(Reading time: 11 - 22 minutes)

40. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

னக்கண்ணில் வந்து நின்ற அவனது முகத்தில் தனது பார்வையினையும், எண்ணத்தினையும் தொலைத்திருந்தவள், சற்று நேரம் அசையவே இல்லை…

“சதி… இங்கே என்ன செய்கிறாய்?... நேரமாகிறது… சீக்கிரம் வா… இன்று நாம் வெளியே செல்லலாம்…”

சதியின் சகோதரி அவளை அழைத்திட, அவள் தான் இருந்த மோன நிலையிலிருந்து சட்டென விடுபட்டாள்…

அப்பொழுது தான் தன் மனதின் எண்ணம் அவளுக்கு புரியவர, திகைத்துப் போனாள் அவள் ஒருகணம்…

“பரந்தாமா… இது என்ன சோதனை?... எனக்கு என்ன நேர்ந்தது?... நானா இப்படி ஒரு காரியத்தை செய்தேன்?...”

தனக்குள் அவள் உழன்று கொண்டிருக்க, சதியின் சகோதரி அவளருகில் வந்து அவளது தோளில் கைவைக்க, பட்டென்று விலகி நின்றாள் சதி…

“சதி… என்னாயிற்று?....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - காதல் கலந்த குடும்ப தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

பதட்டத்துடன் தங்கையிடம் அவள் விசாரிக்க,

சதியோ, “ஒன்றுமில்லை அக்கா… ஏதோ கனவு கண்டேன்… அதன் தாக்கம் தான்….” என கூற,

“சரி அதனை விடு… நீயும் வருகிறாய் அல்லவா?...”

“எங்கே அக்கா?...”

“சரியாய் போயிற்று… இவ்வளவு நேரம் அதைத்தானே நானும் உன்னிடத்தில் கூறிக்கொண்டிருந்தேன் அதுவும் வந்ததிலிருந்து….”

“மன்னித்துவிடுங்கள் அக்கா… தாங்கள் பேசிய எதனையும் நான் கவனிக்கவில்லை…”

“சரி போகட்டும் விடு… உனக்கு இன்னமும் அந்த கனவின் தாக்கம் தெளியவில்லை போலும்…”

“ம்ம்ம்….”

“ஏதேனும் கெட்ட கனவா சதி?.. எதனையும் பார்த்து பயந்து விட்டாயா?...”

சதியின் தமக்கை அக்கறையாய் வினவ,

“இல்லை அக்கா… அது கெட்ட கனவு இல்லை….”

“எனில் ஏன் உன் முகம் சரியில்லை?...”

“தெரியவில்லை அக்கா… சரி எங்கே செல்லவிருக்கிறீர்கள் அனைவரும்?...”

“நம் பிரம்மாபுரத்திற்கு வடக்கே இருக்கும் விஷ்ணு கோவிலுக்குத்தான் நம் சகோதரிகள் அனைவரும் செல்லவிருக்கிறோம்….. நீயும் வருகிறாய் தானே எங்களுடன்?...”

“நிச்சயமாய் அக்கா….” என்றவள், தமக்கையை அனுப்பிவிட்டு, சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தாள்… பின், கிளம்பினாள் அவளும் வேகமாக…

ங்கி உயர்ந்த மலைகள், அதனூடே பச்சை பசேல் என்ற செடி, கொடி, மரங்கள் மற்றும் புல்வெளிகள்… இதுதான் கண்ணைக் கவர்கிறது என்றால், நதியின் நீர்ப்பிரவாகமோ அங்கே வருபவர்களை வரவேற்று தன் பக்கம் ஈர்த்து விடுகிறது தன் இசையாலும், வனப்பாலும்…

இறைவனின் படைப்பில் யாவுமே அழகுதான்… அதிலும் இயற்கை சொல்லிடவே முடியாத, ஒப்பிடவே முடியாத தனி அழகு கொண்டது… எனில் அந்த இயற்கையினை ஒரு சில வார்த்தைகளில் வர்ணித்திடவும் முடியுமோ???...

அந்த இயற்கையை அழகோவியமாய் இருந்த சதி ரசித்துக்கொண்டே வர, அவளது சகோதரிகளோ ஒருவருக்கொருவர் உரையாடிய வண்ணம் இருந்தனர்…

ஸ்ரீ விஷ்ணுவின் ஆலயம் அந்த எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்திருக்க, உள்ளம் உருக, சதியும் வேண்டிக்கொள்ள, சற்று நேரம் அங்கே சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்…

நதியில் தன் கரங்களை இணைத்து சதி விளையாட எண்ணி, அதனருகில் செல்ல, சதியின் சகோதரிகளோ சுற்றியிருந்த மரங்களில் தங்களின் கவனத்தை பதித்தனர்…

இதழ்களில் புன்னகையோடு நதியின் அருகே வந்தவள், சற்று மேடாக இருந்த புல்வெளியில் அமர்ந்து, நதியினில் தன் கரங்களை இணைத்தாள்….

நதியின் குளிர்ச்சி, அவள் கரங்களை ஸ்பரிசிக்க, அவள் முகமோ அதனை பிரதிபலித்தது அழகாய்…

அவள் அதனூடே ஒரு குழந்தை போல விளையாட ஆரம்பிக்க, நதியின் அக்கரைக்கு செல்ல வேண்டும் போல இருந்தது அவளுக்கு…

சலசலத்து ஓடிக்கொண்டிருந்த நதியில் கால் பதித்திடவும் அவளுக்கு ஆசை பெருகிட, தன் ஆடையை மெல்ல விரல் நுனியில் பிடித்துக்கொண்டு நதியில் தன் பாதங்களை பதிக்க, நீரானது அவளது பாதங்களில் வந்து தவழ, மரத்திலிருந்து உதிர்ந்த பல வண்ண பூக்களும் அவளது பாதங்களோடு துணைக்கு வந்தது மறுகரையினை அடைந்திட…..

பார்த்து நிதானமாக அக்கரையை அடைந்தவள், நதியினை திரும்பி பார்த்திட, அது அவளைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது…

பதிலுக்கு அவளும் புன்னகைத்துவிட்டு, அவ்விடம் கால் பதித்து நடக்க, அங்கே நிறைய வண்ணத்துபூச்சிகள் கூட்டமே இருந்தது…

அவள் அங்கு வந்ததும், விருந்தாளி வந்திருப்பதாக கருதி, அவளை சுற்றி வட்டமிட்டபடி அவைகள் அங்கும் இங்கும் தன் சிறகை விரித்து பறக்க, அவற்றை ரசித்தபடியே அவள் தன் பயணத்தை தொடர, அவளது ஆடைகளில் வந்தமர்ந்தது ஓர் வண்ணத்து பூச்சி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.