(Reading time: 11 - 22 minutes)

ண்ணத்துப்பூச்சியே… நீயும் என்னுடன் வரப்போகிறாயா?... சரி வா… நாம் சென்று அங்கிருக்கும் பூக்களைப் பார்த்து மகிழலாம்…”

அதனுடன் உரையாடியபடியே, அவள் நடக்க ஆரம்பிக்க, அப்போது அவளது செவியினில் கேட்டது ஓர் இசை…

“தீம்தனனா………………………”

இசையின் ஸ்வரங்கள் அனைத்தும் ஒருங்கே கேட்பது போல் இருக்க, அந்த இசையின் இனிமையில் அவள் தன்னை மறந்தாள்…

குரலில் இனிமையா? வாசிக்கும் வாத்தியத்தில் இனிமையா?... இனம் பிரித்து சொல்லிட முடியாத உணர்வு அவளுக்குள் பிறந்தது…

யார் பாடுகிறார்கள் என்ற ஆர்வமும் அவளுக்குள் எழ, அந்த திசையை நோக்கி அவள் பயணம் தொடர்ந்தது வேகமாய்…

அவளுடனே பறந்து வந்த சில வண்ணத்துப்பூச்சிகள் அவளுக்கு முன்னமே அங்கு சென்றுவிட்டது அந்த தேனிசையினால் கவரப்பட்டு…

அவளும் முன்னேறி செல்ல, செல்ல, அவளால் சரியால் நடக்க முடியவில்லை… கால்கள் ஒன்றோடொன்று பின்ன, அவளது நடை தடைப்பட்டது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

தன் மனதையும் எண்ணத்தையும், அந்த குரலும் இசையும் வசியம் செய்வது போல் இருக்க, அவள் தன்னிலை மறக்க ஆரம்பித்திருந்தாள் முழுவதுமாய்…

அவ்விடத்தை அடையும் முன்னமே, சித்தம் முழுவதும் தன் வசம் இல்லாது இருக்க, தள்ளாடினாலும், அவள் கால்கள் நிற்கவில்லை ஓரிடத்தில் நிலைத்து….

குரல் கேட்ட திசையை அடைந்தவள், அங்கே மயங்கி தரையில் படுத்திருந்த ஜீவராசிகளையும், தன்னுடன் வந்து கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சி, தன் வண்ணச்சிறகை புல்லில் விரித்து படுத்திருந்தததையும் காண நேர,

சொருகிக்கொண்டிருந்த விழிகளை சுருக்கி விரித்து எதிரே பார்க்க, அங்கே அந்த புல்வெளியில் ஓர் அழகான நர்த்தனம் நிகழ்ந்து கொண்டிருந்தது….

அதிகாலையில் கண்ட கனவு நினைவு வர, அதனுடன் அதில் நடனம் நிகழ்த்திய உருவமும் கண் முன்னே நிழலாட, எதிரே தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் பரதத்துடன் அதனை ஒப்பிட்டு பார்த்தது அவள் மனது…

இரண்டும் ஒன்றே என அவள் மனம் எண்ணிய வேளை, முகம் மறைத்து அவள் விழிகளில் சிக்காமல் போன அந்த முகம் தற்போது தன் கண் முன்னேயே தெரிய வர,

சட்டென சுவாசம் தடைப்பட்டு போனவளாய் அவள் நின்றிட, தன்னையேப் பார்த்துக்கொண்டிருந்த சதியினை இதழோரம் உதித்த ஒரு புன்னகையுடன் மகாசிவருத்ரதேவ் காண,

அவளது இதயம் எகிறியது… அதன் துடிப்பும் அதிகமாகிக்கொண்டே போனது வேகமாய்…

யாரைப் பார்த்திடக்கூடாது என்று எண்ணினாளோ, அவன் தன் கண் முன்னே நிற்க, அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை…

அவளைப் பார்த்திட்ட போதும், தனது நடனத்தை அவன் நிறுத்தாது தொடர, அவனின் நடனம் அவளை சிலிர்க்க வைத்தது…

தென்றல் வந்து அவன் கரங்களை உரசிவிட்டு, அவளருகில் செல்ல, அவள் நிலை கொள்ளாது தவித்தாள்…

அவனது குரல் ஒருபுறம் அவளை, அவன் பக்கம் ஈர்ப்பதாய் அவள் உணர, அவனது நடனமோ அவளது விழிப்பார்வைக்குள் புதைந்து போனது கருவிழியாய்…

தேகம் சிலிர்க்க, மனம் பதைபதைக்க, அவள் அவனையேக் காண, அவள் கால்கள் வலுவிழக்க ஆரம்பித்தது….

எனினும் சிலையாக அவள் நின்று அவனையேப் பார்த்திட, அவனும் தன் நடனத்தை முடித்துக்கொள்ள சித்தமான வேளை,

ஒற்றைக்காலை சற்றே தூக்கி, ஒற்றைக்காலை நிலத்தில் ஊன்றி, கைகளை அங்கும் இங்கும் அசைத்து இறுதியில் காற்றுக்கும் வணக்கம் அவன் தெரிவித்து தன் நர்த்தனத்தை அவன் நிறுத்த,

வலுவிழந்த கால்களும், மயங்கிய சிந்தையுடனும் இருந்த சதி, சட்டென்று தரையில் சரிந்தாள் மெல்ல….

அவள் நிலத்தில் வீழ்ந்திருக்க, அவளருகே ஓடி வந்தான் அவன்…

அந்த நேரம் பார்த்து சதியினைக் காணாது தேடி வந்த அவளது சகோதரிகள், சதி நிலத்தில் கிடப்பதையும், அருகே மகாதேவ் நிற்பதையும் கண்டு வேகமாய் வர,

அவன் அவர்கள் வருவதைக் கண்டு அமைதியாக நின்றான்…

அவளுக்கு உதவ முன்வந்தவனை, “மன்னியுங்கள்… தமது உதவி எங்களுக்கு தேவை இல்லை… எங்கள் சகோதரியை நாங்கள் பார்த்துக்கொள்வோம்… தாங்கள் தயவுசெய்து எந்த உதவியும் செய்ய வேண்டாம்…” என்று தடுத்தாள் சதியின் மூத்த தமக்கை…

“தட்சனின் புதல்விகள் தானே தாம் அனைவரும்???…”

அவன் கேள்வியாய் கேட்க, அவர்களும் ஆம் என்றனர்…

“சரி நான் எவ்வித உதவியும் தங்களின் சகோதரிக்கு செய்யவில்லை…”

“நன்றி…” என்றவள், சதியை தன் உடன் பிறந்தவர்களின் துணையோடு தூக்கிச் செல்ல, சிறு புன்னகையுடன் அவர்கள் செல்வதையேப் பார்த்திருந்தான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.