(Reading time: 9 - 18 minutes)

12. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

"யு ப்ளடி இடியட்!"-என்று சிவாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் கார்த்திகேயன்.

அதிர்ச்சி நிலைக்குள் ஆட்பட்டவன்,தன் கன்னத்தை பற்றியப்படி தன் தந்தையை அதிர்ச்சியோடு பார்த்தான்.கோபத்தோடு அவன் புஜங்களை பற்றினார் அவர்.

"என்னடா நினைச்சிட்டு இருக்க?கல்யாணம் வேணாம்னு வந்து சொல்ற?உனக்கு எவ்வளவு தைரியம்?அந்தப் பொண்ணு வாழ்க்கைப் பற்றி யோசித்துப் பார்த்தியா??"

"................"

"இந்தக் குடும்பம் எப்படி வாழ்ந்த குடும்பம் தெரியுமா?இந்தக் குடும்ப வாரிசு வாழ்க்கையில விளையாட உனக்கு எப்படி மனசு வந்தது?வெட்கமா இல்லை உனக்கு?ச்சே...!"

"அப்பா!நான் சொல்றதை..."

"ச்சீ வாயை மூடு!ஒரு வார்த்தை பேசினாலும் உன்னை கொன்னுடுவேன்!எப்படிடா?நீ போய் எனக்கு மகனா பிறந்திருக்க?"-அவனால் உண்மையை உடைக்கவும் இயலவில்லை.பழியை ஏற்றுக் கொண்டு மௌனம் சாதித்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"இந்தக் கல்யாணம் நடக்கும்!கீதா தான் என் வீட்டு மருமகள்!எனக்கும் ராகுலுக்குமான நட்பை எதுக்காவும் நான் உடையவிடமாட்டேன்!புரியுதா?"-அவன் கண்ணீரோடு தன் தந்தையை கண்டான்.

"போ!என் கண் முன்னாடி நிற்காதே!"-வாக்கொன்று நல்கிய வினை அவனை உடைய வைத்தது.மௌனமாக தனதறைக்கு சென்றான்.மனம் முழுதும் வலிகள்!!இத்தனை வருடங்களாய் நிழல் படாமல் பாதுகாத்து வைத்த இதயத்தில்,எந்த ஒரு பெண்ணின் பிம்பமும் விழாமல் வைராக்கியத்தோடு கட்டுப்படுத்தப்பட்ட இருதய ராஜ்ஜியத்தில் இன்று அரசியாய் அவள்!!காதல் வேரின் கட்டுப்பாட்டால் அவளுக்கு அடிமையாய் இவன்!!மனதின் சங்கல்பங்களை உடைத்தவள் மனதையும் சேர்த்து உடைத்துவிட்டாள்!!எந்தக் காரணத்தை கூறி விவாஹத்தை தடை செய்வேன்??வேதனையோடு சிந்தனை செய்தான் சிவா.முடியவில்லை...அவளை மறக்க துளியும் மனம் துணியவில்லை!!

"மாமா!"-அவன் மனநிலையை சிறிதும் ஊகிக்காமல் அங்கு புத்துணர்வோடு வந்தாள் ஆராத்யா.

சட்டென தன் முகபாவனையை மாற்ற பெரும் போராட்டத்தை அவன் சந்திக்க வேண்டி இருந்தது.

"ம்...என்ன ஆரா?"

"என்னாச்சு?ஒரு மாதிரி இருக்கீங்க?"

"அது...ஒண்ணுமில்லை..ஆ..லேசா தலைவலி!"

"ம்...தலைவலியா?நியாயப்படி என் அக்காக்கு தான் டென்ஷன்ல தலைவலி வரணும்!"-அவன் துளியும் விரும்பவில்லை..இதுபோன்ற பரிகாரசங்களை அவன் மனம் விரும்ப மறுத்தது.

"சரி...நான் எதுக்கு இங்கே வந்தேன்??ஆ..நாளைக்கு அக்காக்கு நகை வாங்க போறோம்!நீங்களும் வரீங்க!"

"இல்லை நான் வரலைம்மா!"

"வரீங்க!தாத்தா சொல்ல சொன்னார்!"

"இல்லை...எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது!நான்...வரலை!"

"ப்ச்..!வருங்காலத்துல இந்த அனுபவம் யூஸ் ஆகும் மாமா!வாங்க!"

"இல்லை..."

"எதுவும் பேசக்கூடாது!நீங்க வரீங்க!அவ்வளவு தான்!"-என்றவள் அங்கிருந்து பறந்துவிட்டாள்.

அவன் நிலையை என்னவென்று கூறி விளக்க முயற்சிப்பது!!ஆண்களும் பல வகையில் உணர்கிறார்கள் நரகவேதனையை காதலின் வழியில்!!காதலை பொழுதுபோக்காய் எண்ணுபவர்கள் குறித்து கவலைப்பட அவசியமில்லை!!சிலரும் இவ்வுலகில் பிறக்கிறார்கள்,தாய்மையை போற்றவும்,பெண்மையை காக்கவும்!!இதிகாசங்கள் கூறுவது போல் ஆணிலிருந்து உருவானவள் தானே என்னும் அகங்காரத்தை முழுதும் மாற்றி,என்னிலிருந்து உருவானவள் அவள்,அவளுக்கொன்று எனில்,அது எனக்கே வேதனையை நல்கும் என்று அதிகாரமாய் காக்கும் இறைவனின் ஸ்வரூபங்களும் இதே உலகத்தில் வசிப்பது இறைவனின் முரண்பாடாகவும் இருக்கலாம்!!!

காதல் என்பது அழிவை தருவதல்ல!!அங்கீகாரம் அளிப்பது!!நிரந்தரமான அங்கீகாரம்!!ஆண் எனப்படுபவன் உணர்வுகளை மறைக்கும் வித்தையை இறைவனிடம் கற்றுத் தேர்ந்தவன் அவ்வளவு தான்!!தன் உணர்வுகளை எல்லாம் அழித்தொழித்தவன் இல்லை!!பெண்ணின் பேரழுகையை காட்டிலும் ஆணின் துளிக்கண்ணீர் வலிகளும்,காரணங்களும் மிகுந்தவை என்பதில் சந்தேகமில்லை!!!

தலையில் கை வைத்தப்படி அமர்ந்திருந்தான் ருத்ரா.அவனது விழிகள் கலங்கியிருந்தன.ஏதோ,விளக்க இயலாத பாரம் மனதினில் ஆழமாக அழுத்தியது அவனுக்கு!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.