(Reading time: 11 - 22 minutes)

ரண்மனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் செய்தும், சதி மயக்கம் தெளிந்திருக்கவில்லை…

பிரஜாபதியோ விவரம் அறிந்து சதியின் அறைக்குள் புயலென நுழைய,

“சதி… மகளே… என்னாயிற்று உனக்கு?... என்னைப் பார்… இங்கே பார்…”

மகளின் கன்னம் தொட்டு அவர் எழுப்ப, அவள் எழுந்து கொள்ளவில்லை கொஞ்சமும்…

“ராஜ குரு காசியப்பர் எங்கே?... உடனேயே அவரை அழைத்து வாருங்கள் இங்கே….”

பணியாட்களிடம் அவர் உத்தரவிட, அவர்கள் விரைந்து சென்று காசியப்பரை அழைத்து வந்தனர்…

“சதிக்கு என்ன நேர்ந்தது பிரஜாபதி?...”

“தெரியவில்லை ராஜகுரு காசியப்பரே… நீண்ட நேரமாகவே இந்த மயக்கத்தில் ஆட்பட்டிருக்கிறாள்…”

“அரண்மனை வைத்தியருக்கு தகவல் கூறியிருக்கிறேன்… இப்பொழுது வந்துவிடுவார்… கவலை வேண்டாம்…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

காசியப்பர் பொறுமையாக கூற, ஏனோ பிரஜாபதியிடம் அந்த பொறுமை இல்லை…

கோபமாக தனது மகள்களிடம் திரும்பியவர்,

“உங்களுடன் தானே அவள் வந்தாள்… என்ன காரணத்தினால் அவள் இந்நிலைக்குச் சென்றாள்?... கூறுங்கள்…” என கேட்க, அவர்கள் அனைவரும் நடுங்கினர்…

அவர்களின் நடுக்கம், அவருக்கு யோசனையை கொடுக்க,

“சொல் மகளே… நடந்ததை மறைக்காமல் என்னிடத்தில் கூறு…”

மூத்த புதல்வியை பார்த்து அவர் கேட்க, அவள் தயங்கி தயங்கி ஒருவாறு விவரத்தைக் கூற, பிரஜாபதியின் கோபம் எல்லையை கடந்தது…

“அந்த மகாதேவனுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால், என் மகளை நெருங்க முயற்சி செய்வான்?....”

“அவர் மீது எந்த தவறும் இல்லை... நல்லெண்ணத்துடன் உதவி செய்ய வந்தவரை தவறாக நிந்திக்காதீர்கள் பிரஜாபதி…”

அப்பொழுது தான் அங்கு வந்த மகரிஷி பிருகு, சதியின் நிலையைப் பார்த்தவண்ணம் கூற,

“அவன் ஒரு கபடவேடதாரி மகரிஷி பிருகு…” என்றார் பிரஜாபதி ஆத்திரத்துடன்…

“இல்லை பிரஜாபதி தாம் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்…”

“இல்லை மகரிஷி பிருகு… நான் சரியாகத்தான் அவனை கணித்து வைத்திருக்கின்றேன்… அவன் ஏதோ சூழ்ச்சி செய்து, என் மகளை இந்நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றான்….”

பிரஜாபதி தன் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்க, அந்நேரம் ராஜவைத்தியர் அங்கே வருகை தந்தார்…

சதியை பரிசோதித்த அவர், “பிரஜாபதி தட்சரே… இளவரசியின் மயக்கத்தினை தெளியவைக்கும் மருந்து என்னிடம் இல்லை…” என்றார் வருத்தத்துடன்…

“என்ன கூறுகிறீர்கள் ராஜ வைத்தியரே…”

பிரஜாபதி அதிர்ச்சியுடன் வினவ,

“நான் கூறுவது சத்தியம் பிரஜாபதி… இளவரசியை என்னால் மட்டுமல்ல… எந்த வைத்தியராலும் தெளியவைக்க இயலாது….”

என மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் அவர்…

“காசியப்பரே… என்ன கூறுகிறார் இவர்?... இந்த அரண்மனையின் ராஜ வைத்தியரின் வாயிலிருந்து வரும் சொற்களா இவை?...”

