(Reading time: 9 - 18 minutes)

"நான் எதுக்கு சொல்ல வரேன்னே புரிஞ்சிக்க மாட்றீங்களே!"

"?????"-அவன் கேள்வியாய் பார்த்தான்.

"ஐ கெஸ்!நீ செலக்ட் பண்ணி தரப்போற நகைக்காக தான் அக்கா வெயிட்டிங்!"

"என்ன?"

"ம்...பாருங்க!பெரியம்மாக் கிட்டத்தட்ட பாதி நகைக்கடையை காட்டிட்டாங்க!அது எதுவுமே பேசாம கல்லு மாதிரி இருக்கா!"-சிவா நிமிர்ந்துப் பார்த்தான்.

அவள் முகத்தில் உணர்ச்சியே இல்லை.சிலையாய் அமர்ந்திருந்தாள்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"எதுவும் பிடிக்காம இருக்கலாம்!"

"ம்ஹூம்...!நீங்க வாங்க!"-அவன் கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றாள் ஆராத்யா.

"மா!"

"என்னம்மா?"

"நீங்களாம் செலக்ட் பண்ண வேணாம்!அக்காக்கு நகையை மாமாவே செலக்ட் பண்ணட்டும்!"

"ஐயோ...ஆரா!"

"ம்..நீ சொல்றதும் சரிதான்!நீயே பண்ணுப்பா!நானும்,உங்க அம்மாவும் தேடித் தேடி சோர்ந்துட்டோம்!"

"இல்லைம்மா...எனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது!"

"உனக்குப் பிடித்ததை பாருப்பா!"

"இல்லை...கீதா தானே போட்டுக்கப் போறாங்க!அவங்களுக்குப் பிடித்ததையே பார்க்கட்டும்!"-கீதா கருவிழிகளை மட்டும் அசைத்து அவனைப் பார்த்தாள்.

"எங்கே!அவளுக்குத் தான் எதுவும் பிடிக்கலை போலயே!நீயே பாரு..!"

"இல்லை..."

"பாருடா!"-பாரதியும் வழிமொழிய,வேறு உபாயம் இல்லாமல் போனது அவனுக்கு!!

தர்மசங்கடமான நிலைதான்!!நிகழாத திருமணத்திற்கு வரவேற்புகள் ஆயிரம்!!

அவன் இலக்கின்றி தன் கண்களை மேம்போக்காக ஓட விட்டான்.

உண்மையில் அவன் மனம் கூறியது,அவள் மேல் எவ்வித உரிமையும் இல்லாமல் எதன் அடிப்படையில் இதுபோன்று அதிகாரம் செய்கிறாய் என்று!!ஏதோ ஒன்றை தேர்ந்தெடுக்க,தன் விழிகளை ஓடவிட்டவனின் கண்கள் ஒரு ஆபரணத்தில் தங்கின.மனம் என்ன கூறுகிறது!மதி என்ன கூறுகிறது என்றெல்லாம் அவன் கேட்கவில்லை!!உண்மையில் அது அவளுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது அவனுக்கு!!!

மிக அழகான ஆபரணம் அது!!அவளுக்காக உருவாக்கப்பட்டதால் அவ்வாறு இருக்கலாம்!!அவன் அதை தன் கரத்தில் எடுத்தான்.

"வாவ்!இது அக்காவோட ஃப்பேவரட் கலர்!"-வாயைப் பிளந்தாள் ஆராத்யா.

விழிகள் சுறுக்கி சற்றே அதிர்ச்சியோடு அந்த ஆபரணத்தைக் கண்டாள் அவள்.

இது அதே ஆபரணம் அல்லவா???என்றது அவள் மனம்!!!

"வாவ்!கிரேட் சார்!கொஞ்ச நாளுக்கு முன்னாடி மேடம் இதே நகையை தான் செலக்ட் பண்ணாங்க!பட்,அன்னிக்கு ஏதோ அவசரமா கிளம்பிட்டாங்க!நான் தான்,அவங்க வருவாங்கன்னு எடுத்து வைத்தேன்!எப்படி சார் அதே நகையை எடுத்தீங்க?"-ஆச்சரியத்தோடு வினவினார் அந்த ஊழியர்.

தாய்மார்கள் இருவரும் புன்னகைத்துக் கொள்ள,சிவாவின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள்!!

"இதையே பேக் பண்ணிடுங்க!"-என்றார் தீக்ஷா.

"ரியலி மேட் ஃப்பார் ஈச் அதர் கப்புல்!"-என்றவர் அந்நகையை வாங்கினார்.

"மா...மா!"-ராகமாய் இழுத்தாள் ஆராத்யா.

"நா...நான் போய் பில் ஃபே பண்ணிட்டு வரேன்!"

"அட!இது தாய் வீட்டு சீர் பா!"-அவனை இடைமறித்தார் தீக்ஷா.

"தீக்ஷா!இது என் கீதாக்கு என் பையன் கொடுக்கிற கிப்ட்டா இருக்கட்டும்!நீ உன் பொண்ணுக்கு சீர் செய்ய ஆசைப்பட்டா,வேற வாங்கிக் கொடு!"-புன்னகையோடு கூறினார் பாரதி.

"இல்லை பாரதி!"

"ப்ச்..!"-விழிகளால் அவரை தடுத்தவர்,தன் புதல்வனைப் பார்த்து,

"போடா!"என்றார்.அவன் ஒருமுறை கீதாவை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

"அக்கா!யு ஆர் ரியலி லக்கி!"-தன் தமக்கையின் செவியில் கிசுகிசுத்தாள் ஆராத்யா.

ஆதி முதல் அவன் மனதினை காயப்படுத்திவிட்டோமே என்றிருந்தவளுக்கு,மேலும் மனப்பாரம் உச்சத்தை அடைந்தது.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.