(Reading time: 9 - 18 minutes)

"கீதா டாக்டருக்கு மேரேஜ் ஆக போகுது ச்சீப்!நிச்சயம் எல்லாம் முடிஞ்சிடுச்சு!"-எவ்வாறோ அறிந்து மனோ கூறிய கூற்று அவனது உள்ளத்தினை நொறுக்கிப் போனது.

கண்களை மூடியப்படி நாற்காலியில் சாய்ந்தான் அவன்.அவள் போய்விட்டாள்!!இனி அவள் திரும்ப வாய்ப்பில்லை!!அவனறியாமல் அவனது கண்கள் கரைய ஆரம்பித்தன.

வேதனையில் மூழ்கி இருந்த அவனது சிந்தனையை அவன் கைப்பேசி கலைத்தது.சுயநினைவை அடைந்தவன் விழிகள் திறந்துப் பார்த்தான்.தொண்டையை ஒருமுறை செறுமிக்கொண்டு கைப்பேசியை எடுத்து காதில் வைத்தான்.

"ஹலோ!"

"அப்பா!"

"விஷ்வா!என்னப்பா??"

"போர் அடிக்குதுப்பா!நீங்க எப்போ வீட்டுக்கு கிளம்பி வருவீங்க?"

"இதோ கிளம்பி வரேன் கண்ணா!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

"ம்...சீக்கிரம் வாங்கப்பா!நாம வெளியே போகலாம்!"

"ம்..சரி செல்லம்!"-இணைப்பைத் துண்டித்தான் ருத்ரா.அது தற்செயலாகவும் நிகழ்ந்திருக்கலாம்,காரணத்தோடு நிகழ்ந்திருக்கலாம் அவனது கைப்பேசி எவ்வாறோ கீதாவின் புகைப்படத்தை அவன் கண்களில் காட்டியது.இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது அவனுக்கு!!சிலையாய் சில நொடிகள் அப்புகைப்படத்தை நோக்கினான்.

மனம் கனத்தது.

"அவள் வேறொருவனுக்கு உரிமையாகும் சமயம்,இப்புகைப்படம் என்னிடத்தில் என்றும் இருக்காது!"-அவன் செய்த சங்கல்பம் நினைவில் எட்டியது.சில நொடிகள் மௌனம் சாதித்தவன்,அவளது அப்புகைப்படத்தை தன் கைப்பேசியிலிருந்து நிரந்தரமாய் வெளியேற்றினான் ருத்ரா.

"எக்ஸ்யூஸ்மீ சார்!"-அவன் நினைவுகளை தன்பக்கம் ஈர்த்து உள்ளே நுழைந்தாள் பார்வதி.

"ம்???"

"சார்...அது வந்து!நீங்க கேட்ட டாக்குமண்ட் ரெடி சார்!"-என்றாள்.

"லுக்!நான் வீட்டுக்கு கிளம்புறேன்!நீ செக் பண்ணிட்டு வீட்டுக்கு அனுப்பி வை!"

"சார்!"

"சொல்றதை செய்தா போதும்!"-என்றவன் வேறேதும் பேசாமல் வெளியேறினான்.அவன் செல்வதை சில நொடிகள் உற்று நோக்கியவள்,மெல்ல புன்னகைத்தாள்.அதன் பொருள் நிச்சயம் விபரீதமானதாகவும் இருக்கலாம்!!!

"க தந்தாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி!தந்நோ நந்தி பிரசோதயாத்து!"-இறைவனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட தாம்பூல தட்டை,விவாஹ பத்திரிக்கை அடங்கிய தாம்பூலத்தட்டை ஆராதித்துவிட்டு எடுத்து வந்தார் கோவில் புரோகிதர்.

"இந்தாங்க சார்!எல்லாம் நல்லப்படியா முடியும்!"-என்ற ஆசியோடு அதை ராகுலிடம் ஒப்படைத்தார் அவர்.அதை வாங்கி ஒரு மரியாதையோடு கண்களில் ஒற்றியவனின் மனம் இலகுவானது.கண்களில் இருத்துளி கண்ணீர் எட்டிப் பார்த்தன.

"என்னடா?"

"இல்லைடா!நேற்று தான் அவங்க பிறந்த மாதிரி இருக்கு!இன்னிக்கு,கல்யாணமே நடக்கப் போகுது!ரொம்ப சந்தோஷமா இருக்குடா!"-ராகுலின் வார்த்தைகள் கார்த்திகேயனின் மனதில் மிதமிஞ்சிய ஆனந்தத்தையும்,தன் புதல்வனின் கூற்றால் துளி அச்சத்தையும் விளைவித்தன.

"கவலைப்படாதேடா!கீதா என் பொண்ணு!அவளுக்கு எந்த ஒரு கஷ்டமும் வர நான் விட மாட்டேன்!"

"டேய்!அது எனக்கு சிவாவை பார்த்தப் போதே தெரிந்துவிட்டது!"-அந்த வாக்கியத்தில் எல்லையற்ற நம்பிக்கை ஔிர்ந்தது.அவனை இந்நம்பிக்கையை எவ்வாறு உடைக்கப் போகிறான்??

சிந்தித்த நொடியிலே மனதில் திகிலொன்று பரவியது.

ங்கே நகைக்கடையில் சிலையென நின்றிருந்தான் அவன்.மனம் முழுதும் வேதனை!பகிரவும் ஆளில்லை!காயத்தை ஆற்றவும் வழியில்லை.எங்கிருந்தோ போலிப்புன்னகையை கடன் வாங்கிக் கொண்டு தன் கைப்பேசியில் கவனம் பதித்திருந்தான் அவன்.

"மாமா!"

"ம்??"

"என்ன நீங்க?உங்களை கூட்டிட்டு வந்ததே வேஸ்ட் தான் போல!"

"என்னாச்சு?"

"அக்காக்கு நகை செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணுங்க!"

"ஆரா!எனக்கு அதுப்பற்றி ஒரு மண்ணும் தெரியாது!"

"நீங்க உண்மையிலே மக்கு தான் மாமா!"

"................"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.