அதன் பின்னரே தான் செய்ய இருந்தோம் என்று சதிக்குப் புரிய வர, அவள் அப்படியே அதிர்ந்து நிற்கையில்,
“அவை கூடட்டும்….” என்று முழக்கமிட்டார் பிரஜாபதி….
பிறகு அவையில் அனைவரும் கூடிட,
“இன்று பெரும் அனர்த்தம் நிகழக்காரணம், அந்த சிற்பி… அவனை என் கண் முன்னால் அழைத்து வாருங்கள்… அவனுக்கு நான் மரணத்தை விட கொடிய தண்டனையை வழங்க வேண்டும்….”
“ஆகட்டும் பிரஜாபதியாரே….”
அவரின் பணியாட்கள் பணிவன்போடு வணங்கி அங்கிருந்து செல்ல,
மகளின் மீது பார்வையை செலுத்தியவர்,
“தவறு செய்தவனை விட, தவறு செய்யத் தூண்டியவனுக்கு தண்டனையும் அதிகம் தரப்படவேண்டும்… அதை யாம் அந்த சிற்பிக்கு நிச்சயம் வழங்குவோம்… எனினும், தவறு நிகழக்காரணம் என் மகள் சதி… ஆதலால் அவள் செய்த தவறு இல்லையென்று ஆகிடாது… அவளுக்கும் இந்த அவையில் அதற்கான தண்டனை உண்டு….”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??
படிக்க தவறாதீர்கள்..
பிரஜாபதி கூறியதும், துடித்துப்போனார் பிரசுதி…
என்ன இருந்தாலும் சுமந்து பெற்றவள் அவள் அல்லவா?... அவளுக்குத்தானே வேதனை இருக்கும் அவரை விட….
“கூறுங்கள் தந்தையே… தாங்கள் என்ன தண்டனை அளித்தாலும் நான் ஏற்கிறேன்…”
அவள் பட்டென கூற, அவர் பிரசுதியை பார்த்தார்…
அனைவரும் அவர் என்ன சொல்லுவார், என்ன தண்டனை தருவார் என எதிர்பார்த்திருக்கையில் அவரின் அந்த சில நொடி மௌனம் பிரசுதியை அதிகம் கலங்க வைத்தது தான் உண்மை…
“பிரஜாபதியின் மகளாக இருந்தாலும் தவறு தவறு தான்…. செய்த தவறாக இருப்பின் அது என் மகளாகவே இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிப்பது சாத்தியமன்று…”
“சுவாமி அவள் ஏதோ…..”
இடையிட்டு சொல்ல முயன்ற பிரசுதி அவரின் ஓர் பார்வையில் அப்படியே வாய்மூடிக்கொள்ள,
“தந்தையே… தாம் கூறுங்கள்… பிரஜாபதி தட்சரின் மகள் தமது தந்தையின் ஆணையை ஏற்க காத்திருக்கிறேன்…” என்றாள் சதியும் அந்நேரம் உறுதியுடன்…
{kunena_discuss:1001}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.