக்கு பெஸ்ட் டபரா-டம்ளர் தான். கொஞ்சமே கொஞ்சம் அந்த டபராவில் ஊற்றி லேசாக ஒரு சுற்று சுற்றி அருந்தினால்.. சுவையோ சுவை!

அமெரிக்கர்கள் காபி பிரியர்கள்.. கிட்டத்தட்ட பதினைந்துக்கு மேற்பட்ட நாட்டு காப்பிக் கொட்டைகள் ரகரகமாய் லேபிளிட்டு கிடைக்கிறது. அங்கேயே நாமே மெஷினில் வருத்தெடுத்துபில் போட்டுக் கொள்ளலாம்.

மாமியுடன் பேசி முடியும்போது காபியை பற்றி அபார அறிவு கிடைத்ததாய் தோன்றும்..

புன்னகையுடன் மாமிகொடுத்த காபி வாங்கியவள் மெல்ல தோட்டத்தின் பக்கம் சென்றாள் .... இது இவளுக்கான நேரம் ...தோட்டத்தின் அழகு மனதை கொள்ளைகொள்ளும் ... பலவண்ணரோஜாக்கள் பார்த்து சிரிக்க ... மல்லிகையின் மனம் நுரையீரல் நிரப்ப .. இயற்க்கை கொடுத்த வரமாய் சுற்றியும் மலைகள் நடுவே இளவரசியாய் இந்த வீடும் மன்னிக்கவும் மாளிகையும்அதன் பின்னே பறந்து விரிந்த இந்த தோட்டமும் ... மனதை மயக்கும் ... ரஞ்சிக்கு வீட்டைவிட தோட்டமே மிகவும் பிடிக்கும் ... மாமியும் அவளும் சேர்ந்து பலவகையான காய்கறிகள் மற்றும்பூக்கள் பயிரிட ... அழகுக்கு மேலும் அழகுசேர்த்து பார்ப்பவர்களை கவர்ந்திழுத்தது ...

கண்முன் விரிந்த காட்சியில் லயித்திருந்தவளை ... இரு வலிய கரங்கள் அணைக்க ... காலடி ஓசையிலேயே அவன் வரவை உணர்ந்தவள் வாகாய் அவன்மேல் சாய்ந்து கொண்டாள் ..

என்ன மேடம் காலையிலேயே உங்க பிரிஎண்ட்ஸ்கூட பேச ஆரம்பிச்சாச்சா ??????? .... அங்கே கண்ணன் உன்னை தேடுறான் ...

அச்சோ ... காபி பத்தி நினைத்து கண்ணன் எழும்போது பக்கத்தில் இல்லாமல் போனேனே என எண்ணியவாறு ... சரி நீங்க ஜாகிங் முடிங்க நான் கண்ணனை கவனித்து விட்டு வரேன்என்று வேகமாக கடந்து சென்றவேளை பார்த்து சிரித்துக்கொண்டே ஜாகிங் செய்ய ஆரம்பித்தான் விக்ரம் ...

அங்கே கண்ணனோ போனை கையில் வைத்துக்கொண்டு " நீ என்ன சொன்னாலும் நான் கேட்கமாட்டேன் ... கண்டீப்பா சமாதானம் ஆகமாட்டேன் ... நீ எனக்கு பிரெண்டா இல்லைஅவங்களுக்கா .. முடியவே முடியாது என பேசிக்கொண்டிருக்க .. அருகில் வந்த ரஞ்சி போனை வாங்கி ... காலைலயே ஆரம்பிச்டீங்களா பொய் வேலையைப்பாரு ...என போனை கட்பண்ண .. கோவமாக கண்ணன் வேறுபக்கம் திருப்பினான் ....

ஒருவழியாக அவனை சமாதானம் செய்து குளிக்க வைத்து ரெடி செய்து கூட்டிவர ... அப்போதுதான் உள்ளே வந்த விகாரமனை பார்த்து அப்பா என கட்டிக்கொள்ள ... அவன்வியர்வைஇப்போது இவன் மீதும் ... ரஞ்சி முறைத்த முறைப்பில் .. பார்வையாலேயே கிண்டலையும் மன்னிப்பையும் வேண்டியவனாக கண்ணனையும் அழைத்துக்கொண்டு குளிக்கச்செல்ல ..

அதற்குமேலும் கோவத்தை இழுத்துவைக்க முடியாமல் பூஜையறை நோக்கி சென்றாள் ...

இன்னும் சிறிது நேரத்தில் அனைவரும் பூஜை அறையில் ஆஜர் ஆகிவிடுவார்கள் என நினைத்துக்கொண்டே தன் உள்ளம் கொள்ளை கொண்ட மாய கண்ணனுக்கு மலர் அலங்காரம் தொடங்கினாள் .....

தொடரும்

Episode # 10

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:997}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.