(Reading time: 10 - 20 minutes)

39. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ளவரசி… நேரமாயிற்று… நாம் செல்லலாமா?...”

சதியிடம் பணிப்பெண்களில் ஒருத்தி கேட்க, சதி எதுவுமே சொல்லாது சிற்பிகள் செல்லும் திசையினையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்…

“தேவி… என்னாயிற்று… தாம் ஏன் அவர்களையேப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?...”

“இல்லை… மாலதி.... அவர்கள் இந்நாட்டை விட்டு ஏன் வெளியேறி செல்லுகிறார்கள்?...”

“அது…..”

“என்ன தயங்குகிறாய்?.... எனில் உனக்குத் தெரியுமா?....”

“ஆம்…”

சதியின் பார்வை கூர்மையாக அந்த பணிப்பெண்ணின் மீது பதிந்தது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“உண்மையை எதற்காக என்னிடத்தில் மறைக்கப் பார்க்கிறாய்?....”

“…………………….”

“நீ இப்பொழுதே நடந்த உண்மையை என்னிடம் கூற வேண்டும்… கூறு…..”

“………………………….”

“சொல் மாலதி… உன்னிடம் தான் கேட்கிறேன்… கூறு….”

சதி அவளிடம் கேட்க, அவளின் வாடிய முகத்தினைப் பார்த்த அந்த பணிப்பெண், அரசவையில் நடந்த உண்மையை சதியிடம் கூற, சதியோ உறைந்து போனாள்…

“என் தந்தையா?... என் தந்தையா?.... இப்படி செய்தது?.....”

அவள் அதிர்ந்து நிற்க,

“ஆம்… தேவி… பிரஜாபதி தான் இவர்களுக்கு இப்படி ஒரு தண்டனையை வழங்கினார்….”

“இதை நீ முன்னமே கூறியிருந்தால், நான் அவர்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் அல்லவா?... ஏன் தாமதமாக கூறினாய்?...”

“இல்லை… தேவி… பிரஜாபதியின் கோபத்தின் விளைவே தாம் இந்த வனம் வர நேர்ந்தது… இதில் இன்னும் அவரது கோபம் அதிகரித்தால்?... நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது தேவி… நாங்கள் தான் இந்த தகவலை தங்களிடத்தில் கூறினோம் என்ற உண்மையை தயவுசெய்து பிரஜாபதியிடம் கூறிவிடாதீர்கள் தேவி… தங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்….”

அவளின் கைகளைப் பிடித்துக்கொண்ட சதி,

“நான் யாரிடமும் எதையும் சொல்லமாட்டேன்… பயப்படாதே….”

தைரியம் அளித்து பேச, அவர்களும் சற்றே ஆசுவாசமடைந்தனர்…

“வாருங்கள் தேவி… நேரமாயிற்று… நாம் மலர் சேகரிக்க வேண்டும்….”

“சரி…” என்றவளின் பார்வை என்னமோ தூரத்தே புள்ளியாய் தெரிந்த சிற்பிகளின் மீதே நிலைத்திருந்தது…

“இனி கவலை இல்லை தேவி… வாருங்கள்…”

“கவலை இல்லையா?... என்ன கூறுகிறாய் நீ?....”

“அவர்கள் செல்வது கயிலாபுரத்திற்கு…. அங்கே அவர்கள் நலமுடன் வாழ்வார்கள் தேவி…”

“என்ன கயிலாயபுரமா?....”

“ஆம் தேவி…”

“அதெப்படி உனக்குத் தெரியும்?....”

“அவர்கள் செல்லும் பாதை கயிலாயபுரத்தினை தான் குறிக்கிறது… மேலும் அவர்களை அங்கே நிராகரிப்போர் யாருமில்லை…”

“எப்படி அவ்வளவு ஊர்ஜிதமாக கூறுகிறாய்?...”

“எல்லாம், மகாதேவரை வைத்து தான்….”

“மகாதேவ்………………..”

சதியின் இதழ்கள் அந்த பெயரை உச்சரித்து முடித்த வேளை, அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த மகாசிவருத்ரதேவனின் இதழ்கள் விரிந்து மலர, அதே நேரம், அவனது இமைகள் மெல்ல பிரிந்தன…

“ஆம்… தேவி… மகாதேவர் தான்…”

“யார் அவர்?...”

“எம்பெருமானின் அம்சம்… கயிலாயபுரத்தின் இளவரசர்……”

அவர்கள் குறிப்பிடும் மகாதேவர் யார் என்று புரிந்ததும், அவளுக்கு அன்றைய நாள் அவனைக் கண்ட நினைவு வர, அவள் மனம் அதில் மூழ்கவிருந்த வேளையே, பிரஜாபதியின் சொற்கள் அவளின் கண் முன்னே வந்தாடியது வேகமாய்…

“இனி அவரை நான் என் கனவிலும் நினையேன்….”

அன்று அரசவையில் பிரஜாபதியின் முன் சொன்ன வார்த்தைகள், இன்று அவள் மனதிலும் எதிரொலிக்க,

“நாம் மலர் சேகரிக்க செல்லலாம்… வாருங்கள்…” என்றவள் தன் நடையை வேகப்படுத்தி முன்னே செல்ல, திடீரென்று நிகழ்ந்த அவளின் மாற்றம், பணிப்பெண்களுக்கு புரியாமல் போக, அவர்களும் விரைந்து அவளைப் பின் தொடர்ந்தனர்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.