(Reading time: 10 - 20 minutes)

11. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

னிதன் வாழ்வனைத்தும் ஏதோ ஒன்றை எதிர்நோக்கி போராடுகிறான்.சிலருக்கு கல்விக்குறித்த எதிர்ப்பார்ப்பு!சிலருக்கு கனவுகள் குறித்த எதிர்பார்ப்பு!சிலருக்கு காதலைக்குறித்த எதிர்பார்ப்பு!சிலருக்கு விவாஹத்தைக் குறித்த எதிர்பார்ப்பு!சிலருக்கு இலட்சியம் குறித்த எதிர்பார்ப்பு!இவ்வாறு ஆஸ்தி,அந்தஸ்து,கௌரவம், சுயமரியாதை,வெற்றி,தோல்வி என மனிதனின் எதிர்பார்ப்புகள் மனிதனின் தன்மைக்கேற்ப மாறுப்படுகின்றன.இதில், தவறொன்றுமில்லை.ஆனால், மனிதனின் அந்த எதிர்பார்ப்புகள் யாவும் நிகழ வேண்டும் என்னும் எதிர்பார்ப்பே அவனுக்கு துன்பத்தையும் துயரத்தையும் அளிக்கிறது.இது உண்மைதானே??

பணி முடிய அன்று வெகு தாமதம் ஆனது.தனது கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தாள் பார்வதி.மணி பத்து!!அவள் மிகவும் சோர்ந்திருந்தாள்.உடலளவிலும் சரி!மனதளவிலும் சரி!!

சிறிதும் பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒருவனிடம் எதற்காக பணியாற்றுகிறோம் என்று அவள் மனம் சிந்தித்தது.சுயமரியாதை துறந்து ஆற்றும் இப்பணி அவசியம் தானா??என்று மனம் வினா எழுப்பியது.வேறு உபாயமில்லை...

சில காலம் இதை சகித்து தான் தீர வேண்டும்!!அவளது சூழல் அவ்வாறு!!

மணி இரவு பத்து!தான் எவ்வளவு தாமதமாய் இல்லம் திரும்பினாலும் கேட்பதற்கோ ஆளில்லை.ஆம்...!அவளுக்கு உறவென்று யாருமில்லை.மனம் வலித்தது!!கண்கள் மெல்ல கலக்கம் கொண்டன.இதற்கு மேலும் தாமதிப்பது சரியல்ல என்று தோன்ற,சாலையில் வேகமாக நடந்தாள்.அன்று அவள் போதாத காலமாகவும் இருக்கலாம்!சாலையில் ஒரு ஆட்டோவும் இல்லை.இருள் சற்றே திகிலூட்ட,அவள் மனதில் அச்சரேகை மெல்ல படர்ந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"டேய் அங்கே பாருடா!"-என்ற குரல் வந்த திசையில் நின்றிருந்தவர்கள் நிச்சயம் யோக்கியமானவர்களாக தெரியவில்லை.நின்றிருந்த ஐவர் அவள் செல்லும் பாதையை மறைத்திருந்தனர்.மனம் முழுதும் திகில் பரவியது பார்வதிக்கு!!வேறு வழியாக சென்றால் இல்லம் திரும்ப ஒரு மணி நேரமாவது ஆகலாம்!!சிறிது தயங்கியவள் வேறு உபாயமின்றி திரும்பி நடந்தாள்.

"இரும்மா பாப்பா!என்ன உடனே கிளம்புற?"-செவிகளில் விழுந்த குரலை மதியாமல் அவள் நடக்க,நிழலாய் அவளை பின்தொடர்ந்தனர் அவர்கள்.

"பதில் சொல்லும்மா!"

"என்ன அவசரம்?"-என்றப்படி ஒருவன் அவளது கரத்தை பற்ற பார்வதி தன்னால் முடிந்த பலம் கொண்டு அவனை தள்ளினாள்.

"இதோப் பாருடா!"-என்றவனை தள்ளிவிட்டு வேகமாக ஓடியவளை ஐவரும் துறத்தினர்.எதைக் குறித்தும் சிந்திக்காமல் வேகமாக ஓடியவள் திடீரென்று எதன் மீதோ அல்லது யார் மீதோ மோதினாள்.

சட்டென நிமிர்ந்தவளின் விழிகளுக்கு அச்சமயம் கிட்டிய ஒரே நம்பிக்கையாய் எதிர் நின்றவன் ருத்ரா தான்!!

கலங்கிய அவளது கண்களை நேருக்கு நேராய் சந்தித்தவனின் மனதில் ஒரு குற்றஉணர்வு!!

அவன் அவளது கரத்தைப் பற்றி தன் பின்னால் இருத்தினான்.பாதுகாப்பை நாடிய அக்கன்னிகைக்கு கவசமாய் முன் நின்றான் ருத்ரா.

பார்வதியை துரத்தி வந்த ஐவரும் சற்று தொலைவில் நின்றனர்.அவர்களை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன்,தன் காரிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்தான்.அதை தன் காரின் மீது அவன் வைக்க,அதை கண்டவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

"லேட் நைட் தனியா எதுக்காக வந்த?"-திரும்பாமலே கேட்டான் ருத்ரா.

"வொ...வொர்க் இப்போ தான் சார் முடிந்தது!"-அவள் கூறிய பதிலால் அவன் சற்றே அதிர்ச்சியாக திரும்பினான்.

"வாட்?நான் உன்னை இவ்வளவு நேரம் வொர்க் பண்ண சொன்னேனா??"

"இல்லை சார்..நீங்க குமார் என்டர்பிரைசஸ் ஃப்பைல் நாளைக்கு அனுப்பனும்னு சொன்னீங்களாம்!மேனேஜர் சார் தான் ஹெல்ப் கேட்டார்...அதான் கொஞ்சம்..."

"ஆபிஸ்ல வேற எவனுமே இல்லையாமா??நாளைக்கு இருக்கு!"

"சார்...அவர் அப்போவே கிளம்ப சொன்னாரு!நான் தான்...ஐ ஆம் ஸாரி சார்!நான் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கணும்னு நினைக்கலை!"-அப்பெண்ணின் சமாதானம் ருத்ராவின் கோபத்தை பட்டென நிறுத்தியது.

"வண்டில ஏறு!"

"பரவாயில்லை சார்!வீடு பக்கம் தான் நான்...."-அவள் கூறி முடிப்பதற்குள்ளே,

"வண்டில ஏறு!"-என்று அழுந்த உரைத்தான் அவன்.வேறு உபாயம் புலப்படாமல் காரில் ஏறு அமர்ந்தாள் பார்வதி.

"எந்த இடம்?"

"பாரதி நகர்!"-அவன் உடனடியாக காரை கிளப்பினான்.அங்கு எவ்வித உரையாடலும் நிகழவில்லை.காரின் சப்தமும்,காற்றின் சப்தமும் மட்டுமே தெளிவாய் செவிகளில் உரைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.