பிரஜாபதி தனது கோபத்தையும் ஆத்திரத்தினையும் அடக்கியபடி கேட்க,

“பொறுமையாக இருங்கள் பிரஜாபதி… நான் அவரிடம் வினவுகிறேன்…” என்றார் குரு காசியப்பர்…

“இதில் வினவ, என்ன இருக்கிறது?... உதவ முன்வந்தவரை தடுத்து நிறுத்தி இவ்விடம் அழைத்து வந்தீர்கள்… இப்போது அவரைத்தவிர வேறு ஒருவர் இல்லை உதவுவதற்கு… இதுவே இறைவனின் ஆணையும் கூட…. இதை வைத்தியர் புரிந்து கொண்டார்… தாங்கள் இருவரும் தான் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள்….”

மகரிஷி பிருகு, அமைதியாக தெளிவாக எடுத்துரைக்க, காசியப்பரோ கோபப்பட்டார்…

“தாங்கள் கோபப்படுவதால் உண்மை பொய்யாகிட முடியாது குரு காசியப்பரே… மகாதேவ் ஒருவரால் தான் சதியினை இந்த மயக்கத்திலிருந்து தெளிய வைக்க முடியும்….”

பிருகு ஆணித்தரமாக கூற,

பிரஜாபதியோ வைத்தியரைப் பார்த்தார்…

“மன்னிக்க வேண்டும் பிரஜாபதி… இளவரசியின் ஆழ்ந்த மயக்கம், தன்னிலை அவர் இழந்ததால் நேர்ந்திருக்க வேண்டும்… நெடுநேரம் ஓரிடத்தில் தனது கவனத்தினை அவர் செலுத்தியதால், தனது முழு கட்டுப்பாட்டினையும் அவர் இழந்திருக்கிறார்… அதற்கும் மேலே, அவர் தன் சுயத்தை இழந்து அதில் மூழ்கியிருக்கிறார்… எனவே, அவரை இதிலிருந்து தெளியவைப்பதற்கு அவர் தன்னிலை இழந்த காரணமே மருந்து… அது ஒன்றன் மூலமே அவரை மீண்டும் சுயநினைவுக்கு அழைத்து வர முடியும்… சம்பவம் நடந்த இடத்தில் இளவரசியும், மகாதேவரும் மட்டுமே இருந்திட்ட காரணத்தினால், நடந்த நிகழ்வினை அவரைத் தவிர வேறு யாரும் கூறிட இயலாது… மேலும், அவர் இளவரசிக்கு உதவ முன்வந்த தருணத்தில், தமது புதல்விகள், இளவரசியை இங்கே அழைத்து வந்திருக்கின்றனர்… ஆதலால், அவர் வந்தால் மட்டுமே தமது மகள் கண்விழிப்பது சாத்தியம்….”

வைத்தியர் தெளிவாக கூற, “இல்லை…………………………..” என கத்தினார் பிரஜாபதி…

அவரின் குரல் கேட்டு, அனைவரும் நடுங்க,

“அவன் இங்கே வர நான் ஒருநாளும் அனுமதியேன்… என் மகளை கண் விழிக்க வைக்க எனக்கு தெரியும்… தங்களால் முடியவில்லை எனில் சென்றுவிடுங்கள்…”

அவர் ஆத்திரத்துடன் கத்த, வைத்தியர் அங்கிருந்து அகன்றார்…

“சுவாமி… நமக்கு நம் மகள் வேண்டும்… வீண் பிடிவாதம் பிடிக்காமல், அந்த மகாதேவரை வரவழையுங்கள்… தயவுசெய்து… நான் தங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்…”

பிரசுதி கையெடுத்து வணங்கி கேட்க, பிரஜாபதி அவரை முறைத்தார்…

“தங்களின் பிடிவாதம் நம் மகளை பழிவாங்கிட அனுமதிக்காதீர்கள் சுவாமி….”

பிரசுதி கெஞ்ச, பிரஜாபதி கோபமாக அங்கிருந்து வெளியேறினார் வேகமாக…

“சுவாமி….. சுவாமி… நில்லுங்கள்….”

பின்னாடியே பிரசுதியும் செல்ல, அவர் நிற்கவே இல்லை கொஞ்சமும்…

திரும்பி மகளிடம் வந்தவர்,

“சதி… மகளே… என்னைப் பாரம்மா…” என கெஞ்ச, அவளிடம் யாதொரு அசைவும் இல்லை…

“கவலை வேண்டாம்… இறைவன் துணை இருக்கும்வரை பயம் கொள்ளாதீர்கள்… மகாதேவர் நிச்சயம் இங்கே வருவார்… நம் சதி கண் விழிப்பது உறுதி… கவலை கொள்ளாதீர்கள்…”

மகரிஷி பிருகு பிரசுதிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூற, குரு காசியப்பர் அங்கிருந்து வெளியேறினார் உடனேயே…

Episode 39

Episode 41

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.